வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் பதினொன்று 85

மனசு தாங்காமல், வைஷாலியே, என்னால, உங்களுக்குள்ள ஒரு பெரிய பிரிவு வந்திருச்சே. என்னை மன்னிச்சிருப்பா என்று புலம்பியிருந்திருக்கிறாள்.

லாவண்யாவோ, அவளை சமாதானப்படுத்தியிருக்கிறாள்.

யார் என்ன சொல்லியிருந்தாலும், அன்று, தான் அவனது அறைக்குள் சென்றிருந்தால், இந்தக் குழப்பமே இருந்திருக்காது. அவள் மேலும் தப்பு இருக்கையில், ஏற்கனவே வருத்தப்படுபவளை மீண்டும் வருத்த விரும்பவில்லை லாவண்யா! யாரென்ரு தெரியாதா போதே, மனமிரங்கி, பல முறை இவளுக்காக மதனிடம் பேசி திட்டு வாங்கியவளாயிற்றே!

அந்த வகையில், லாவண்யாவிற்க்கு இன்னொரு நல்ல நட்பு கிடைத்தது.

வைஷாலியிடம் பேசிவிட்டு வந்த அன்றுதான், லாவண்யா, மதியம் மிகவும் அப்செட்டாகக் காணப்பட்டிருக்கிறாள். மதனிடம் ஹாஃப் டே லீவ் எடுத்து விட்டுச் சென்றிருக்கிறாள்.

ஆரம்பத்தில் கடும் வருத்தத்தில் இருந்தவளுக்கு, பின் யோசிக்க யோசிக்க ஒன்று புரிந்தது. அது,

இது வருத்தப்பட வேண்டிய தருணமல்ல, உண்மையில் மிகவும் சந்தோஷப்பட வேண்டிய நேரம்!

தன்னுடைய உயிர்த் தோழி, இன்னமும் அதே அன்புடன் இருக்கிறாள் என்ற உண்மை!

இப்பொழுது கூடுதலாக, ஹாரீசின் மூலம் கிடைத்திருக்கும் அண்ணன் என்ற உறவு!

வைஷாலியின் நட்பு!

எல்லாவற்றுக்கும் மேலாக, தன் காதலன், என் மன்மதன் எந்தத் தருணத்திலும் என் மேலான காதலை நிறுத்தவில்லை!

இது எவ்வளவு பெரிய சந்தோஷம்? இதற்காக நான் பூரித்துதான் நிற்க வேண்டும்!

மனதில் ஏற்பட்ட தெளிவு, அடுத்த நாளிலிருந்து அவளை பழைய லாவண்யாவாக மாற்றியிருந்தது.

ஒரு வகையில் நடந்த நிகழ்வுகளை, மதனுடைய காதலை சரியான சமயத்தில் ஏற்காத தன்னுடைய முட்டாள்தனத்திற்கு, மனதிற்கு வேண்டியவற்களைப் பற்றி யோசிக்காமல், குறைகள் மட்டுமே சொல்லும் சமுதாயத்தைப் பற்றி நினைத்ததற்க்கான தண்டனை என்றே நினைத்தாள்.

அதற்குப் பின்பு அவளை வருத்திய ஒரே விஷயம், இதை எப்படி மதனுக்குச் சொல்வது, சொன்ன பின் அவனுடைய கோபத்தை எப்படி எதிர்கொள்ளுவது என்பது மட்டும்தான்!

அந்தச் சூழ்நிலையில்தான் இப்போது லாவண்யா இருக்கிறாள்!

நீ ஏண்டி அன்னைக்கு ரூமுக்குள்ள வரலை? உண்மை தெரிஞ்சும் இத்தனை நாளா, ஏன் என்கிட்ட பேசலை?

எல்லாவற்றுக்கும் நான் அமைதியாகவே இருந்ததில் கடும் கோபமடைந்தவன், என்ன நெருங்கி, என் தோள்களை அழுத்தமாக பிடித்து உலுக்கினான்.

சொல்லு! இத்தனை நாள் ஏன் என்கிட்ட பேசலை? ம்ம்?