வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் பதினொன்று 85

மெல்லிய கண்ணீருடன் சொன்னேன்.

எனக்கு பயம்!

என்ன பயம்? ம்ம்?

உ… உண்மை தெரிஞ்சு என்னை வெறுத்துட்டா?

லூசாடி நீ? என்ற மதன், தாங்க முடியாமல் என்னை அணைத்துக் கொண்டான்.

எல்லாத்தையும் நீயே முடிவு பண்ணிக்குவியா? ஏண்டி இப்டி பண்ற?

அவன் என்னை அணைத்ததும், என் அழுகை அதிகமாகியது. சமயங்களில் காதலில், திட்டுவதை விட, தண்டிப்பதை விட, மன்னிப்பது மிகவும் தாங்க முடியாததாய் இருக்கிறது.

அந்த வருத்தத்தில், அவன் அணைப்பினூடே சொன்னேன்.

எனக்கு இந்த தண்டனை தேவைதான் மதன். நான் அன்னைக்கு ரூமுக்குள்ள வர்லைல்ல? நீ, முதல்ல காதலைச் சொன்னப்ப முடியாதுன்னு சொன்னேன்ல?! அதுக்கு இந்த தண்டனை தேவைதான்!

போடிங்… இது உனக்கு மட்டுமா தண்டனை?! எனக்கும் தான? அப்ப நான் என்னடி தப்பு பண்ணேன்? நீயும், உன் மொக்கை லாஜிக்கும்!

அவனது கோபமான திட்டல், இப்போது மனதுக்கு மிகவும் ஆறுதலாய் இருந்தது!

மன்னிப்பது காயத்தை ஏற்படுத்துவதாகவும், கோபத்தில் திட்டுவது, காயங்களுக்கு மருந்தாய் இருப்பது என்பது பெரிய வேடிக்கைதான்!

சிறிது நேரம் அப்படியே இருந்த பின், அவனிடம் கேட்டேன்!

ம… மதன், என் மேல கோவமில்லையா?

ம்ம்… கொஞ்ச நஞ்ச கோவமில்லை! வெறித்தனமான கோவம் இருக்கு!

எல்லாமே, இத்தனை நாளா, இதைச் சொல்லாம, தனியாவே கஷ்டப்பட்டுருக்கியேன்னுதான். என்ன பண்ணித் தொலையறது? அப்டியே அறையலாம்னு கூடத்தான் தோணுது! மனசு கேக்கமாட்டேங்குதே! என்று சொல்லியவன் இறுக்கி அணைத்துக் கொண்டான். லூசு!

காதலன் திட்டினால் இவ்வளவு சந்தோஷமாக இருக்குமா என்ன? ஆனால், நான், அவனது கோபத்தில் தெறித்த அன்பைக் கண்டு பயங்கர மகிழ்ச்சியடைந்தேன். நானும் அவனை இறுக்கிக் கொண்டேன்.

சாரிடா… என்று அவன் மார்புக்குள் இருந்து சொன்னேன்! பதிலுக்கு மதனோ இன்னும் இறுக்கிக் கொண்டான்.

சிறிது நேரம் கழித்து கேட்டேன். உனக்கு எப்டி வைஷாலிகிட்ட கேக்கனும்னு தோணுச்சு?

ம்… உனக்கா அறிவு வர்ற மாதிரி தெரியலை. அந்த ரெண்டு நாளுக்கப்புறம், எனக்கு மனசு கேக்கலை. நீ வாய் விட்டு சொல்லலைன்னாலும், எப்ப உன்னையே என்கிட்ட கொடுக்க நினைச்சியோ, அப்பியே எனக்கு தெரிஞ்சிடுச்சி.

அதுனால, எப்டி இந்த பிரச்சினை வந்துதுன்னு யோசிக்க ஆரம்பிச்சேன்.

உன்னை, உங்க வீட்ல ஏமாத்த நினைச்சப்ப, நீ என்கிட்டயோ இல்ல, அக்காகிட்டயோ கூட ஹெல்ப் கேக்காம இருந்திருக்க மாட்டியேன்னு யோசிக்க ஆரம்பிச்சேன். அதுனால அக்காகிட்ட பேசுனேன்!

அவ சொன்னாளா? அவளை எதுவும் சொல்லாதேன்னு சொன்னேனே?

அறைஞ்சேன்னா? நீயும் சொல்ல மாட்ட, சொல்ல வர்றவங்களையும் தடுத்துடுவ? அப்புறம், நான் என்னதாண்டி பண்றது?

நான் அவகிட்ட கேட்டது ஒண்ணுதான், நீ, அந்த பிரச்சினை சமயத்துல, என்கிட்ட ஹெல்ப்புக்காக வந்தியா இல்லையா, ஜஸ்ட் யெஸ் ஆர் நோ மட்டும் சொல்லுன்னு கேட்டேன்.

அவ யெஸ்னு சொன்னா.