கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 55 14

எதுக்கு இப்ப இவன் போன் பண்றான்? சுகு… சுகு… அயாம் சாரிப்பான்னு வழிவான். நானும் இவன் என்னைக் கொஞ்சற கொஞ்சல்லே மனசு மயங்கி, சொல்லுடா செல்வா… சொல்லுடா செல்வான்னு திரும்பவும் வழிஞ்சுக்கிட்டு நிக்கணுமா? நாலு நாள்ல்ல பழைய குருடி கதவை தொறடின்னு இவனே என் உயிரை வாங்குவான். இதே லொல்ள்ளாப் போச்சு இவன் கூட..!?

இவன் என்ன நினைச்சுக்கிட்டு இருக்கான்? ஆம்பிளை இவனுக்குத்தான் கோவம் வரலாம்… பொம்பளைக்கு வரக்கூடாதா? சுகன்யா வந்து கொண்டிருந்த காலை சட்டென டிஸ்கனெக்ட் செய்தாள்.

“என்னடா ஆச்சு…?”

“கால் டிஸ்கனெக்ட் ஆயிடிச்சி..”

“கட் ஆச்சா… இல்லே சுகன்யாவே உன்னை கட் பண்ணிட்டாளா?”

“என்னை கட் பண்ணிட்டாளா? அப்படி ஒண்ணும் இருக்காது.”

“இன்னொரு தரம் டிரை பண்ணிப்பாருடா..”

ரீடயல் ஐக்கானை அழுத்தினான் செல்வா. சுகன்யாவின் செல் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்தது. மறுமுனையில் அவனுடைய கால் திரும்பவும் கட் செய்யப்பட்டது. மூன்று நாட்கள் விடாமல் தொடர்ந்து சுகன்யாவை அவளுடைய செல்லில் தொடர்பு கொள்ள முயன்றான் செல்வா.

சுகன்யாவும், செல்வாவின் கால் வந்தபோதெல்லாம், அவனிடம் பேசவேண்டும் என அவளுடைய மனதின் ஒரு பகுதி விரும்பியபோதிலும், அவளுடைய மனதின் மறுபகுதி அவளை அவ்வாறு செய்ய அனுமதிக்கவில்லை. அந்த மனதின் மறுபகுதி, செல்வாவின் மீது அவளுக்கிருந்த சிறிதளவு சினத்தை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்திக்கொண்டிருந்தது.

டெல்லிக்கு சென்று சுகன்யாவை பார்க்கவேண்டுமென, செல்வாவின் மனதிலெழுந்த ஆவல் மெல்ல மெல்ல அடங்க தன்னையே வெறுத்துக்கொண்டான் செல்வா.

செல்வாதானே என் மூஞ்சியிலே அடிச்சான். அவனுக்கு நான் வேணும்னா, என் காதல் வேணும்னா, அவனே நேரா டெல்லிக்கு ஒரு தரம் வந்து என்னை பாக்கட்டுமே? அவனா வந்து என்னை பாக்காத வரைக்கும் நானும் அவன்கிட்ட நிச்சயமா பேசப்போறது இல்லே.

Updated: May 27, 2021 — 4:24 am

4 Comments

  1. What happened to your old website.

  2. Will you please send me the manuscript of this entire Story by V. P. P. I will pay the cost.

  3. Nice story, very interesting, keep posting. Waiting for next part. ??

    1. I have never come across a very fine and beautiful love story at the near past. I would like to thank the author and also I want to put my request to write such love stories. There are so many sites for sex stories so you please write such love stories. This is my personal request.

Comments are closed.