வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் பதினொன்று 85

கல்யாணமே பண்ணிக்காடியும் பரவாயில்லையா? அப்ப, ஊருக்காக வேற ஒருத்தியை கல்யாணம் பண்ணிகிட்டு, உன்கிட்ட வந்தாலும் உனக்கு ஓகேயா?

நீ யாரைக் கல்யாணம் பண்ணிகிட்டாலும் எனக்கு கவலையில்லை. ஆனா, என்னைப் பொறுத்த வரை, நான் உனக்கு மட்டும்தான் சொந்தம்…… அதுதான் நான் என் தப்புக்கு செய்யுற பிராயிச்சித்தம்!

—————-

அப்படின்னு சினிமா டயலாக், பேசுவேன்னு நினைச்சியா? கொன்னுடுவேன் கொன்னு.

என் வாழ்க்கைல மட்டுமில்லை, உன் வாழ்க்கைலியும், இனி நான் மட்டுந்தான்.

அந்த வாழ்க்கையை, நீ கல்யாணம் பண்ணிட்டு வாழ்ந்தாலும் சரி, இல்லை பண்ணாம வாழ்ந்தாலும் சரி, எனக்கு கவலையில்லை. என் வாழ்க்கை உன்னோடத்தான். அதுக்கு இந்த சமூகம் என்ன பேரு வெச்சாலும் எனக்கு அதைப் பத்தி கவலையில்லை.

ஆனா, உனக்கு நான் மட்டும்தான். எனக்கும் நீ மட்டும்தான்! அப்பிடியிப்படி, இன்னொரு பொண்ணு பக்கம், பாக்கனும்னு நினைச்சாக் கூட, மவனே அடி பின்னுடுவேன். புரியுதா? உன்னை மட்டுமில்லை, அந்தப் பொண்ணையும் சேத்து!

நான் என்ன பேசினாலும், அவனது புன்னகை மட்டும் மாறவேயில்லை!

அப்புறம் என்னாத்துக்குடி, இன்னொருத்தன் கட்டுன தாலியை இன்னும் கட்டிட்டு இருக்க?

உனக்கு உறுத்தனும்னுதான்… உன் தாலி இருக்க வேண்டிய இடத்துல, எவனோ கட்டுன தாலி இருக்கேன்னு, உனக்கு உறுத்த வேணாம். அது எப்டி இன்னொருத்தன் கட்டலாம்னு, உனக்கு கோவம் வரவேணாம்? அந்தத் தாலி, ஏன் இன்னும் அங்க இருக்குன்னு, வெறி வரவேணாம்? அதுக்குதான் உன் கண் முன்னாடி போட்டிருக்கேன்?

என் பதிலில் சற்றே சீற்றமடைந்தவன், அதே ஆவேசத்துடன் கேட்டான்.

சரி… அன்னிக்கு நைட்டே நான் கோவப்பட்டேன்ல? கழட்டி எறிய வேணாம்? எடுத்து பத்திரமா வைக்கிற? அடுத்த நாளும், அதை கட்டியிருந்த? ம்ம்ம்?

அவன் சீற்றத்தைச் சட்டை செய்யாமல் நானும் கொஞ்சம் வேகமாகச் சொன்னேன்.

கோவப்பட்டியா? கோவப்பட்டு என்ன பண்ண? என் கழுத்துல, இன்னொருத்தன் தாலி இருக்குன்னு தெரிஞ்சவுடனே, நீயா கழட்டி எறிய வேணாம்? என்கிட்ட கேள்வி கேட்டுட்டு நிக்குற?!

நீ, என் கழுத்துல தாலி கட்டுறியா இல்லையான்னு, எப்ப வேணா முடிவு பண்ணிக்கோ! ஆனா, இப்பவே, உன் கையால, இந்தத் தாலியை கழட்டி எறி! எவனோ கட்டுன தாலியை, உன் கையால கழட்டி தூக்கி எறியனும்னுதான், இத்தனை நாள் வெயிட் பண்ணேன்!

என்னையே பார்த்தவன், என் கழுத்திலிருந்த தாலியைக் கழட்டினான். பின், தூக்கி எங்கோ எறிந்தான். அது எங்கே சென்று விழுந்தது என்று கூட இருவரும் கவலைப்படவில்லை. அதே வேகத்தோடு, என்னை இழுத்து அணைத்தான்.

அவனுக்கு இணையான சந்தோஷத்தோடு நானும் அவனை இறுக்கிக் கொண்டாலும், வேண்டுமென்றே செல்லமாக அவனை அடித்துக் கொண்டே சொன்னேன்.

இதைச் செய்ய, உனக்கு இத்தனை நாளாடா??? ம்ம்ம்? ராஸ்கல்! சின்னப் பையன்கிறது சரியாத்தான் இருக்கு! எல்லாம் சொல்லிக் கொடுக்கனுமா?

ஹா ஹா ஹா!

ஏண்டா சிரிக்கிற?