விடியற்காலை கண்ட கனவு பலிக்கும் 63

கோமளா : சாமி எங்கள் வீட்டில் இப்போது ஒரு ஆம்பிளையும் உயிரோடு இல்லை.என் கடைசி மகனும் மருமகனும் ஒரு மாதம் முன்பு லாரியில் அடிப்பட்டு இறந்துவிட்டனர்.இப்போது எங்கள் வீடே ஆம்பிளை இல்லாத வீடாக உள்ளது.நாங்கள் எல்லோரும் புருஷனை இழந்து விதவைகளாக உள்ளோம்.

சத்யகலா : ஆமாம் சாமி அவங்க சொல்வது போல் தான் உள்ளது சாமி.அதான் உங்களை பார்த்து ஏன் இப்படி எங்கள் வீட்டில் நடக்கிறது தெரிஞ்சிக்க உங்களை நாடி வந்திருக்கோம் சாமி.

பாண்டி மீனாள் : உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் சாமி.

சாமியார் : நான் அப்பவே சொன்னேனே தாயி, கொஞ்ச காலம் தான் பின் உங்கள் வாழ்வில் வசந்தத்தை காண்பிர் என்று.பின் ஏன் கவலை!

சத்யகலா : ஏன் இப்படி நடந்தது என்று தெரியனும் சாமி,அதை நீங்கள் தான் சொல்லணும் சாமி, அதற்கு பரிகாரம் இருந்தால் நாங்க செய்யறோம் சாமி.

கோமளா : ஆமாம் சாமி,என் மருமகள் சொல்வது போல ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் சாமி, இப்படியே ஒரே தாலி அறுத்த முண்டைகளா ஆனது ஏன் குடும்பம் ஆண் துணை இல்லாமல் போனதும் ஏன் சாமி.அதை தெரிஞ்சிக்கனும் சாமி.

சாமியார் : எல்லோரும் வந்து அமருங்கள்.ஓலை சுவடியை பார்த்து கூறுகிறேன்.(மூவரும் வந்து அமர்ந்தனர்) சாமியார் அங்கே இருந்த கடவுளை கும்பிட்டு சில ஓலை சுவடிகளை எடுத்து வந்து அமர்ந்தார்.

மூவரிடமும் சில கேள்விகளை கேட்க அதற்கு அவர்கள் ஏதோ பதில் சொல்ல, சாமி சில ஓலை சுவடியை படித்தார், படித்து முடித்து அவர்களை பார்த்து நான் அன்னிக்கு சொன்னது தான் தாயி.உங்கள் வாழ்க்கையில் வசந்தத்தை அனுபவிக்க போகிறிர்கள்.

சத்யகலா : அது என்ன சாமி வசந்தம், அது வரும் போது வரட்டும், ஏன் இப்போது இப்படி நடக்கிறது அதே சொல்லுங்கள்.

சாமியார் : இன்னும் சில ஓலை சுவடியை படித்தார்.தாயி இப்ப நான் சொல்வதை கவனமாக கேளுங்கள், அம்மாடி தாயி உங்கள் பரம்பரையில் வந்த ஒருவர் செய்த தவறு தான் தாயி இப்படி நடக்க காரணம்.

கோமளா : யாரு சாமி அது? அப்படி என்ன தவறு செய்தார், அதற்கு எதாவது பரிகாரம் உண்டா சாமி.

சாமியார் : அந்த தவறை செய்தவர் உன் கணவரின் தந்தை அதாவது உன் மாமானார் தான் தாயி.

கோமளா : என் மாமனாரா !

சாமியார் : ஆமாம் தாயி அவர் செய்த ஒரு பாவம் தான் இன்று உங்கள் குடும்பத்தில் ஆண்களே இல்லாமல் இருப்பதற்கு காரணம்.

சத்யகலா : சாமி அப்படி என்றால் என் மகனும்!

கோமளா : அப்படின்னா என் பேரனும் எங்களை விட்டு போயி விடுவானா?

சாமியார் : இருங்கம்மா ஏன் அவசரம்! பொறுமை பொறுமை முழுவதும் சொல்கிறேன் கேளுங்கள்.

பாண்டி மீனாள், சத்யகலா,கோமளவள்ளி மூவரும் அமைதியாக சொல்லுங்கள் சாமி என்றனர்.சாமியார் சொல்ல தொடங்கினார்.

சாமியார் : அம்மாடி தாயி உங்கள் பரம்பரை தான் ஊரில் பெரிசு அல்லாவா,சொத்து பத்து எதுவுமே குறைவில்லா குடும்பம் தானே.

கோமளா : ஆமாம் சாமி.

சாமியார் : அது எனக்கு தெரியும் தாயி.நா சொல்ல வருவதை கொஞ்சம் பொறுமையாக கேளும்மா.

சத்யகலாவும் பாண்டி மீனாளும் தன் மாமியார் கோமளவள்ளியிடம் அத்தை அவரே சொல்லவிடுங்கள் என்றனர்.மன்னிக்கவும் சாமி நீங்கள் சொல்லுங்கள் என்றனர்.கோமளாவும் மன்னிப்பு கேட்க சாமியார் தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார்.

சாமியார் : உன் மாமனார் தான் ஊரில் பெரிய கட்டு, ஊரில் எந்த பிரச்சனை என்றாலும் அதை திர்த்து வைப்பது, பஞ்சாயத்து செய்வது ஊருக்கு எது நல்லது கெட்டது என கூறுவார்.ஊரே அவர் பேச்சுக்கு கட்டுப்பட்டு இருப்பார்கள்.

அப்படி இருந்த போது ஊரில் உன் மாமனாரிடம் ஒரு பஞ்சாயத்து வந்தது, உன் மாமனார் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு கிராமத்தில் இருந்து, அந்த பஞ்சாயத்தில் ஒரு பெண்ணுக்கு எதிரான ஒரு தீர்ப்பை உன் மாமனார் வழங்கினார்.

அந்த தீர்ப்பு ஏத்துக்கொள்ளாதே அந்த பெண் குடுத்த சாபத்தால் உன் மாமனார் அடுத்த ஆண்டே இறந்தார்.