ஜோடி மாற்றிக் கொள்ளும் கதை 2 299

எனக்குள் எனென்னவோ நினைவுகள், அங்கே என் கணவருக்கு காய்ச்சல் வந்து கஷ்டப் பட்ட போது, பூமா அவருக்கு செய்த உதவியும், இங்கே எனக்காக இவர் செய்து கொண்டிருக்கும் உதவிகளும், முன் ஜென்மத்து தொட்ட குறை, விட்ட குறையா?

இரவு என் கணவரும் வந்து விட, எல்லோரும் காட்டிய அன்பில் ஒரு வாரத்திலேயே குணமாகி விட்டேன்.

ராகவன் அண்ணனைப் பார்த்து பேச வேண்டும் என்று உள்ளம் உறுத்திக் கொண்டே இருந்தது. ஆனால் முடியவில்லை. அந்த வாரம் வெள்ளிக் கிழமை கிளம்பி சேலம் சென்றேன்

சேலம்.

சென்னையிலிருந்து நான் சேலம் வந்ததும் என் கணவரும் நானும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கீழ் வீட்டுக்கு சென்றோம்.

ராகவனும், பூமாவும் வர வேற்றனர்.

நான் ராகவன் கைகளை நன்றியுடன் பிடித்துக் கொண்டு, ”ரொம்ப நன்றிங்க!! ஆபத்து காலத்துலே என் மனவிக்கு உதவினதுக்கு. இந்த நன்றிக் கடனை எப்படி திருப்பி செய்யிறதுன்னு எங்களுக்கு தெரியலை. இந்தாங்க, இதுலே பத்தாயிரம் ரூபா இருக்கு நீங்க செலவு செஞ்சதுக்கு எடுத்துக்கோங்க. இதுக்கு மேலே செலவாகி இருந்தாலும் நாங்க அப்புறமா தந்திட்றோம்.”

“என்னங்க இது? இதெல்லாம், மனுஷனுக்கு மனுஷன் சாதாரணமா செய்யிற உதவிங்க. இதைப் போய் பெரிசு படுத்திகிட்டு. இவங்க இல்லாம வேற யாராவது அந்த இடத்துல அடி பட்டு விழுந்திருந்தாக் கூட நான் அப்படிதான் உதவி செஞ்சிருப்பேன். அதுவுமில்லாம நீங்க என் ஃப்ரண்ட். எங்க வீட்ல குடி இருக்கிறவங்க. உங்க கிட்டே போய் நான் செஞ்ச உதவிக்கு பிரதி பலனா இந்தப் பணத்த வாங்கினா அது நான் செஞ்ச உதவிக்கு அர்த்தம் இல்லாம போய்டும்ங்க.”

எவ்வளவோ வற்புறுத்தியும், பணத்தை அவர் வாங்கவே இல்லை.
கொஞ்ச நேரம் ஏதேதோ பேசிக் கொண்டிருந்துவிட்டு எங்கள் வீட்டுக்கு வந்தோம்.

வாரங்கள் கடந்தன.

ஒரு நாள் திங்கட் கிழமை.

‘அக்கா,….அக்கா,…”

கீழ் வீட்டிலிருந்து பூர்ணிமாவின் குரல்.