“மீனா வந்திருந்தா, பாத்து ரொம்ப சந்தோஷப்படுவா!!”
அங்கேயே கொஞ்ச நேரம் உட்கார்ந்து, இயற்கை அழகை மூவரும் ரசித்தார்கள்.
“அடுத்தது எங்கேங்க போகப் போறோம்?”
“நகுச்சியா தால், இராணிகெட் பாத்துட்டு, மல் ரோட் வந்து லஞ்ச் சாப்டுட்டு கடைசியா சைனா பீக் வரலாம்.” என்று சொல்லி ரமேஷ் காரை கிளப்ப, கார் ஊர்ந்து ஓடி, நகுச்சியா தாலை அடைந்தது.
“ வாவ்.!!… இந்த இடம் கூட சூப்பரா இருக்குண்ணா?” என்று சொல்லி என் கணவரிடம் குதூகளித்தவள், அவள் கணவர் பக்கம் திரும்பி, ”இந்த இடத்துக்கு என்ன பேருங்க?”
“ இதுதான் நாகுச்சியா தால். நைனிடால் நகரின் மையப் பகுதியிலிருந்து 24 கிமீ தொலைவுக்கு இது இருக்கு. இந்த ஆழமான ஏரில ஒன்பது கார்னர்ஸ் இருக்கு,”
“ரொம்ப ஆழமா இருக்குமா?”
“ஆமாம். ஏரியோட மையப் பகுதி 132 அடி ஆழமானது. நீள அகலம் பாத்தோம்னா, ஒரு கிமீ நீளம் அரை கிமீ அகல பரப்பளவுல இந்த ஏரி இருக்கு.”
“ம்…!”
ஏரியைச் சுத்தி அமைஞ்சிருக்கிற இந்த பகுதி அடர்த்தியான வனம் நிறைந்த மலைகளால் சூழப்பட்டு பாக்கிறப்போ ரொம்ப சூப்பரா இருக்கும். ப்ராணீகத்தின் படி ஒரே நேரத்துல ஏரியோட ஒன்பது கோனங்களையும் யாரால பாக்க முடியுதோ, அவர் மேக மண்டலத்தில் கரைஞ்சு. புண்ணையத்தை அடைஞ்சிடுவாங்க சொல்றாங்க.
“ஆமாங்க. மடிப்பு மடிப்பா மலைகளும், பச்சைப் பசேல்ன்னு சமவெளியும், பாக்க பாக்க ரொம்ப அழகா இருக்குங்க. ஆமா, வருஷம் பூரா இங்க மக்கள் கூட்டம் இருக்குமா?”
“ஆமாம் அர்ச்சனா. வருஷம் முழுவதும் இந்த இடம் கூட்டமாதான் இருக்கும். பலவித பறவைகளை கண்டு க்ளிக்க, ட்ரெக்கிங்க் செய்ய, பாரா கிளைடிங்க் செய்ய இங்க வசதி செஞ்சிருக்காங்க. ட்ரெக்கிங்கும், பாரா கிளைடிங்கும் போலாமா?”
“வேண்டாங்க. மீனாவ தனியா விட்டுட்டு வந்தது என்னவோ போல இருக்கு. அடுத்த இடத்துக்கு போலாம்.”
கார் இரானிகெட்டை வந்தடைந்தது.
Next please 6