வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் பதினொன்று 85

அவன் லவ்வை பற்றிச் சொன்னதும் திடீரென்று தோன்றக் கேட்டேன்…

ம… மதன்!

ம்?

எப்ப, உனக்கு என் மேல லவ் வந்துச்சு?!

பதில் சொல்லாமல் முறைத்தான்…

ஏய்.. சொல்லேன்!

அடியேய்… லவ்வைச் சொன்னப்ப முடியாதுன்னுட்டு, இப்ப வந்து கேக்குறியா?

ஏய்… ப்ளீஸ் சொல்லேன்… ப்ளீஸ் டா! உன் வாயால கேட்கனும்னு எனக்கு எவ்ளோ நாள் ஆசை தெரியுமா?

அவன் சொல்லத் தொடங்கினான்.

எப்பன்னுல்லம் சரியா தெரியாது. ஃபர்ஸ்ட் டைம் உன்னைத் தப்பா புரிஞ்சிகிட்டு பேசுனப்ப, கண் கலங்குன பாத்தியா?! அப்பியே நான் ஃப்ளாட் ஆயிட்டேன்.

அப்புறம் என்னை எதுத்து பேசுனப்ப, நான் மறுபடி ஃப்ளாட். ஆனா, எந்த இடத்துலியும் நீ திமிரைக் காமிச்சதேயில்லை! அக்காவும், தாத்தாவும் என்கிட்ட பாசமா இருந்தாங்கன்னா, இயல்பா நீ இருந்தது, எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.

கடைசியா, நாங்க எல்லாம் மிஸ் பண்ணாலும், என் அப்பாவும், சித்தியும் என்னை ஏமாத்துனதை சொன்ன பாத்தியா? அந்த புத்திசாலித்தனம், எனக்காக நீ யோசிச்சதுன்னு, எல்லாமா சேந்து ஒட்டு மொத்தமா ஃப்ளாட் ஆயிட்டேன்…

ஆரம்பத்திலிருந்தே என் மேல் காதலாய் இருந்திருக்கும் இவனைத்தான் நான் மிகவும் கஷ்டப்படுத்தியிருக்கிறேன் என்று எனக்கு, என் மேலேயே கோபம் வந்தது!

நா… நான், லவ் ரிஜெக்ட் பண்ணது கஷ்டமா இருந்துச்சா?! நான் ரொம்ப ஃபீல் பண்ணி கேட்டேன்!

ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு! இவ என்ன பெரிய இவளான்னு கொஞ்சம் கோவம் கூட வந்துச்சு!

அப்புறம் யோசிக்க யோசிக்கதான் எனக்கு தெளிவாச்சு! உன் ஃபிரண்டுகிட்ட கூட, நான் லவ்வைச் சொன்னதைச் சொல்லாம, என்னை விட்டுக் கொடுக்காம இருந்தப்ப எனக்கு தெளிவாச்சு!

நீ ஆரம்பத்துல இருந்து செஞ்சதெல்லாம் ஒரு லவ்வருக்காகச் செஞ்சிருந்தா, அது சாதாரண விஷயந்தான்! ஆனா, லவ்வரா இல்லாம, எந்த உறவுலியும் இல்லாத ஒருத்தனை சரியா புரிஞ்சி, அவன் நல்லதுக்காக நீ இதைச் செஞ்சேன்னா, அதுக்கு எவ்ளோ பெரிய மனசு வேணும்? உன் மனசு எவ்ளோ சுத்தம்னு புரிஞ்சிது!

அந்த நிமிஷம் முடிவு பண்ணேன்! உன்னோடத்தான் என் வாழ்க்கைன்னு! சின்ன வயசுன்னு சொல்லிட்டு போனியே தவிர, என் மேல லவ் இல்லைன்னு சொல்லலியே? அதுனால விட்டுப் பிடிக்கலாம்னு நினைச்சேன். தவிர, நீ சொன்ன மாதிரி அந்த வயசு ரொம்பச் சின்ன வயசுதானேன்னு புரிஞ்சிது!

கொஞ்சம் மெதுவா உன்கிட்ட என்னை புரிய வைக்கலாம்னு பாத்தா, அம்மணி, லவ்வே வேணாம்னு சொன்ன அடுத்தா நாள்ல இருந்து, என்னை சைட் அடிக்கிறதென்ன?! உரிமையா அதைச் செய், இதைச் செய்னு சொல்றதென்ன?! அப்பப்பா… அப்பியே எனக்கு சந்தோஷம்! என்னிக்குன்னு தெரியாட்டியும், நம்ம வாழ்க்கை ஒண்ணாதான் இருக்கப் போகுதுன்னு என் மனசுல ஒரு பயங்கரமான நம்பிக்கை வந்துடுச்சு!

அந்த என்னிக்குங்கிறது, இன்னிக்குன்னு இப்பதான் புரியுது!

சொன்னவனையே இமைக்காமல் பார்த்தேன். என் மனதிற்குள் பொங்கிய காதல் வெள்ளத்தில், அவனை இழுத்தவள், முகமெங்கும் ஆவேசமாய் முத்தமிட்டவள், அவன் உதடுகளில் அழுந்த முத்தமிட்டேன்!

என்னுடைய ஆவேசத்தில் தெறித்தக் காதலைப் புரிந்து கொண்டவன், பதிலுக்கு முத்தமிட்ட படியே, என் தலையை தடவிக் கொடுத்து என்னை ஆசுவாசப்படுத்தினான்.

சிறிது நேரம் நீடித்த முத்தத்தின் முடிவில், மிகவும் ஆவேசமாய் முத்தமிட்டிருந்ததால், என் மூச்சு வாங்கியது! எனக்கே வெட்கமாய் இருந்தது! அதை மறைக்க, மீண்டும் சரசமாய் அவனைத் தூண்டுமாறு, கேட்டேன்!

அவ்ளோ லவ்வை வெச்சுகிட்டுதான், அந்த ரமேஷ்கிட்ட போயி, அவ உன்னை லவ் பண்ணா தள்ளி நின்னுக்குறேன்னு சொன்னியாடா? அவ்ளோதான் உன் லவ்வா? என்னை விட்டு தள்ளி நின்னுடிவியாடா?

ஹப்பா… என்னாக் கோவம் வருது உனக்கு? நீதான் கண்ணாலியே காதலைச் சொல்லிட்டு இருந்தியே?! அப்புறம் எனக்கென்ன கவலை?! நீ அவளை லவ் பண்ணாத்தானே கவலை?