விடியற்காலை கண்ட கனவு பலிக்கும் 63

சாமியார் : அம்மாடி உன் பெயரென்ன. (என்று சத்யாவிடம் கேட்க)

சத்யா : சாமி என் பெயர் சத்யகலா.

சாமியார் : நீ இழந்தது எல்லாம் உன் மகன் மூலமாக உனக்கு திரும்ப கிடைக்கும், உனக்கு மட்டுமல்ல நீ வாழ வந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் கிடைக்கும்.அது உனக்கு கிடைக்கும் போது அதை நீ மனதாலே ஏற்றுக்கொள்ள வேண்டும்,ஏற்றுக்கொள்வாய்!

சத்யா : அது என்ன சாமி?

சாமியார் : காலம் வரும் அப்போது சொல்கிறேன், அது வரை காத்திரு மகளே!

கோமளா : அது என்ன சாமி என் பேரன் மூலமாக கிடைப்பது?

சாமியார் : அம்மா அதற்கு உண்டான கால நேரத்தில் அதுவாகவே நடக்கும் போய் வா.

சத்யகலா : சாமி நீங்க எங்களுக்கு சொன்னேதே போதும் சாமி.

கோமளா : நாங்க கிளம்புறோம் சாமி.உங்கள் வாக்கு பழித்தால் நீங்கள் கேட்காதே அளவுக்கு உங்களுக்கும் இந்த கோயிலுக்கும் நான் செய்வேன் சாமி.

சாமியார் : அப்படியா ரொம்ப சந்தோஷம்,நீ அடுத்து முறை இங்கு வந்தால் உனக்கு ஒரு நல்ல சேதி சொல்வேன் போய் வா.

கோமளா : கண்டிப்பாக வருவேன் சாமி.இன்னும் ஆறு ஏழு மாதங்களில் என் கடைசி மகன் மற்றும் மகளுடைய குழந்தைகளை இந்த கோயிலில் வைத்து தான் பெயர் சூட்டும் விழா நடத்துவேன் சாமி.

சாமியார் : அப்படியா பார்ப்போம் நீ வருகிறாயா இல்லையா என்று.அம்மாடி சத்யகலா உன் மகனை பத்திரமாக பார்த்துக்கொள் தாயே.

சத்யா : சரிங்க சாமி, அவன் தான் சாமி இனி நான் வாழ்வதற்கு இருக்கும் ஒரே பிடிமானம்.பத்திரமாக பார்த்து வளர்க்கிறேன் சாமி.

சாமியார் : உனக்கு இப்ப என்ன வயதம்மா.

சத்யா : பதினெட்டு வயது சாமி.

சாமியார் : இன்னமும் சில வருஷங்கள் தானம்மா அதன் பின் உன் வாழ்வில் வசந்தத்தை மட்டுமே பார்ப்பாய் தாயி,நீ மட்டுமல்ல நீ வாழ வந்த இந்த வீடே உனக்காக வசந்தத்தை ஏற்படுத்தி கொடுக்கும், உன் மூலமாக இந்த குடும்பமே சந்தோஷமாக இருக்கும் கவலை வேண்டாம் போய் வா தாயி.

சத்யகலா மற்றும் கோமளவல்லி இருவரும் சென்று வெகு நேரம் ஆனதால் பாண்டிமீனாளும் தமயந்தியும் அவர்களை தேடி சாமி இருக்கும் குடிலுக்கு வந்தனர்.

சாமியிடம் விடைபெற்று கிளம்ப தயாரான சத்யா மற்றும் கோமளா இருவரும் பாண்டிமீனாள் மற்றும் தமயந்தி வருவதை பார்த்தனர்.

கோமளா” சாமி என் மூத்த மருமகளும் இளைய மருமகளும் வருகிறார்கள் அவர்களையும் ஆசிர்வாதம் பண்ணுங்க சாமி.

சாமியார் அவர்களுக்கும் ஆசிர்வாதம் செய்து அனுப்பினார்.

அங்கிருந்து வெளியேறி மண்டபம் வந்து அனைவரும் கோயிலில் இருந்து கிளம்பி வீட்டுக்கு போயினர்.‌

எல்லோரும் பெரிய வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.கோமளவள்ளிக்கு மனது சற்று ஆறுதலாக இருந்தது.பேரன் கபிலனை பார்த்து அவன் கை கால் ஆட்டி ஆட்டி விளையாடுவதை பார்த்து சிரித்தாள்.

மாதங்கள் கடந்தன தங்கமும் தமயந்தியும் நிறைமாதமாக இருந்தனர்.அவர்கள் இருவருக்கும் வளைகாப்பு செய்ய முடிவெடுத்தாள் கோமளா பாட்டி.

வீட்டில் உள்ளவர்களிடம் அதைப்பற்றி பேசினால் எல்லோரும் அவள் முடிவுக்கு சரி என்றனர்.வளைகாப்புக்கு தேதி குறிக்கப்பட்டு அதற்கான வேலைகளை ஒவ்வொருவரும் பிரித்துக்கொண்டு செய்தனர்.

வளைகாப்பு நாளும் வந்தது, “சீறும் சிறப்புமாக வளைகாப்பு நடத்தினால்” கோமளா பாட்டி.அதற்கு அடுத்த நாளே கோமளாவின் மகனும் மருமகனும் மோட்டார் சைக்கிளில் கடைவீதிக்கு செல்லும் வழியில் லாரி மோதி ஆக்ஸிடென்ட் ஆகி அதே இடத்தில் இருவரும் இறந்தனர்.