கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 55 14

“நீ சொல்றது உண்மைதான்.. நான் இல்லேங்கலே… அதே சமயத்துலே எங்களுக்கும் உங்க வாழ்க்கையில பங்கு இருக்கு.. நீங்க எடுக்கற முடிவுகள் உங்களை மட்டுமில்லே… உங்களை சுத்தி இருக்கற நிறைய நபர்களை பாதிக்குதும்மா… எங்க ரோலை நாங்க எப்படி விட்டுக்குடுத்துட முடியும்?”

“அங்கிள்…” சுகன்யா முனகினாள்.

“அனாவசியமா அடுத்தவங்க வாழ்க்கையில தலையிடறது தப்புன்னு எனக்கும் தெரியும்… உங்க பிரச்சனையை உங்களாலே ஹேண்டில் பண்ண முடியலேங்கறப்ப, அட்லீஸ்ட், நீயாவது அதை என் கிட்ட சொல்லியிருக்கலாம்லே?”

“எங்க நடுவுல இருந்த பிரச்சனையை நான் உங்ககிட்ட சொல்லி இருக்கலாம்… அப்படி சொல்லாதது என்னோட தப்புன்னு நான் ஒத்துக்கறேன்… அங்கிள் இதுக்காக நீங்க என்னை மன்னிக்கணும்…”

“தில்லியிலே என்னோட ட்ரெய்னிங் முடிஞ்சு நான் ஊருக்கு திரும்பி வந்ததுக்கு பின்னாடி, எங்க கல்யாணத்தை எப்ப வேணா நீங்க பிக்ஸ் பண்ணுங்க மாமான்னு மீனாவோட பொறந்த நாளைன்னைக்கு என் கிட்ட சொன்னியே? இது உனக்கு ஞாபகம் இருக்கா?”

“ஞாபகம் இருக்கு அங்கிள்..”

“உனக்கும் செல்வாவுக்கும் நடுவுல ஆயிரம் பிரச்சனை வந்திருக்கலாம்… அறிவு கெட்டத்தனமா அவன் எதையாவது உங்கிட்ட உளறியிருக்கலாம். இந்த விஷயத்துல இன்னைக்கு வரைக்கும் உன்னை நான் ஏதாவது தப்பா சொன்னேனா?”

“இல்லே அங்கிள்…”

“அப்படியிருக்கும் போது நீ ஏன் என்னை திரும்ப திரும்ப அங்கிள்ன்னு சொல்லி உன் கிட்டேயிருந்து என்னை அன்னியமாக்கறே?” தன் மனதில் இருந்த உறுத்தலை அவர் கடைசியில் அவளிடம் கொட்டிவிட்டார்.

“அயாம் சாரி அங்கிள்… சாரி… சாரி… மாமா… நீங்க இப்படி ஃபீல் பண்ணுவீங்கன்னு நான் சுத்தமா நினைக்கவேயில்லை…. மனசுல எந்த உள்நோக்கமும் இல்லாமத்தான் நான் உங்களை அங்கிள்ன்னு சொல்லிகிட்டு இருக்கேன். அது தப்புன்னு நீங்க ஃபீல் பண்ணா… ப்ளீஸ் என்னை மன்னிச்சுடுங்க மாமா..”

“நீயே இன்னும், என் வீட்டுக்கு வரலே. ஏன்… நீயே சொல்லிட்டு வந்த மாதிரி, ட்ரெய்னிங் முடிஞ்சு சென்னைக்கே இன்னும் திரும்பி வரலே. எப்ப என் வீட்டுக்கு வருவேன்னு கேட்டா எனக்கு டயம் வேணுங்கறே? இந்த நிலையிலே, இன்னொரு கல்யாணத்தைப்பத்தி எப்படிம்மா நான் உங்கிட்ட பேசறது?”

“எனக்கு புரியலே மாமா.. என்னச் சொல்றீங்க நீங்க? இன்னொரு கல்யாணமா?” சுகன்யா ஒரு வினாடி திடுக்கிட்டுப்போனாள்.

“மீனாவை தங்களோட வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போகணும்ன்னு சீனுவோட அத்தையும், அவன் அம்மாவும், ரொம்பவே அவசரப்படறாங்கம்மா…”

“மாமா இது ரொம்பவும் சந்தோஷமான விஷயமாச்சே…!! இதைச் சொல்றதுக்கு எதுக்காக நீங்க இப்படி தயங்கறீங்க?” சுகன்யா நிதானமாக மூச்சு விட ஆரம்பித்தாள்.

Updated: May 27, 2021 — 4:24 am

4 Comments

  1. What happened to your old website.

  2. Will you please send me the manuscript of this entire Story by V. P. P. I will pay the cost.

  3. Nice story, very interesting, keep posting. Waiting for next part. ??

    1. I have never come across a very fine and beautiful love story at the near past. I would like to thank the author and also I want to put my request to write such love stories. There are so many sites for sex stories so you please write such love stories. This is my personal request.

Comments are closed.