கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 46 10

“உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்.. ஆம்பிளை அவசரப்படுவான்… என்னைக்கு இருந்தாலும்.. பொட்டைச்சித்தான் ஜாக்கிரதையா, நிதானமா இருக்கணும்… எதாவது எக்குத் தப்பா ஆயிட்டா… ஒண்ணு கெடக்க ஒண்ணு நடந்துட்டா… ஊரே உன்னைத்தான் கொறை சொல்லும்.. இன்னும் ஒரு மாசம்தானேடீ.. அதுவரைக்கும் பொறுமையா இரு…” வேணி சுகன்யாவுக்கு அவள் காதில் ஓதினாள்.

“ரொம்ப தேங்க்ஸ்டீ… யூ ஆர் சோ ஸ்வீட்…” வேணியின் கன்னத்தில் நட்புடன் முத்தமிட்டாள், சுகன்யா.

“உன் முத்தத்துக்காக… செல்வா மேல காத்துக்கிட்டு இருக்கான். நாளைக்கு, அவன் உனக்கு எங்கங்கல்லாம் முத்தம் குடுத்தான்னு மட்டும் என் கிட்ட கரெக்டா சொல்லிடு. இப்ப உன் முத்தத்தை எனக்கு குடுத்து வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்காதே…”

“வேணீ… ஜாக்கிரதைன்னும் சொல்றே… என் மூடையும் நீயே ஏத்தி விடறே? நான் என்னடீப் பண்ண? சுகன்யா சிணுங்கினாள்.

“சாம்பிளுக்கு ஒண்ணை மட்டும் காமிச்சி அனுப்பிடு.. சிரிச்சிக்கிட்டே ஜோடியா நீ அவன் கூட பைக்ல வந்ததைப் பாத்ததும் எனக்கே செமையா கிக் ஏறிடிச்சிடீ…” வேணி தன் தோழியின் கன்னத்தை ஆசையுடன் கிள்ளினாள்.

“போடீ… கிண்டல் பண்ணாதடீ.. உனக்கு என்னடீ பிரச்சனை.. நீ கல்யாணம் ஆனவ.. ஆசைப்படும் போதெல்லாம் அனுபவிக்கலாம்.. ஆனா ரொம்ப அலையாதே… வயித்துல ஏற்கனவே ஒண்ணை சொமந்துக்கிட்டு இருக்கே நீ…
“ சுகன்யா காஃபி கோப்பைகளுடன் வேகமாக மாடியேறத் தொடங்கினாள்.
செல்வா, சுகன்யாவின் அறைக்கு வெளியில் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் சேரில் உட்க்கார்ந்து கொண்டிருந்தான். கையில் காஃபியுடன் வந்த சுகன்யா, மாடி கைப்பிடி சுவரின் மேல் காப்பிக்கோப்பைகளை வைத்துவிட்டு, பூட்டப்பட்டிருந்த அறையைத் திறந்தாள்.

கையில் காஃபியுடன் அறைக்குள் நுழைந்த செல்வா, வாசல் படியிலேயே நின்று தன் கண்களை சுழற்றி அறையை ஒரு முறை நோட்டமிட்டான். இதற்கு முன்னால் வாயிலுக்கு நேராக போடப்பட்டிருந்த இரும்புக் கட்டில், சுவரோடு ஒட்டி இருந்த சோஃபாவின் இடத்திலும், சோஃபா இருந்த இடத்தில், கட்டிலும் இடம் மாற்றி போடப்பட்டிருந்தன.

கட்டிலின் மேல், சுகன்யாவின் நைட்டி ஒன்று அலங்கோலமாக கிடந்தது. காலையில் அலுவலகம் கிளம்பும் அவசரத்தில், தன் உடலிலிருந்த நைட்டியை கழட்டி, அப்படியே ஈரத்துடன் விசிறி எறிந்து விட்டு அவள் வந்திருக்கவேண்டுமென அவன் நினைத்துக்கொண்டான்.

‘உக்காருங்களேன்…” அறையின் குழல் விளக்கை ஆன் செய்தாள் சுகன்யா. கையில் காஃபியை எடுத்துக்கொண்டாள்.

“இருக்கட்டும்பா…” முனகிக்கொண்டே கட்டிலின் மேல் உட்கார்ந்தான், செல்வா.

“சுகு… கதவை மூடிடுடீச் செல்லம்..”

“கதவை எதுக்கு மூடணும் இப்ப…” சுகன்யா ஒன்றும் புரியாதவள் போல் கேட்டாள்.

“இப்ப நீ முகம் கழுவுவே.. டிரஸ் மாத்துவேல்லா.. கதவை தொறந்து இருக்கேன்னு சொன்னேன்…” செல்வா கண்ணடித்தான்.

“எனக்கு எல்லாம் தெரியும்.. நீ கொஞ்ச நேரம் பொத்திக்கிட்டு இரு…” சுகன்யா விஷமமாகச் சிரித்துக்கொண்டே பாத்ரூமுக்குள் நுழைந்தாள்.

காஃபியை குடித்து முடித்த செல்வா, கட்டிலில் கிடந்த நைட்டியை எடுத்து தன் முகத்தில் அழுத்தி நீளமாக ஒருமுறை முகர்ந்தான். சுகன்யாவின் உடல் மணம், பவுடர் நெடி, பாடி ஸ்ப்ரேயின் மெல்லிய வீச்சம், எல்லாம் கலந்த ஒரு கலவையான வாசம், அந்த நைட்டியிலிருந்து அவன் நாசிக்குள் நுழைந்தது.

நேற்றிரவு சுகன்யா தன் கூந்தலில் மல்லிகைப் பூவை சூடிக் கொண்டிருந்திருக்க வேண்டும் என செல்வா நினைத்தான். அந்த பூவின் இனிமையான வாசமும் அந்த நைட்டியில் இன்னும் சிறிது மிச்சமிருந்தது.

“சரியான போங்குடா நீ… இது என்ன வேலை? வெளக்கு வெக்கற நேரத்துல அழுக்கு நைட்டியை மோந்து மோந்து பாக்கறயே… வெக்கமா இல்லே உனக்கு? தன் முகத்தைக் கழுவிக்கொண்டு, பாத்ரூமிலிருந்து வெளியில் வந்த சுகன்யா ஒரே பாய்ச்சலாக பாய்ந்து, அவன் கையிலிருந்த தன் நைட்டியைப் வெடுக்கென அவன் கையிலிருந்து பிடுங்கினாள்.