கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 55 14

“எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் சொல்லு… அயாம் ஆல்வேஸ் ரெடி டு ஹெல்ப் யூ…” மெல்ல சிரித்தார் கோபாலன்.

“யெஸ் சார்… ஐ நோ இட் சார்…”

“உன்னை நான் மூணு மாசமா வாட்ச் பண்ணிகிட்டுத்தான் இருக்கேன். சம்திங்க் ஈஸ் மிஸ்ஸிங்… உன் வயசுல எனக்கும் ரெண்டு பசங்க இருக்காங்க… என்ன பிராப்ளம் உனக்கு… சொன்னாத்தானே தெரியும்?”

“சார்… உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சும் எனக்கென்ன பிரச்சனைன்னு கேட்டா நான் என்ன பதில் சொல்றது?” செல்வாவின் தலை இன்னும் குனிந்தே இருந்தது.

“செல்வா… என்னத்தப்பா நினைக்காதே… சுகன்யாவோட டில்லி போஸ்டிங் அவளுடைய முழு விருப்பத்தோட, அவகிட்ட நான் பர்சனலா பேசினதுக்கு அப்புறம் நடந்த ஒண்ணு. மொதல்லே அனுவைத்தான் அங்கே ரிடெய்ன் பண்றதா இருந்தேன்.”

“சார்…”

“அனுவுக்கு அடுத்த மாச ஆரம்பத்துல கல்யாணம் பிக்ஸ் ஆகுதாம். அந்த பையனும் சென்னையிலதான் வேலை செய்யறானாம். அய்தர் சுகன்யா ஆர் அனு இவங்க ரெண்டு பேருலே ஒருத்தர்தான் இப்போதைக்கு சென்னைக்கு வரமுடியும். சுகன்யாவும் மேல ஏதோ படிக்கப்போறேன்னு சொன்னா…”

“சார்… உங்களை நான் கொறை சொல்லலே. அனு ஈஸ் ஒன் ஆஃப் மை வெரி குட் ஃப்ரெண்ட்ஸ்… அவளுக்கு கல்யாணம் ஆகி, அவ தன் ஸ்பௌசோட சென்னையில இருக்கறதுல எனக்கும் சந்தோஷம்தான்.”

“யெஸ்…”

“ஆனா… சுகன்யா தில்லியிலே படிக்கப்போறேன்னு சொல்றதெல்லாம் சுத்த பொய். அவ சென்னைக்கு திரும்பி வந்தா இந்த ஆஃபிசுலே என் மூஞ்சை பாத்தே ஆகணும். அவளுக்கு என் முகத்தைப்பாக்க பிடிக்கலே… இதுதான் சார் உண்மை…” செல்வா விருட்டென தன் சீட்டிலிருந்து எழுந்தான்.

“செல்வா ப்ளீஸ்… ஒரு நிமிஷம் உக்காருப்பா. இப்பல்லாம் நீ சட்டு சட்டுன்னு எரிச்சல் படறே; சுகன்யாவை நீ தப்பா புரிஞ்சுகிட்டிருக்கே. உங்களோட பர்சனல் விஷயத்துல தலையிடறேன்னு நினைக்காதே… நீ எதை எதையோ உன் மனசுக்குள்ளே போட்டு வீணா கொழம்பிகிட்டு இருக்கே… உன் மனசை மட்டுமில்லே; உன் லவ்வரோட மனசையும் புண்ணாக்கிட்டே….!?”

Updated: May 27, 2021 — 4:24 am

4 Comments

  1. What happened to your old website.

  2. Will you please send me the manuscript of this entire Story by V. P. P. I will pay the cost.

  3. Nice story, very interesting, keep posting. Waiting for next part. ??

    1. I have never come across a very fine and beautiful love story at the near past. I would like to thank the author and also I want to put my request to write such love stories. There are so many sites for sex stories so you please write such love stories. This is my personal request.

Comments are closed.