கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 46 10

நீ ஏன்டா வெட்டியா அவங்க நடுவுல நுழையப் பாக்கறே? உன் பருப்பு அங்க வேகாதும்மா ராஜா! லெட் தெம் பீ ஹாப்பி. எங்கிருந்தாலும் வாழ்கன்னு அந்த காதல் ஜோடியை வாயார வாழ்த்திடுடா. உன் பஜ்ரங்பலி பாத்து பாத்துதான் முடிச்சுப் போடறான்டா…

ம்ம்ம்.. எப்பவும் நீ நாலு தேங்காயை அவனுக்கு லஞ்சமா கொடுக்கறேன்னு சொன்னா, அவன் மனசு குளுந்து போய் சுகன்யா மாதிரி டக்கர் ஃபிகரை உன் மடியிலே கொண்டாந்து போடுவானா? நாட்டுல வெலை வாசி ரொம்ப ஏறிப்போயிருக்குடா… வித்தியாசமா யோசனை பண்ணுடா.. உன் வேண்டுதலை மாத்துடா… உன் பிரார்த்தனையை பெட்டரா ஆக்குடா.

ஆனா அனுமந்தனோட பழைய அக்கவுண்டை மட்டும் எந்தக் காரணத்தைக் கொண்டும் மறந்துடாதே! கண்டிப்பா உனக்கும் ஒரு காலம் வரும்… பொறுமையா இரு… நீயும் பைக்ல ஒருத்தியை இப்படி உக்கார வெச்சிக்கிட்டு பீச்சு ரோடுல ஜாலியா சுத்தி வரலாம்… அது வரைக்கும் பஜ்ரங்பலியோட பேலன்ஸ் ஷீட்டை நீட் அண்ட் கீளீனா மெய்ன்டெய்ன் பண்ணு.. அதுல
“ஹீராஃபெரி’ எதுவும் பண்ணிடாதே.

ஆஞ்சேனேயன் அக்கவுண்ட்ல அடிஷன் ஆகலாம்… ஆனா தவறிப்போயும் டிலீஷன் ஆயிடக்கூடாது. அவன் கொஞ்சம் டிஸிப்ளின் ஆன தெய்வம்… ஆப்பு வெச்சுடுவான் உனக்கு… உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்.. அட்லீஸ்ட் நாலு தேங்காய்க்கு பதிலா எட்டுத்தேங்காய் ஒடைக்கறேன்னு இனிமே வேண்டிக்கோ..! அவன் மனசு அவனுக்கு அட்வைஸ் செய்தது.

ஏனோ தெரியவில்லை, சாலையில் நடந்து போனவர்கள் அவனுக்கு தீடிரென சற்று மங்கலாக தெரிந்தார்கள். சுனில், தன் பாண்ட் பாக்கெட்டிலிருந்து சட்டென கைக்குட்டையை எடுத்து தன் கண்களை துடைத்துக்கொண்டான். சுனீல்… என்னடா இது… குழந்தை மாதிரி.. அழறயா என்ன? அவன் மனம் திடுக்கிட்டது.

சுனில் தன் முகத்தையும் ஒருமுறை நன்கு அழுத்தி துடைத்துக் கொண்டான். நீளமான பெருமூச்சொன்று அவன் கண்டத்திகிருந்து எழுந்தது. இப்போது அவனுக்கு ரோடில் போகும் வாகனங்களும், பாதசாரிகளும் பளிச்சென தெரிந்தார்கள். ச்சே.. ச்சே.. நான் எதுக்கு அழுவணும்? வெயில் அடிக்குதுல்ல.. நெத்தியில வேர்த்துப் போற மாதிரி கண்ணுலயும் வேக்குதோ என்னவோ?

பஜ்ரங்பலி…! சுகன்யா ஏற்கனவே யாருக்கோ செட் ஆயிருக்கற விஷயம் தெரியாம, அவசரப்பட்டு உன் சந்நிதியிலே நான் ஒடைக்கறேன்னு சொன்ன நாலு தேங்காய் உனக்கு இப்ப வேணாம்ன்னு நீ முடிவு பண்ணிட்டே… இதுல உன் தப்பு ஒண்ணுமில்லே… எனக்கு செலவு ஏன் வைக்கணும்ன்னு நீ நினைக்கறப் போல இருக்கு..?

சுகன்யாவை பாத்த அடுத்த பத்தாவது நிமிஷத்துல உனக்குத் தேங்காய் ஒடைக்கறேன்னு வேண்டிக்கிட்டது என் தப்புதாம்பா… ஆனா பாத்தவுடனேயே, யோசனை எதுவும் இல்லாம வர்றதுக்கு பேருதானேப்பா காதல்.. அந்த அளவுக்கு அவ என்னை இம்ப்ரஸ் பண்ணிட்டா..

காதல் என்ன சொல்லிட்டா வரும்.. என் வயசு அந்தமாதிரிப்பா… இது உனக்கு புரியலையா? நீ பிரம்மச்சாரின்னு சொல்றாங்க… அதான் உனக்கு என்னை மாதிரி பசங்களோட மனசு புரிய மாட்டேங்குது…

உன் மனசுல என் மேல எப்ப இரக்கம் வருமோ அது எனக்குத் தெரியலை… அதுக்காக நான் உன்கிட்ட வீணா கோச்சிக்கப் போறதும் இல்லே… சண்டைப் போடப்போறதும் இல்லே… கஜினி மொகம்மது பதினேழு தரம் இண்டியாவை ரெய்ட் வுட்டானாம்.. அவனுக்கு எந்தவிதத்துல நான் கொறைஞ்சு போயிட்டேன்.. நானும் விடப்போறது இல்லே… ஜெயிச்சுக்காட்டறேன்…

ஹேங்… நிதானமா உனக்கு என்னைக்குத் தோணுதோ அன்னைக்கு ஒரு ஃபிகரை எனக்கு செட் பண்ணிக்குடு.. பிகர்ன்னு கேட்டதும், எதாவது சப்பையா… டொக்கா… போனாப் போவுதுன்னு நொண்டி குதிரை எதையாவது செட் பண்ணி என்னை டீல்ல வுட்டுடாதே…