ஜோடி மாற்றிக் கொள்ளும் கதை 2 299

“ரோட்ல நீ அடி பட்டு விழுந்தட்டேம்மா. அந்தப் பக்கம் நான் எதேச்சையா வந்தப்போ அடிபட்டு விழுந்துகிடக்கிறது நீதான்னு தெரிஞ்சுகிட்டு நான் தான் ஆம்புலன்ஸ் வரச் சொல்லி உன்னை இங்கே கொண்டு வந்து சேத்திருக்கேன். ஒன்னும் பயப் படாதே.”

“என் ஹேன்ட் பேக்?. அதிலே என் செல் போன்.? பணம்.?”

“எல்லாம் பத்திரமா இருக்கு. ஆனா உன் செல் போன்தான் கொஞ்சம் டேமேஜ் ஆயிடுச்சு. அதை நீ யூஸ் பண்ண முடியாது.”

“சரி,…உங்க போனை கொஞ்சம் கொடுங்கண்ணா, அவருக்கு போன் செஞ்சு விஷயத்தை சொல்லிட்றேன்.”

ராகவனிடம் இருந்து போனை வாங்கி, அவருக்கு போன் செய்தேன்.

“என்னங்க, கொஞ்சம் பதட்டப் படாம கேளுங்க..”

‘ஏதாவது கெட்ட செய்தியா?”

‘அதெல்லாம் ஒன்னும் இல்லை. ஒரு சின்ன ஆக்ஸிடென்ட்ல லேசா அடி பட்டதினாலே என்னை ஹாஸ்பிட்டல்ல சேத்திருக்காங்க. எழுந்து நடக்கக் கூட முடியலை.. பாத் ரூம் அதுக்கு இதுக்கு போக பக்கத்துல துணைக்கு யாரும் இல்லை. நீங்க லீவு போட்டுட்டு வந்துடுங்களேன்..” என்று ஆக்ஸிடென்ட் ஆனதிலிருந்து ஹாஸ்பிடல் வந்து சேர்ந்த்து வரை அனைத்தையும் சொன்னேன்.

“அய்யய்யோ!!, இப்ப என்ன பண்றதுன்னு தெரியலையே. இங்க ஏதோ பிரச்சினையிலே பஸ் ஸ்ட்ரைக். டாக்ஸி பிடிச்சு வந்துடலாமுன்னா எந்த வண்டியையும் ஓட விடறதில்லையாம்.. ட்ரெயின் கூட கேன்சல் பண்ணிட்டாங்கன்னு கேள்விப் பட்டேன். எப்படிப் பாத்தாலும், நான் நைட்டுதான் வர முடியும். அது வரைக்கும் எப்படியாவது அட்ஜஸ்ட் செஞ்சுக்கோயேன். ஸ்ட்ரைக் முடிஞ்ச உடனே எப்படியாவது வந்திட்றேன். ஆம்புலன்ஸ் வந்து தூக்கிகிட்டு போற அளவுக்கு அடி பட்டிருக்கேடி. இவ்வளவு தூரத்துல நீ வேலை பாத்துகிட்டு, உனக்கு ஏதாவது ஒன்னுன்னா நான் என்னடி பண்ணுவேன்?” என் கண்கள் என்னை அறியாமல் கலங்கியது.

“எனக்கு ஒன்னும் ஆகாது. நீங்க வாழற வரைக்கும் உங்க கூட, உங்களுக்கு மனைவியா இருந்து செய்ய வேண்டிய கடமையை செஞ்சுட்டுதான் போவேன். நான் சொல்ல வந்ததைக் கொஞ்சம் கேளுங்களேன்.”

“…………….”

“கீழே அடி பட்டு விழுந்த நான், எப்படி இந்த ஹாஸ்பிடலுக்கு வந்தேன்னு ஒரே குழப்பமா இருந்துச்சு. கீழ் வீட்டு ராகவன் அண்ணன் தான் ஆக்ஸிடென்ட் ஆன இடத்திலேர்ந்து என்னைக் காப்பாத்தி, இந்த ஹாஸ்பிட்டல்லே சேத்து, பணம் கட்டி என்னை கவனமா பாத்துகிட்டார்ங்கிறதை அப்புறமாதாங்க தெரிஞ்சிக்கிட்டேன்.”