விடியற்காலை கண்ட கனவு பலிக்கும் 63

இந்த செய்தியை கேட்டு கோமளா வள்ளி துக்கத்தில் மயங்கி சரிந்தாள்.மக வாழ்க்கையும் கடைசி மருமகள் வாழ்க்கையும் இப்படி ஆகி விட்டதே என கதறினாள்.ஊரே பெரிய வீட்டுக்காக கண்ணீர் விட்டது.

தமயந்தியும் தங்கமும் அழுதது பார்க்க எல்லோருக்கும் தர்ம சங்கடமாய் இருந்தது.

இருவரின் ஈம சடங்குகள் முடிந்தன.அந்த வீடே இப்போது விதவைகள் கூடாரம் போல இருந்தது.

தமயந்தியின் “அப்பாவும் அம்மாவும்”,”கோமளவள்ளியிடம்” நாங்கள் எங்கள் மகளையும் மருமகளையும் அவர்களின் வீட்டுக்கு அழைத்து செல்வதாய் கூற கோமளா அதற்கு சம்மதம் தெரிவித்தார்.

தமயந்தியும் தங்கமும் அவர்களுடன் கிளம்பி சென்றனர்.பெரியவீடே மாயன அமைதியில் இருந்தது.யாரும் ஒழுங்காக சாப்பிடாமல் தூங்காமல் எந்த வேளையும் செய்யாமல் போட்டது போட்டபடி இருந்தனர்.

இப்படியே எத்தனை நாட்கள் இருந்தனர் என்று அவர்களுக்கே தெரியாது.அப்படி இருக்கையில் சத்யகலா தான் மாமியார் கோமளவள்ளியிடம் வந்து பேசினால்.

சத்யகலா : “அத்தே” இப்படி இருந்தால் நம்ம நிலமை மாறவா போவுது,பாண்டி அக்காவும் நீங்களும் தெம்பாக இருந்த தான் நமக்கு அடுத்து உள்ள நம்ம புள்ளைங்களை பார்த்துக்கொள்ள வேண்டாமா.

பாண்டி மீனாள் : நீ சொல்வது சரிதான் சத்யா,ஆனா இப்ப இந்த வீட்டுக்கு காவலனாக இருக்க ஒரு ஆம்பிளையும் இல்லையே.அதே நினைக்கையில்….

கோமளா : “நான் ஏதோ பாவம் பண்ணிட்டேன்”அதான் முதல்ல புருஷனை இழந்தேன்,இப்ப புள்ளைங்கள இழந்து இப்படி அனாதையா இருக்கேன்,எல்லாமே நான் வாங்கிய வரம்,என அழுதாள்.

சத்யகலா : அழாதிங்க அத்தே நீங்களே இப்படி மனது ஒடந்சி இருந்தா எங்களுக்கு யாரு அத்தே இருக்கா ஆறுதல் சொல்லே.

பாண்டி மீனாள் : அத்தே அழாதிங்க அத்தே தைரியம் சொல்றே நீங்களும் இப்படி இருந்தால் நானும் சத்யாவும் என்ன பண்ணுவது அத்தே.

கோமளா : எப்படி அழாமல் இருக்க முடியும், என்னை போலவே நீங்கள் நால்வரும் சின்ன வயசுலே புருஷனை இழந்து பூவும் பொட்டும் இல்லாமல் இப்படி நிற்கிறது எனக்கு கஷ்டமா இருக்குடி, புருஷன் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் என்று புருஷனை சின்ன வயசுல பறிகொடுத்து வாழ்ந்த எனக்கு தெரியும் அதோடே கஷ்டம்.

சத்யகலா : “அத்தே”விடுங்க அத்தை அதையே பேசிட்டு, கடவுள் நமக்கு இவ்வுளவு கஷ்டத்தை கொடுக்கிறார் என்றால் பின்னாளில் நமக்கு சந்தோஷத்தை தருவார்.

கோமளா : அடி போடி இத்தனை வருஷமா அப்படி நம்பி நம்பிதான், நான் இப்படி புருஷன் புள்ளைங்கள வாரி கொடுத்துட்டு இப்படி இருக்கேன்.

பாண்டி மீனாள் : “அத்தே”ஒரு வேளை நம்ம வீட்டுக்கு யாராவது சூனியம் கினியும் வச்சிருப்பாங்களோ.மாமாவோடே வளர்ச்சி புடிக்காமே.

கோமளா : “அதெல்லாம் இல்லே”நான் அப்பவே மாமா இறந்த அடுத்த வருஷமே ஒரு சூனிய காரணே வர வைச்சு கேட்டுட்டேன்.அப்படி எதுவுமே இல்லை என சொல்லிட்டாங்க.

சத்யகலா : ஏன் “அத்தே”நாம வேணா அந்த சாமியாரை போய் பார்க்கலாமா, அவரிடம் கேட்டால் ஏதாவது சொல்லுவார்.

பாண்டி மீனாள் : எந்த சாமியார்?

சத்யகலா : அதான் அக்கா நம்ம குல தெய்வ கோயிலில் பார்த்து ஆசிர்வாதம் வாங்கினோமே அந்த சாமியார்.

கோமளா : சரி உனக்காக போய் பார்த்துவிட்டு வரலாம்.

பாண்டி மீனாள் : அவரிடம் கேட்டால் என்ன பதில் வரும் என்று நினைக்கிறே சத்யா.

சத்யகலா : “அவரிடம் கேட்போம் அக்கா”அன்னைக்கே நிறையவே கேள்வி கேட்டார்.அவருக்கு ஏதாவது தெரிந்திருந்தால் நமக்கு அதை அவர் சொன்னால் நமக்கு அதன் மூலம் நம்மை நடந்தால் நல்லதுதானே.

கோமளா : சரி போய் பார்க்கலாம்.பாண்டி அவ ஆசை படறா போய் பார்க்கலாம்.