கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 46 10

அனுமந்தா! நல்லாக் கேட்டுக்கப்பா… டேக் யுவர் ஓன் டயம்… ஆனா சுகன்யா மாதிரி ஒரு ஷோக்கு பிகரை எனக்கு செட் பண்ணிக்குடுத்துடு… அதுக்கு மேல எதுவும் நான் உன்னைக் கேக்க மாட்டேன்… நான் பொறந்ததுலேருந்தே உன் பக்தன்.. உன் பக்தன் மனசை நோக அடிச்சுடாதே..

ஒண்ணு மட்டும் நீ கீளீனா கேட்டுக்க… நம்ம ரெண்டு பேருக்கு நடுவுல இருக்கற டீலிங்ல்ல, நான் போட்ட கண்டீஷன்ல்லேருந்து என்னைக்கும் நான் பின்வாங்க மாட்டேன்… ஏற்கனவே நான் உனக்கு இருபத்தெட்டு தேங்காய் ஒடைக்கணும்… ஏழு தரம் நீ என் மனசை செதறு காயா உடைச்சிருக்கே… பரவாயில்லே.. எல்லாம் நல்லதுக்குத்தான்…

இப்ப நாளைக்கு நான் உன் சந்நிதியிலே சுகன்யா பேர்ல உடைக்கறேன்னு சொன்ன அந்த நாலு காயையும் உன் கணக்குலே சேத்துக்கோ… மொத்தம் முப்பத்து ரெண்டு காய் நான் உனக்கு ஒடைக்கணும்… எட்டாவது தரமும் நீ என் மனசை ஓடைச்சிட்டியே… அதை நெனைச்சாத்தான் எனக்கு ரொம்ப ஃபீலிங்கா இருக்குப்பா…

செல்வாவின் பைக் சுனிலின் பார்வையிலிருந்து மறைந்தது. அதே நேரத்தில் பீச் ரயில் நிலையத்துக்கு போகும் பஸ் ஒன்று வந்து நின்றது. பஸ்ஸின் சன்னலோரத்தில், அழகான, இளமையான, துள்ளும் உடலுடன், முகத்தில் பொங்கும் புன்னகையுடன், நீலப்புடவையில் உட்கார்ந்திருந்த, இளம் பெண் ஒருத்தி தன்னையே உற்று நோக்குவது போல் சுனிலுக்குத் தோன்றியது.

சுனிலின் மனதில் மீண்டும் ஒரு சலனம். சலனத்தால் அவன் உடலில் சட்டென ஒரு இன்பச் சிலிர்ப்பு உண்டானது. அந்தச் சிலிர்ப்பின் தாக்கத்தில், சுனில் அவளை நோக்கி இயல்பாக இதமாக புன்னகைத்தான். அவளும் இவனை நோக்கி தன் இதழ்கடையோரத்தில் ஒரு சிறிய புன்னகையை நிதானமாக மிளிரவிட்டாள். சுகன்யாவின் முகம் அவன் நினைவுகளின் அடுக்கில் மெல்ல மெல்ல கீழ் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தது.

‘ஜெய் பஜ்ரங்பலி’ சூப்பரா சுகன்யா ரேஞ்சுக்கு இருக்காளே…! இந்த பிகர் மட்டும் எனக்கு செட் ஆயிட்டா உனக்கு நாலு தேங்காய்க்குப் பதிலா எட்டுத் தேங்காய் ஒடைக்கறேண்டா… மனதுக்குள் தன் பிரிய தெய்வத்தை நினைத்துக்கொண்டு, வேகமாக ஓடி, ஓடத் தொடங்கிய அந்த பஸ்ஸுக்குள் தொற்றிக்கொண்டான், சுனில்.

சன்னலோரத்தில் உட்கார்ந்திருந்த நீலவண்ணச் சேலைக்காரி, ஸ்டைலாக புட்போர்ட் அடித்தவனை, ஒரு முறை தன் தலையை திருப்பி அவசரமாகப் பார்த்தாள். தன் தலைமுடியை சீராக்கிக்கொண்டவளின் முகத்தில் அழகான சிரிப்பொன்று மலர்ந்திருந்தது.
“ஹாய் செல்வா… வாங்க… உள்ளே வாங்க… எப்டீ இருக்கீங்க…?” வீட்டின் கிரில் கதவைத் திறந்த வேணி செல்வாவை கண்டதும், கனிவான இளம் புன்னகையொன்றை அவன் பக்கம் வீசினாள்.

“நல்லாருக்கேன்.. நீங்க எப்படீ இருக்கீங்க.. மேடம்..?”

“மேடம் என்னா… மேடம்… வேணீன்னே கூப்பிடுப்பா… எனக்கும் உன் வயசுதான் ஆகுது…” இயல்பாக புன்னகைத்தாள், அவள்.

“தேங்க் யூ வேணீ…”

“அப்புறம்… தீடீர்ன்னு இவ்வளவு தூரம்..?”

“சுகன்யாவை ட்ராப் பண்ணிட்டு போவலாம்ன்னு வந்தேன்.. அது இருக்கட்டும்… என் வயசு உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“ம்ம்ம். உன் பயோடாட்டவே எனக்குத் தெரியும் கண்ணூ…” வேணி கிண்டலாகச்சிரித்துக்கொண்டே சுகன்யாவை நோக்கினாள்.

“அய்ய்யோ… அப்டீன்னா உங்கக்கிட்ட நான் ஜாக்கிரதையா பேசணும்…” செல்வா போலியாக பயந்தான்.

“செல்வா.. நீ இவளை சும்மாவாச்சும் ட்ராப் பண்ண வந்திருக்க்கியா? புரியுது.. புரியுது… எஞ்சாய்.. எஞ்சாய்.. கல்யாணத்துக்கு முன்னாடியே ஹனிமூனா.. சுகன்யா கில்லாடீடி நீ…”

ஹேய்.. வேணீ… அடங்குடீ…” சுகன்யா அவள் இடுப்பைக் கிள்ளினாள்.

“உன் ஆளை வீட்டுக்கே தள்ளிகிட்டு வர்ற அளவுக்கு உனக்கு ஒடம்புல குளிர் விட்டுப் போச்சா… குமார் மாமா வீட்டுக்கு வரட்டும்… இன்னைக்கே பத்த வெச்சிடறேன்…! ஒரு கன்செஷன் வேணா உனக்குக் குடுக்கறேன்…”

“சொல்டி தாயே…?” சுகன்யா சிணுங்கினாள்.

“அடிக்கற கூத்தை சீக்கிரமா அடிங்க.. ஆனா இருட்டறதுக்குள்ள செல்வாவை பேக் பண்ணி அனுப்பிடு…” வேணி செல்வாவை நோக்கி கண்களை சிமிட்டினாள்.

“சும்மா இருடீ… மல்லிகா அத்தை கொஞ்சம் ஸ்வீட்டும், மிக்சரும் வீட்டுல பண்ணாங்களாம்… அதை உனக்கு குடுத்துட்டுப் போவலாம்ன்னு வந்திருக்காரு இவரு…”

“ஆமாம்டீ… எனக்கு இன்னும் காது குத்தலே… இந்த வயசுல அது ஓண்ணுதான் பாக்கி எனக்கு… என் மேல இரக்கப்பட்டு எனக்கு காது குத்த நீ வந்திருக்கே… உன் பிளான் என்னன்னா… என் காதை பொத்தலாக்கி… அதுல ஒரேவழியா ஒரு பூவையும் சொருவலாம்ன்னு பாக்கறே? ஆனா இதெல்லாம் என் கிட்ட நடக்காது…”

வேணி ரோஜா பூவாய் மலர்ந்து கொண்டிருந்தாள். அவள் சிரிப்பிற்கு ஏற்ப அவளுடைய கட்டான உடலும் குலுங்கியது. செல்வா அவள் சிரிக்கும் அழகையே கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

“வேணீய்…சும்மா இருடீ… போதும்டீ… சும்மா மொக்கைப் போடாதடீய்ய்…” சுகன்யா அவள் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.

“உனக்கு முன்னாடீ பொறந்தவடீ நான்… உனக்கு முன்னாடீ தாலி கட்டிக்கிட்டவடீ நான்… உன் வுட் பீ மாமியார் குடுத்தனுப்பிச்ச ஸ்வீட் பாக்கெட்டை, உன் ஆஃபீசுலேயே வேலை செய்யற, உன் வுட் பீ, உன்கிட்டவே குடுத்து அனுப்பி இருக்கக்கூடாதா? இதுக்கு இவ்வளவு தூரம் மெனக்கெட்டு, உன் முந்தானையை புடிச்சிக்கிட்டு வரணுமா?” தன் கண்களை அகல விரித்து அழகாக வசனம் பேசி சுகன்யாவின் இடுப்பில் கிள்ளினாள், வேணி.

“வேணீ… அதிரசம் உங்களுக்கு பிடிக்கும்ன்னு என் அம்மாகிட்ட நீங்க சொன்னீங்களாம்… அதனால உங்களுக்கும் கொஞ்சம் மிக்சரும், அதிரசமும் அம்மா குடுத்து அனுப்பி இருக்காங்க… நேரா நீயே கொண்டுபோய் வேணிக்கிட்ட குடுத்துட்டு வாடான்னு அம்மா சொன்னாங்க… அதான் வந்தேன்…” செல்வா அசட்டுத்தனமாக சிரித்தான்.

“பொய்.. பொய்.. பொய்..” வேணி கண்களை விரித்து, தன் தலை முடியை பின்னால் தள்ளிக்கொள்ளத் தன் இருகைகளையும் கேஷூவலாக உயர்த்தினாள்.