வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் பதினொன்று 85

என்னால எத்தனை குழப்பத்தைத்தான் தாங்க முடியும்? ஆனா, அதுக்குள்ள, என்னென்னமோ நடந்துடுச்சி என்று புலம்பியிருக்கிறாள்.

அவன் அக்காவோ, நீ என்ன சொன்னாலும், கண்டிப்பா இதுல ஏதோ குழப்பம் இருக்கு! முன்னன்னா கூட, நீ என்கூட வான்னு சொல்லியிருந்திருப்பேன். ஆனா, இப்ப, அதுவும் மதன் மேல இப்படி ஒரு குற்றச்சாட்டு இருக்குறப்ப, நான் உன்னைக் கூட்டிட்டு போக விரும்பலை. அதை முதல்ல க்ளாரிஃபை பண்ணு! வேணும்ன்னா சொல்லு, நான் இதைப் பத்தி அவன்கிட்ட கேக்குறேன்.

இல்லடி! இது, எங்க ரெண்டு பேர் சம்பந்தப்பட்ட விஷயம். அன்னிக்கு, நானா அவன் ரூமுக்குள்ள போகாதது, என் தப்புதான். அதுனால, நானே அவன்கிட்ட நேரா பேசிக்கிறேன்.

சொன்ன லாவண்யாவை இமைக்காமல் பார்த்தாள், மதனின் அக்கா!

எ… என்னடி?

அவனும், இதையேதாண்டி சொன்னான். இந்த விஷயத்தை அவனே பாத்துக்குறேன்னு. நீயும் அதான் சொல்ற! இப்படி, பல விஷயங்கள்ல, நீங்க ரெண்டு பேரும் செம மேட்சுடி!

நான் அவனைப் பத்தி புரிஞ்சிக்காத விஷயங்கள் சிலதைக் கூட, நீ நல்லா புரிஞ்சிக்கிற! இனிமேனாச்சும், உங்க வாழ்க்கை நல்லா அமைஞ்சா போதும் என்று ஃபீல் பண்ணியிருந்திருக்கிறாள்.

அதன் பின், லாவண்யா செக்ரட்டரியாக வேலைக்கு வந்திருக்கிறாள். இரண்டாம் நாளே, இந்தப் பெயர் குழப்பம்தான், எல்லாப் பிரச்சினைக்கும் காரணம் என்று தெரிந்து கொண்டாள். அதுவும், அதே பழைய செக்ரட்டரி மூலமாக.

லாவண்யா முதல் நாள் வந்த பொழுது, பழைய செக்ரட்டரி லீவ். இரண்டாம் நாளும், கொஞ்சம் தாமதமாக வந்தவள், பின், லாவண்யாவை சந்தித்திருக்கிறாள்.

வைஷாலி மேடம், இவங்களை பாஸ் புது செக்ரட்டரியா அப்பாயிண்ட் பண்ணியிருக்கிறார். உங்களை ட்ரெய்னிங் கொடுக்கச் சொன்னார். நீங்க பாத்துக்கோங்க. பை. என்று கூட்டி வந்த ஆள் சொன்னார்.

லாவண்யாவைப் பார்த்தவுடன் பழைய செக்ரட்டரி உடனே அடையாளம் கண்டுகொண்டாள்.

ஹல்லோ சரண்யா… எப்டி இருக்கீங்க? இட்ஸ் அ சர்ப்ரைஸ். ஐ யம் ரியல்லி ஹேப்பி. அன்னிக்கு உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியலைன்னு எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சி. சாரி! வெரி சாரி!

ஆக்சுவலி, பாஸ் கூட அந்தளவு கடுமையா யாரையும் பேசினதில்லை. இன்ஃபாக்ட், அவரு ஏன் அன்னிக்கு ஏன் அப்படி பேசினாருன்னு எனக்கே குழப்பமாயிடுச்சி. அந்தளவு நல்லவரு. சிரிக்க மாட்டாரே தவிர, ரொம்ப நல்ல டைப்.

எனி ஹவ், வெல்கம் ஆன் போர்ட். நீங்கதான் செக்ரட்டரிங்கிறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்!

பட படவென்று பேசிய, ஏறக்குறைய தன்னை விட 5 வயது கூட இருக்கிற வைஷாலியை, லாவண்யாவிற்கும் பிடித்து விட்டது. அவள் பேசியதில், ஆரம்பத்தில் அவள் சரண்யா என்று கூப்பிட்டதைக் கூட கவனிக்கவில்லை லாவண்யா!

அப்புறம், ஜாப் விஷயமாத்தான் அன்னிக்கு சாரை பாக்க ட்ரை பண்ணீங்களா? எனி வே, இப்ப அந்த ஜாப் உங்களுக்கு கிடைச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்! எந்த டவுட், என்ன சப்போர்ட்ன்னாலும் என்கிட்ட தயங்காம கேளுங்க. ஓகே!

இப்படியே சிறிது நேரம் பேசிக்கொண்டு இருக்கும் போது, லாவண்யாவிற்கு வைஷாலியை இன்னும் நன்றாகப் பிடித்து விட்டது. இயல்பில் வைஷாலியும் மிக நல்லவளே.

லாவண்யா கிளம்பும் போது, வைஷாலி மீண்டும் அவள் பெயரைச் சொன்னபோதுதான் லாவண்யா கவனித்தாள்.

ஓகே, சரண்யா, மதியம் லஞ்ச்க்கு என்ன பன்றதுன்னு யோசிக்காதீங்க. இன்னிக்கு என் ட்ரீட். நானே உங்க கேபினுக்கு வர்றேன். ஓகே?! பை சரண்யா?

சடாரென்று திரும்பினாள் லாவண்யா! நீங்க, இப்ப எ… என்னச் சொன்னீங்க?