விடியற்காலை கண்ட கனவு பலிக்கும் 63

பாண்டி மீனாள் : சரிங்க அத்தை.

சத்யகலா : சந்தோஷம் அத்தை, வாங்க அத்தை சாப்பிடலாம், அக்கா நீங்களும் வாங்க,

என்ற போது டெலிபோன் மணி அடித்தது.சத்யாதான் எடுத்தால் ஃபோனை பேசி வைத்துவிட்டு கோமளாவிடம் பாண்டியிடமும் வந்தால்.

“அத்தே”அக்கா நம்ம தங்கத்துக்கும் தமயந்திக்கும் குழந்தை பொறந்திருக்காம் தமயந்தி அப்பா போன் செய்து இப்ப தான் சொன்னார்.

கோமளா : அப்படியா இரண்டு பெருக்கும் குழந்தை பொறந்திருச்சா சந்தோஷம் ரொம்ப சந்தோஷம் நாம ஒரு எட்டு போய் பார்த்துவிட்டு வரலாம்.

பாண்டி மீனாள் : ஆமா சத்யா என்ன குழந்தை பொறந்திருக்காம்.

சத்யகலா : இரண்டு பெருக்கும் பெண் குழந்தைகள் பிறந்திருக்காம் .
கோமளா : “பொட்ட குழந்தையா பிறந்திருக்கு ”

சத்யகலா : ஆமாம் அத்தை.

கோமளா : சரிமா போய் பார்த்துட்டு வரலாம்,பாண்டியம்மா காரை ரெடி பண்ண சொல்லு.நாளேக்கு காலையிலே போயிட்டு வரலாம்.
பாண்டி மீனாள் : சரிங்க அத்தே .

மூவரும் அமர்ந்து சாப்பிட தொடங்கினர், காலையில் கிளம்ப வேண்டும் என்று அதற்க்கான வேலையை பார்க்க வேண்டும் சீக்கிரமாக சாப்பிட்டு அவர்களின் வேலைகளை ஒவ்வொருவரும் பிரித்துக்கொண்டு செய்தனர்.

காலையில் மூவரும் தமயந்தியும் தங்கத்தையும் பார்க்க குழந்தைகள் கபிலன் மற்றும் கயல்விழி இருவரையும் அழைத்து கொண்டு காரில் கோமளா வின் சம்பந்தி வீட்டுக்கு சென்றனர்.

இருவரையும் பார்த்து நலம் விசாரித்தனர் மூவரும் அப்படியே அவர்கள் குழந்தைகளை தூக்கி கொஞ்சினர்.

பின்னர் மூவரும் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை கொடுத்து கொஞ்ச நேரம் பேசினர்.கோமளாவின் சம்பந்தி இருவரும் இங்கேயே இருக்கட்டும் என்றார்.

சரி என்று கோமளா சொல்லி மூவரும் கிளம்பினர்.பேர் வைக்கும் போது மீண்டும் வருவதாக சொல்லி விடைபெற்று வீட்டுக்கு திரும்பினர்.

“சத்யா” ஆரம்பித்தாள் அத்தை போற வழியில் சாமியாரை பார்த்துட்டு போகலாமா.

கோமளா: இல்லமா நாம் ஒரு வருஷத்துக்கு கோயிலுக்கு போக கூடாது.நம்ம வீட்டில் இப்போது தான் துர் சம்பவம் நடந்திருக்கிறது.அதனால் போக கூடாது.

பாண்டி மீனாள் : அத்தை நாம கோயிலுக்கு போக வேண்டாம்.சாமியாரை மட்டும் பார்த்துவிட்டு வரலாமே.

சத்யகலா : ஆமாம் அத்தை அக்கா சொல்வது போல சாமியை மட்டும் பார்த்து நம்ம விஷயத்தை சொல்லி ஏதாவது பரிகாரம் கேட்போம்.

கோமளா : சரி போற வழியில் தானே போய் பார்க்கலாம்.

மூவரும் அவர்களின் குலத்தெய்வ கோயிலில் உள்ள சாமியாரே பார்க்க போயினர்.கோயில் வந்ததும் மூவரும் குழந்தைகளுடன் சாமியார் இருக்கும் குடிலை நோக்கி நடந்தனர்.சாமியார் இவர்கள் மூவரையும் பார்த்து என்ன விஷயம் என்று கேட்டார்.

சத்யகலா : சாமி கொஞ்ச மாதங்கள் முன் நாங்க இங்க வந்து உங்களை பார்த்துவிட்டு ஆசிர்வாதம் வாங்கிட்டு போனோம் ஞாபகம் இருக்கா சாமி.

சாமியார் : இருக்கு தாயி நீங்கள் வந்த விஷயத்தை சொல்லுங்க.