வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் பதினொன்று 85

அவளது செய்கையில் ஆச்சரியப்பட்டாலும், பதில் சொன்னாள். அதான் லஞ்ச்சுக்கு…

அதில்லை, நீங்க, என்னை என்னான்னு கூப்ட்டீங்க?

சரண்யான்னு. அதானே உங்க பேரு?

இ… இல்லை என் பேரு லாவண்யா!

ஓ… அப்டியா? நான் உங்க பேரை சரண்யான்னுதான் நினைச்சிட்டிருக்கேன். உங்க முகம் மனசுல பதிஞ்சிடுச்சா, அதுனால, பேரும் மறக்கலை. ஃபோன்ல கேட்டப்ப, ஏதோ ஃபால்ட்டுன்னு நினைக்கிறேன்.

அப்பொழுதும் வைஷாலிக்கு, அது பெரிய விஷயமாய் தெரியவில்லை!

லாவண்யா, வைஷாலியை பரிதவிப்புடன் கேட்டாள்.

நீ… நீங்க, மதன்கிட்ட அன்னிக்கு சொன்னப்ப சரண்யா கால் பண்ணியிருக்காங்க, சரண்யா பாக்க வந்திருக்காங்கன்னு தான் சொன்னீங்களா?

லாவண்யாவின் குரலும், கேள்வியும், வைஷாலிக்கும் எதையோ உணர்த்தியது. யோசித்தவள் தயங்கியவாறே சொன்னாள். வைஷாலியின் குரல் கம்மியிருந்தது.

நான் ஒரு தடவையோ, ரெண்டு தடவையோதான், சரண்யான்னு உங்க பேரைச் சொன்னேன். மீதி டைம், மோஸ்ட்லி, நேத்து கால் பண்ணவிங்க அப்படின்னுத்தான் ரெஃபர் பண்ணேன்.

அவளது பதிலைக் கேட்டவுடன் நடந்தது என்ன என்று லாவண்யாவிற்கு முழுதும் புரிந்தது. அந்த அதிர்ச்சியான செய்தியைக் கேட்டவள், அப்படியே நெற்றியில் கை வைத்து, ஓய்ந்து போய் அமர்ந்தாள்.

லாவண்யாவின் செய்கை வைஷாலிக்கு தெளிவாக உணர்த்தியது. தான் பெயரை மாற்றிச் சொன்னதால்தான், பாஸ் அப்படி ரியாக்ட் செய்திருக்கிறார் என்று. வைஷாலிக்கு வருத்தம், பயம், குழப்பம் எல்லாம் ஒரே சமயத்தில் தோன்றியது.

அன்னிக்கு திட்டினவங்களுக்கு இன்னிக்கு பாஸ் வேலையைக் கொடுத்திருக்கார்ன்னா, இவங்களுக்கு நல்லா தெரிஞ்சிருக்குன்னுதானே அர்த்தம். நான் பேரை தப்பா சொன்னதுதான் காரணமா? என்று யோசித்தாள் வைஷாலி.

சர… லாவண்யா, என்று அவளைத் தொட்டாள்.

நான் பேர் மாத்திச் சொன்னதுதான் பிரச்சினையா? ரொம்பப் பெரிய தப்பா? சாரி, லாவண்யா, நான் வேணும்னு எதையும் பண்ணலை. ரியல்லி சாரி.

இ.. இட்ஸ் ஓகே வைஷாலி. தெரியாம நடந்ததுக்கு, நீங்க என்ன பண்ணுவீங்க? எனக்கு இப்பதான் சில குழப்பங்கள் போச்சு. எனி வே, விடுங்க பாத்துக்கலாம்.

இருந்தாலும் மனசு கேளாத வைஷாலி, நான் வேணா பாஸ்கிட்ட போயி சொல்லிட்டு வரட்டா என்று கிளம்பினாள்.

அவளைத் தடுத்த லாவண்யா, அவளிடம் கேட்டாள்.

உங்களுக்கு இந்த வேலை வேணாமா வைஷாலி?

எ… என்னச் சொல்றீங்க லாவண்யா?

இப்ப நீங்க போய் சொன்னீங்கன்னா, மதன் கோபத்துல, வேலையை விட்டே தூக்குனாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை. அதுனால நீங்களா போய் சொல்லாதீங்க.

ஒரு வேளை என்னிக்காவது மதனா வந்து கேட்டா, அன்னிக்கு உண்மையைச் சொல்லுங்க. அப்பக் கோபப்பட்டு ஏன் என்கிட்ட சொல்லலைன்னு கேட்டாலும், நாந்தான் அப்படி நடந்துக்கச் சொன்னேன்னு சொல்லுங்க. அவன் விட்டுடுவான்.

லா… லாவண்யா!

இது நீங்க தெரியாம செஞ்ச தப்புன்னாலும், இதோட இம்பாக்ட் உங்களுக்கு தெரியாது வைஷாலி. நான் மதன்கிட்ட பேசிக்கிறேன். மதன் கேட்டா மட்டும், நீங்க என் பேரை யூஸ் பண்ணுங்க என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.

மதன் என்று கூப்பிட்ட முறையும் சரி, அவ்வப்போது அவன் இவன் என்றதும் சரி, அவளுடைய தன்னம்பிக்கையும் சரி, எல்லாமே, வைஷாலிக்கு, லாவண்யாவின் பவர் என்ன என்று சொல்லியது.

தவிர, அதன் பின் பல நேரங்களில், லாவண்யா மதனை எதிர் கொள்ளும் விதமும், மதன், லாவண்யா மேல் காட்டும் தனிப்பட்ட அக்கறையும், அவர்களுக்கிடையேயான உறவை இவளுக்கு தெளிவாகக் காட்டியது.