விடியற்காலை கண்ட கனவு பலிக்கும் 58

அதிகாலை பொழுது சூரியன் அடிவானத்தில் இருந்து உதிக்க தயாராக தொடங்கியது.சேவல்கள் கூவ தயாரானது.எங்கும் பச்சை பசலனே வயல் வெளிகளில் விளைந்து நிற்கும் கதிர்களும் உயர்ந்த பனை மரங்களும் ஒடும் வற்றாத நதிகளும் கொண்ட அந்த அழகான கிராமத்தில் ஒரு பெரிய வீட்டில் இருக்கும் அனைவரும் இன்னும் உறங்கிக்கொண்டிருந்தார்கள்.இந்த பெரிய வீட்டில் உள்ளவர்கள் தான் இந்த கிராமத்தில் பெரிய ஆட்கள் பரம்பரை பரம்பரையாக இந்த கிராமம் அவர்களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.அவர்களை கேட்காமல் இந்த கிராமத்தில் யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள் அப்படி ஒரு மதிப்பு இந்த பெரிய வீட்டில் மேல்.

இந்த பெரிய வீட்டில் இப்போது யார் யார் இருக்கிறார்கள் என்று பார்ப்போம்.
கபிலன் (வயது 18) கபிலனின் அம்மா சத்யகலா (வயது 34) கபிலனின் பாட்டி கோமளவல்லி ( வயது 54 ) கபிலனின் பெரியம்மா பாண்டிமீனாள் (வயது 38) கபிலனின் சித்தி தமயந்தி (வயது 32) கபிலனின் அத்தை தங்கம்( வயது 32) கபிலனின் அக்கா கயல்விழி ( வயது 22 பாண்டிமீனாள் மகள்) கபிலனின் தங்கை மலர்விழி (வயது 16 தமயந்தி மகள்) கபிலனின் முறை பெண் தேன்மொழி (வயது 16 தங்கத்தின் மகள்)
என்னடா குடும்ப தலைவர்கள் யாரும் இல்லையா என்றால்? ஆம் அவர்கள் யாரும் இப்போது உயிரோடு இல்லை

.பெரிய வீட்டில் கோமளவல்லி பாட்டி சொல்படி தான் எல்லோரும் கேட்டு நடப்பார்கள்.கோமளவல்லி பாட்டியின் கணவர் அவர் மகள் தங்கம் பிறந்த இரண்டு வருடங்களில் திடிரென தோப்பில் இறந்து கிடந்தார்.

என்ன ஏதென்று புரிவதற்குள் அவரை ஊர் வழக்கப்படி அடக்கம் செய்தனர்.கோமளவல்லி பாட்டிக்கு மூன்று மகன்கள் ஒரு மகள் இவர்கள் நால்வரையும் பாட்டி ஒத்த ஆளாக இருந்து வளர்த்தால் அவர்களின் சொத்துக்களையும் கட்டி காத்து வந்தார்.

கோமளவல்லி பெரியவனுக்கு கல்யாண வயது வந்ததும் தூரத்து சொந்தத்தில் இருந்து பாண்டி மீனாளை அவன் மகனுக்கு கட்டி வைத்தால்.கல்யாணம் முடிந்த பதினொரு மாதத்தில் கயல்விழி பிறந்தால் பெரிய வீடே லட்சுமி பிறந்ததை போல் ஆனந்த பட்டார்கள்.

அடுத்த இரண்டு வருசத்துல நடு மகனுக்கு தன் அண்ணனின் பெண்ணான சத்யகலாவை திருமண செய்தார்கள்.

சத்யகலா இந்த வீட்டில் அடியெடுத்து வைத்த நான்கு மாதத்தில் உண்டானால், ஆனால் கரு கலைந்தது.அடுத்த சில மாதங்களில் அவள் மீண்டும் கருவுற்றால்.வீடே சந்தோஷமாக இருந்தது.

நிரை மாத கர்ப்பமாக இருந்த போது தான் அந்த துயரம் அந்த வீட்டில் நடந்தது.வயலில் வேலை பார்த்து கொண்டிருந்த கோமளவல்லியின் பெரிய மகனும் நடு மகனும் பாம்பு கடித்து இறந்தனர். அதாவது பாண்டிமீனாள் கணவனும் சத்யகலா கணவனும் இறந்த செய்தி பெரிய வீட்டுக்கு வந்தது.எல்லோரும் அலறி அடித்து கொண்டு வயலுக்கு ஓடினர்.

அங்கே அவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர் கோமளவல்லியோ தன் இரண்டு மகன்களை பரி கொடுத்த வேதைனையில் என்ன செய்வது என்று தெரியாமல் அழுதார்.பாண்டிமீனாள் மற்றும் சத்யகலாவும் தங்கள் வாழ்க்கை கணவனை பறிகொடுத்து அனாதை ஆகி விட்டோமே என்று கதறினர்.

கோமளவல்லி மகன்களின் இறுதி சடங்குகள் நடந்து கொண்டிருந்த போது தான் சத்யகலாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.சத்யகலாவுக்கு மருத்துவச்சி வந்து பிரசவம் பார்த்த வேளையில் மாயனத்தில் அண்ணன் தம்பியின் இறுதி சடங்கு நடந்தது.

சத்யகலாவின் கணவனை குழிக்குள் புதைக்க இங்கு சத்யகலா அழகான ஆண் குழந்தையை பெற்றுடுத்தாள்.பெத்த புள்ளையை பார்க்க குடுப்பினை இல்லாமல் அல்ப ஆயிலில் போய் விட்டானே சத்யாவின் புருஷன் என அந்த ஊரே சத்யாக்குக்காவும் பெரிய வீட்டுக்கு இப்படி ஒரு நிலமையா என்று வருத்தப்பட்டது.

பெரிய வீடும் தான், குடும்பத்திற்கு அதுவும் பெரிய வீட்டுக்கு ஒரு ஆண் வாரிசு வந்ததற்கு சந்தோஷ படுவதா இல்லை இரண்டு உயிர்கள் போனதே என்று வருத்தப்படுவதா என்று கலங்கி நின்றனர்.

“பெரிய வீட்டில் பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்கும் சம்பவம் சிம்பிளாக முடிந்தது.”

“குழந்தைக்கு கபிலன் என‌ பெயர் சூட்டப்பட்டது”. மாதங்கள் ஒடியது பெரிய வீடும் பழைய நிலைக்கு வந்துக்கொண்டே இருக்க பக்கத்து ஊரில் இருந்து தங்கத்தை பெண் கேட்டு வந்தனர்.

பெரிய வீட்டுல் உள்ளவர்களுக்கும் பிடித்து விட மாப்பிள்ளை பேசி முடித்தனர்.மாப்பிளைக்கு தங்கை இருந்ததால் பெண் குடுத்து பெண் எடுக்க விருப்பபட்டனர் மாப்பிள்ளை குடும்பத்தார்.

கோமளவள்ளிக்கும் இந்த சம்பந்தம் பிடித்து விட
தன் கடைசி மகனுக்கும் அந்த குடும்பத்திலே பெண் குடுத்து பெண் எடுக்க சம்மதம் தெரிவித்தார்.இரு வீட்டார் ஏற்பாடுகள் படி திருமணம் நடைபெற்றது.பெரியவீட்டின் மூன்றாவது மருமகளாக தமயந்தி வந்தால்.

கல்யாணம் முடிந்த ஒரிரு மாதங்களில் தங்கமும் தமயந்தியும் கற்பம் ஆயினர். கபிலனுக்கு முடி இறக்கி காது குத்த எண்ணினால் கபிலனின் பாட்டி கோமளவள்ளி.அதன்படி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவர்களின் குல தெய்வ கோயிலுக்கு செல்ல திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.

அவர்கள் கபிலனுக்கு மொட்டை அடித்து காது குத்தும் நாளும் வந்தது.அனைவரும் குல தெய்வ கோயிலுக்கு சென்று கபிலனுக்கு காது குத்தி மொட்டை அடித்து நேர்த்தி கடனை செலுத்தினர்.

எல்லோரும் அங்கே இருந்த ஒரு மண்டபத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள்.தங்கம்தான் ஆரம்பித்தாள் அண்ணன்கள் இருவரும் இந்த நேரத்தில் இருந்திருந்தால் இன்னும் சந்தோஷமாக இருந்திருக்கும் என்று.அனைவரும் சோகமாயினர்.