கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 46 10

“திஸ் இஸ் ப்யூர்லி யுர் ஆஃப்ஷன்.. இது ஒரு ரொட்டேஷனல் போஸ்ட்… இதை நீ அக்செப்ட் பண்ணிக்கிட்டா டெபுடேஷன் அலவன்ஸ் மட்டுமில்லாம, தங்கறதுக்கு கவர்ன்மெண்ட் குவார்டர்ஸ், இதெல்லாம் உடனடியா அங்கே உனக்கு கிடைக்கும்…”

“இப்ப எனக்கு என்ன சொல்றதுன்னு புரியலை சார்..”

“இப்போதைக்கு இந்த விஷயத்தை உன் மனசோட வெச்சுக்கோம்மா… இந்த ஒரு வருஷ டென்யூர் போஸ்டிங்க் முடிஞ்சதும் அடுத்த அஞ்சாறு வருஷத்துக்கு உனக்கு நார்த்துக்கு போகவேண்டிய தொந்தரவெல்லாம் இருக்காது.”

“ம்ம்ம்…”

“உன் ஃப்ரெண்ட் வித்யாவும் அப்படித்தான் ஆரம்பத்துல ஒரு வருஷம் டில்லியிலே இருந்துட்டு வந்தாங்க…”

“நீங்க சொல்றது சரி சார்… ஆனா இதுக்காக என் கல்யாணத்தை ரொம்பவே தள்ளிப் போட முடியாதே சார்..”

“நான் உன்னோட வெல்விஷர்… உன் பர்சனல் லைஃப், உன் ப்ரொஃப்ஷனல் லைப், ரெண்டையும் நீ திட்டமிடறதுக்கு வசதியா, இந்த இன்ஃபர்மேஷனை உனக்கு குடுக்கறேன்… ட்ரெய்னிங் நீ போயே ஆகணும்… மத்தபடிக்கு அடுத்த ஒரு வருஷம் அங்கே தொடர்ந்து இருக்கறது உன்னோட தனிப்பட்ட விருப்பம்.. புரிஞ்சுதா..?”

“எஸ் சார்…”

“ஆல் த பெஸ்ட் டியர்…”

“தேங்க் யூ சார்..”

ம்ம்ம்.. நேத்து வரைக்கும் என் கதை வேற… இப்ப இந்த மேட்டர்ல, நானா எந்த முடிவும் எடுத்துட முடியாது. செல்வாகிட்ட டிஸ்கஸ் பண்ணியே ஆகணும். இன்னும் என் கல்யாணமே முடியலை… என் கழுத்துல அவன் தாலியேறவே இல்லை.. என் விருப்பப்படி எந்த விஷயத்திலேயும் சட்டுன்னு ஒரு முடிவு எடுக்கமுடியாதபடிக்கு, நிச்சயதார்த்தம் முடிஞ்சதுமே, எனக்கு கால் கட்டுகள் வந்திடிச்சே.. சுகன்யா மனதுக்குள் குழம்பியவாறே தன் அறைக்குள் நுழைந்தாள்.

***

மாலை ஐந்தரை மணி வரை, சுகன்யா தன் தலையை நிமிர்த்தாமல், தனக்கு மார்க் செய்யப்பட்டிருந்த பெண்டிங் ரெசீட்களுக்கு பதில் எழுதி, அதனுடைய தொடர்புள்ள கோப்புகளில் நுழைத்து, சாவித்திரியின் மேஜையில் குவித்துக்கொண்டிருந்தாள்.

தன் சீட் வேலையை கவனித்துக்கொண்டே, அவ்வப்போது, சுனிலின் பக்கம் பார்வையை வீசிக்கொண்டிருந்தாள், சுகன்யா. சொல்லி முடிக்கறதுக்கு முன்னாடியே, சட்டுன்னு சொல்ல வர்ற விஷயத்தைப் புரிஞ்சிக்கறான். புத்திசாலியா இருக்கான்… ஆனா புத்திசாலிங்களை சாவித்திரி தன் கீழே வெச்சுக்கமாட்டாளே..

‘எஸ்…மேடம்’
“எஸ்… மேடம்’ – இப்படி நிமிஷத்துக்கு ஒரு தரம் தேவையில்லாம தனக்கு சல்யூட் அடிக்கற நாகராஜன் மாதிரி ஆளுங்களைத்தானே அவளுக்குப் பிடிக்கும்…

நிஜமாவே, இந்த சுனில் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையில கருமமே கண்ணாய் இருக்கானே? ம்ம்ம்… பரவாயில்லே… போறப் போக்கை பாத்தா… இந்த டாட்டா என்ட்ரி வேலையிலேருந்து நான் தப்பிச்சுடுவேன் போல இருக்கே… மனசுக்கு திருப்தியாக இருந்தது.