ஜோடி மாற்றிக் கொள்ளும் கதை 2 299

“ நல்ல வேளைடி. ராகவன் சார் செஞ்ச நன்றியை நாம என்னைக்கும் மறக்கக் கூடாதுடி. ஆண்டவன்தான் அந்த நேரத்துக்கு ராகவன் சாரை அங்கே அனுப்பி வச்சிருக்கான்”

“ஆமாங்க,….. முன்னே பின்னே தெரியாத ஊர்லே நல்லா போய்க்கிட்டு இருக்கிற வரைக்கும் ஒன்னு பிரச்சினை இல்லை. எதாவது பிரச்சினைன்னு வந்துட்டா சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம்ங்க.”

“சரிடி,…. அப்புறமா அவரை நேர்ல பாத்து தேங்க்ஸ் சொன்னியா?”

“இல்லைங்க,…”.

“என்ன நிர்மலா இப்படி இருக்கே,….போய் முதல்லே அவருக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு, அவர் ஹாஸ்பிட்டல், அது, இதுன்னு எவ்வளவு செலவு செஞ்சிருக்கார்ன்னு கேட்டு சொல்லு அதைக் கொடுத்துட்டு வரலாம்.”

“அவரும் பக்கத்துலதாங்க இருக்கார். அவர் கிட்டேயே பேசுங்க.”

“சார், நான் தான் கணேஷ் பேசுறேன்”

“சொல்லுங்க என்ன விஷயம்?”

“நீங்க என் மனைவியை காப்பாத்தி ஹாஸ்பிடல்லே சேத்த்துக்கு ரொம்ப நன்றிங்க. நான் சொல்ற இந்த நன்றி எல்லாம் நீங்க செஞ்ச உதவிக்கு முன்னாலே ரொம்ப சின்னதுங்க. என் நன்றிக் கடனை எப்படி தீக்கறதுன்னு தெரியலை..”.

“சரிங்க கணேஷ், பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க. பெரிசா ஒன்னும் நான் செய்யலை. ஒன்னும் பயப் படாதீங்க. உங்க மனைவியை ஹாஸ்பிடல்லே சேத்ததே நான்தான். எல்லாம் நான் பாத்துக்கறேன். லேசான காயம்தான். நீங்க ஸ்ட்ரைக் முடிஞ்சு வந்தா போதும்.”

போனை கட் செய்த அடுத்த நொடி, பூர்ணிமாவிடம் இருந்து ராகவனுக்கு அழைப்பு.

“என்னங்க,…”

“சொல்லும்மா.”

“அக்காவுக்கு ஆக்ஸ்டென்ட் ஆகி பலமா அடி பட்டு ஹாஸ்பிடல் சேத்திருக்காங்களாமே. கேட்டதும் எனக்கு பக்குன்னு ஆயிடுச்சு. அண்ணன் சொல்லிட்டு ரொம்ப கவலையா இருக்கார்.”

“ஒன்னுமில்லை பூமா. ஒரு டூ வீலர்காரன் மோதினதிலே கீழே விழுந்துட்டாங்க. லேசா அடி பட்டிருக்கு. பயப்படற அளவுக்கு வேற ஒன்னும் இல்லை.”

“அப்புறம் எதுக்கு ஹாஸ்பிடல்ல ஐ. சி. யூ- லே சேத்திருக்காங்களம். நீங்க அங்க இருந்து என்ன புண்ணியம்? என்ன செய்வீங்களோ தெரியாது. அவங்களை நல்ல படியா பக்கத்திலேர்ந்து பாத்து, கவனிச்சு, ஆகிற செலவை செஞ்சு அக்காவை நல்ல படியா வீட்டுக்கு கூட்டிகிட்டு வர்றீங்க.”