விடியற்காலை கண்ட கனவு பலிக்கும் 63

சாமியார் : அப்படி என்னால் உத்தரவாதம் தர முடியாது, ஆனால் ஒன்று மட்டும் முடியும்.

கோமளா : அது என்ன சாமி சொல்லுங்கள்?

சாமியார் : உங்கள் வீட்டில் உள்ள பெண் குழந்தைகளுக்கு ஏதும் ஆகாது.ஆனால் உன் ஆண் வாரிசுக்கு ஏதும் நடக்காது என்று சொல்ல முடியாது.

சத்யகலா : சாமி! என்ன சொல்ல வரிங்கே,அப்ப என் புள்ளே என்று அழுதாள்.

மற்ற இருவரும் அவளை சமாதானம் செய்தனர்.சாமியார் தொடர்ந்தார்.

சாமியார் : தாயி அழாதே, நான் சொல்ல வருவதை கேள்.
சத்யகலா : என்ன சாமி சொல்ல போரிங்க, சொல்லுங்கள் இறுக்கமான முகத்துடன் சொல்ல.

சாமியார் : அம்மாடி, உன் வீட்டில் எல்லோருக்கும் பெண் பிள்ளைகள் பிறந்தனர், ஏன் உனக்கு மட்டும் ஆண் பிள்ளை பிறந்தது, ஏன் என்று தெரியுமா?

சத்யகலா : இப்படி பாதியில் பரிக்கொடுக்கவா!

சாமியார் : இல்லை தாயி அவன் உயிரோடு வாழ வேண்டும் என்று நீ நினைத்தால் அவன் உன்னோடு வாழ்வான்.அது உன் கையில் தான் உள்ளது.

சத்யகலா : என் குழந்தைக்காக நான் என்ன வேண்டும் என்றாலும் செய்வேன்.

“கோமளாவும் பாண்டிமீனாளும்”அப்படி என்ன தான் அவள் செய்யனும் சாமி சொல்லுங்கள் அவளுக்கு துனையா இருந்து அதை செய்ய வைக்கிறோம்.

சாமியார் : சரி தாயே, அதற்கான பரிகாரம் என்ன என்று நான் தாயிடம் விரதமிருந்து தவம் செய்து கேட்டு சொல்கிறேன், அது வரை இந்த பெண் தினமும் காலையில் மற்றும் மாலையில் குளித்து முடித்து உங்கள் வீட்டில் வடக்கு திசையில் காலை மற்றும் மாலை தீபமேற்றி அந்த பெண் மோகனாம்பாளை வணங்கி வர வேண்டும்.

சத்யகலா : நான் செய்கிறேன் சாமி என் பிள்ளைக்காக அந்த பெண்னை நினைத்து காலையும் மாலையும் தீபமேற்றி அந்த பெண்ணை வணங்குகிறேன் சாமி.

சாமியார்: தாயி இந்த பூஜையை எக்காரணம் கொண்டும் நிறுத்த கூடாது, புரியுதா.

சத்யகலா : புரியவில்லை சாமி.

சாமியார் : அம்மாடி நீ மாதவிடாய் காலத்தில் கூட நிறுத்தாமல் பூஜை செய்யனும் தாயி.

சத்யகலா : சரி சாமி, நீங்கள் சொல்வது போல் எக்காரணம் கொண்டும் நிறுத்தாமல் பூஜை செய்கிறேன் சாமி.

போய் வாருங்கள் என்று அவர்களுக்கு ஆசி கூறி அனுப்ப முயன்றார் சாமியார்.அப்போது குறுக்கிட்ட கோமளாவும் பாண்டிமீனாளும் சாமி ஒரு சின்ன சந்தேகம்.

சாமியார் : என்ன சந்தேகம்?

கோமளா : இல்லை, மோகனாம்பாளும் அவளின் மகனும் இறந்ததற்கு என் மாமனார் தான் காரணம் என்று சொன்னீர்கள், அவர்களை பற்றி அப்படி என்ன தப்பு தப்பாக ஊரில் உள்ளவர்களிடம் சொன்னார்.அதற்கு அவர்கள் வேறு விதமான முடிவெடுத்தனர் என்று சொன்னீர்கள், அது என்ன முடிவு சாமி, உங்களுக்கு தெரிந்தால் அதை விவரமாக சொல்லமுடியுமா.

சாமியார் : இப்பொழுது நேரம் இல்லையம்மா,இருட்ட தொடங்கி விட்டது, நீங்கள் இப்போது செல்லுங்கள் பின்னர் சொல்கிறேன்.இந்தாம்மா தாயி மறக்காமல் நாளை முதல் மோகனாம்பாளை நினைத்து விளக்கு ஏற்றும் பரிகார பூஜையை நடத்து.

சத்யகலா : சரி சாமி, எத்தனை நாள் இந்த பரிகார பூஜை செய்யனும் சாமி.

சாமியார் : நீ ஒரு ஆறு மாதங்கள் தொடர்ந்து செய், பின் என்னை வந்து பார் அப்பொழுது சொல்கிறேன்.

சத்யகலா : சரி சாமி.

பாண்டிமீனாள் : நான் ஏதும் பரிகாரம் செய்யனுமா?

சாமியார் : இப்போது வேண்டாம், அவள் மட்டும் பரிகார பூஜை செய்யட்டும்.போய்வாருங்கள்.

மூவரும் சாமியிடம் விடைபெற்று கிளம்பினார்கள்.கோமளாவுக்கு மட்டும் மனதுக்குள் அப்படி என்னதான் மோகனாம்பாளுக்கு தன் மாமனாரால் வாழ்க்கையில் நடந்திருக்கும் என்று யோசித்தப்படி இரண்டு ஒரு நாளில் வந்து சாமியிடம் அல்லது ஊரில் உள்ள பெரிசுகளிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

சாமியாரோ அவர்கள் கிளம்பி சென்றவுடன் அங்கு இருந்த சில சாமி படங்களை வணங்கி அம்மா தாயி நீ நினைத்தது கூடிய சீக்கிரம் நடக்கப் போகுது தாயி அதற்கு நான் உனக்கு ஒரு அணிலாக இருந்து உதவுவேன் தாயி, அதற்கு எனக்கு சக்தி கொடு தாயி என்று சாமி படங்கள் முன்பு விழுந்து வணங்கினார்.