கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 55 14

“அயாம் சாரி அனு… உங்கிட்டேருந்து எதையும் நான் மறைக்க விரும்பலே. ஆனா சில விஷயங்களை சொல்றதுக்கு எனக்கு இன்னும் சரியான சந்தர்ப்பம் வாய்க்கலே… இதுதான் உண்மை. நம்ம கல்யாணம் முடியட்டும். அப்புறம்…”

“அப்புறம்??”

“செல்வாவும், சுகன்யாவும் திரும்பவும் ஒண்ணு சேரட்டும். நான்… செல்வா, சுகன்யா, நாங்க மூணு பேரும் ஒருத்தரோட ஒருத்தர், ஒரு குறுகிய காலத்துலே எப்படியெல்லாம் சம்பந்தபட்டுட்டோங்கறதை, உனக்கு நான் சொல்றேன்.”

“சரீங்க…” தன் சிவந்த கீழ் உதட்டை கடித்து அதை மேலும் சிவப்பாக்கிக் கொண்டாள் அனு.

“டியர்… இன்னும் கொஞ்சம் நாள் பொறுமையா இரு. என்னை நம்பு…” சம்பத் வெகு இனிமையாக புன்னகைத்தான்.

அனுவிடம் பேசிக்கொண்டே, மேஜையின் குறுக்கே தன் கையை நீட்டி செல்வாவின் வலது கரத்தை மெல்ல வருடினான் சம்பத். சம்பத் தன்னைத் தொட்டதும் செல்வா சிலிர்த்தான். சட்டென நிமிர்ந்து அவனைப் பார்த்தான். இப்போது செல்வாவை நோக்கி நட்புடன் புன்னகைத்துக் கொண்டிருந்தான் அவன்.

“ஓ.கே.. ஓ.கே.. உங்களை நம்பிட்டேன் நான். உங்க பின்னாடி வரவும் தயாராயிட்டேன். கல்யாணப் பத்திரிக்கையும் அடிச்சாச்சு.. இனிமே உங்களை விட்டுட்டு எங்கே ஓடறது?” அனுவின் முகத்தில் மீண்டும் சிரிப்பும், வெட்கமும் ஒன்றாக வந்தது. செல்வாவின் பக்கம் திரும்பினாள் அவள்.

“செல்வா…உன் ஹேண்ட்சம்மான மூஞ்சை ஏன் இப்படி அலங்கோலம் பண்ணி வெச்சிருக்கே? ஹூம்ம்? உனக்கு தாடியும் மீசையும் நல்லாவேயில்லை. பிச்சைக்காரன் மாதிரியிருக்கே; எனக்கே உன்னைப்பாக்க சகிக்கலே. இந்தக் கோலத்துல சுகன்யா மட்டும் உன்னைப்பாத்தா, அவளுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடும். என் ஃப்ரெண்டை நீ சாகடிச்சுடாதே…”

“ம்ம்ம்.. ப்ளீஸ் அனு.. நீ கொஞ்சம் சும்மா இருக்கியா?” செல்வா தன் தலையை குனிந்து கொண்டான். அவன் உடலுக்குள் சூடு ஏற ஆரம்பித்தது. ஓரக்கண்ணால் சம்பத்தை பார்த்தான். மீண்டும் தலையை குனிந்து கொண்டான்.

“இன்னைக்கு ஈவீனிங், நாங்க ரெண்டு பேருமா, எங்க திருமணத்துக்கு உங்களையெல்லாம் அழைக்கறதுக்காக உங்க வீட்டுக்கு வர்றோம்.”

“அவசியம் வாங்க… ராத்திரிக்கு எங்க வீட்டுலதான் நீங்க ரெண்டு பேரும் டிஃபன் சாப்பிடணும்…” செல்வா சம்பத்தை கெஞ்சலாகப் பார்த்தான்.

“செல்வா.. நான் உன் வீட்டுக்கு வர்றப்ப, உன் சுத்தமான மூஞ்சை பாக்க ஆசைப்படறேன். இல்லேன்னா அங்க நடக்கறதே வேற… இப்பவே சொல்லிட்டேன் ஆமாம்..” அனு செல்வாவின் முதுகில் மீண்டும் ஒரு முறை ஓங்கி அடித்தாள். தன் முகம் சிவக்க செல்வா அவளை நிமிர்ந்து பார்த்தான். தன்னைப் பார்த்தவன் தலைமுடியை நட்புடன் ஒரு முறை கலைத்தாள் அனு.

சம்பத் தன் இருக்கையிலிருந்து எழுந்தான். செல்வாவின் தோளில் தன் கையைப் போட்டுக்கொண்டான். அவனுடன் வெளியில் வந்தவன், கேண்டீனுக்கு எதிரிலிருந்த பெரிய அரசமரநிழலில் நின்றான். அனு அவர்கள் இருவரையும் புன்னகையுடன் பார்த்தவாறு நின்றிருந்தாள்.

“செல்வா.. என்னை நீங்கத்தவறா புரிஞ்சுக்கிட்டு இருக்கீங்க. சுவாமிமலையிலே உங்க எங்கேஜ்மென்டுக்கு முன்னாடி நடந்ததையெல்லாம் இன்னும் நீங்க மறக்கலேன்னு நான் நினைக்கிறேன். என்னை நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டா பரவாயில்லே. அதனால யாருக்கும் நஷ்டமில்லே. ஆனா சுகன்யாவையும் நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்களே. இதனால நிறையபேருக்கு நஷ்டம். இதை மட்டும் நீங்க தயவுசெய்து புரிஞ்சுக்கணும்.”

“ப்ச்ச்ச்…” செல்வா விரக்தியாக சூள் கொட்டினான்.

“நான் சொல்றதை கேளுங்க. சுகன்யா உங்களைத்தான் லவ் பண்ணா. உங்களை மட்டுமேதான் லவ் பண்ணிகிட்டு இருக்கா. என் அனு சொன்னது மாதிரி, பழைய உற்சாகமான, தமிழ்செல்வனா, உங்க வீட்டுக்கு எங்களை நீங்க வரவேற்கணும்.”

“ஷ்யூர்… முழு மனசோட, முழு விருப்பத்தோட, உங்களை நான் என் வீட்டுக்கு கூப்பிடறேன்… சம்பத் கண்டிப்பா நீங்க வீட்டுக்கு வரணும்…” செல்வா, சம்பத்தின் கைகளை பற்றிக்கொண்டான்.

“அனு உங்களோட நல்ல ஃப்ரெண்ட். சுகன்யா என்னோட மாமா பொண்ணு. அவ எனக்கு மாமா பொண்ணு மட்டும்தான்; உங்களுக்கு மட்டும்தான் அவ முழுமையாக சொந்தம். இரு தரப்பிலேருந்தும், நீங்க எனக்கு ரொம்ப நெருங்கியவரா ஆயிட்டீங்க. எங்க கல்யாணத்துக்கு நீங்க உங்க குடும்பத்தோட, உங்க ஃப்ரெண்ட் சீனுவோட, கண்டிப்பா சுவாமிமலைக்கு வரணும்.”

“நான் உங்களை தப்பா புரிஞ்சுகிட்டது உண்மைதான் சம்பத்… அதுக்கு இப்ப நான் ரொம்பவே அனுபவிச்சுக்கிட்டு இருக்கேன். அயாம் சாரி… என் தப்புக்கு உங்கக்கிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்.”

“செல்வா… யாருகிட்டே குறை இல்லே?. உங்க வருத்தத்தை நீங்க சுகன்யாகிட்ட சொல்லுங்க… அதுபோதும். திரும்பவும் சொல்றேன். சுகன்யா லவ்ஸ் யூ ஒன்லி…” செல்வாவின் முதுகில் ஆதரவாக தட்டிக்கொடுத்த சம்பத், அனுவுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தான்.

Updated: May 27, 2021 — 4:24 am

4 Comments

  1. What happened to your old website.

  2. Will you please send me the manuscript of this entire Story by V. P. P. I will pay the cost.

  3. Nice story, very interesting, keep posting. Waiting for next part. ??

    1. I have never come across a very fine and beautiful love story at the near past. I would like to thank the author and also I want to put my request to write such love stories. There are so many sites for sex stories so you please write such love stories. This is my personal request.

Comments are closed.