கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 46 10

“மேடம்… நீங்க சரின்னு சொன்னா… லஞ்ச்க்கு போய் வந்திடட்டுமா?” மதியம் ஒன்றரை மணிவாக்கில் நமட்டுத்தனமாக சிரித்தான், சுனில்.

“என்ன மிஸ்டர் கிண்டலா..?”

“நோ.. நோ… என்னோட இம்மீடியட் பாஸ் நீங்கதானே… அதான் உங்க பர்மிஷனை கேக்கிறேன்…” தன் தலையை தாழ்த்தி கண்களை, சாவித்திரியின் பக்கம் திருப்பி சப்தமில்லாமல் சிரித்தான்.

ஒரு நாள் முழுசா கழியலே… அதுக்குள்ள தேவையில்லாம எதுக்காக இவன் வம்பை வெலைக்கு வாங்கறான்..? தன் வாயின் மேல் சுட்டு விரலை வைத்து, சுனிலை தன் கண்களை அகல விரித்து, முறைத்தாள், சுகன்யா.

***

மாலை ஐந்தரை மணி அளவில், தோளில் ஒரு பையுடன் செல்வா அவள் சீட்டுக்கு வந்தான். சுனிலும், சுகன்யாவும் வெகு நெருக்கமாக உட்கார்ந்து அன்று செய்யப்பட்ட என்ட்ரீசை சரி பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

“சுகு… வேலை முடிஞ்சுதாம்மா… கிளம்பலாமா?” நிச்சயதார்த்ததுக்கு பின் அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளுவது அதுதான் முதல் தடவை. செல்வா முகத்தில் பொங்கும் மிதமிஞ்சிய உற்சாகத்துடன் அறைக்குள் நுழைந்தான். சாவித்திரி தன் தலையை மெல்ல நிமிர்த்தினாள்.

“செல்வா.. ஆஃபிசுல என்னை சுகன்யான்னுதான் கூப்பிடனும்ன்னு எத்தனை தரம் சொல்லியிருக்கேன் உனக்கு… சனியன் புடிச்ச சாவித்திரி அங்க உக்காந்து இருக்கா… அவ காதுல விழுந்தா மொத்தமா எரிஞ்சிப் போயிடுவா…” மெல்ல முனகினாள் சுகன்யா. அவள் முகத்தில் அவனைப் பார்த்த மகிழ்ச்சி பட்டெனப் பற்றிக்கொண்டது.

சுனில் அவர்கள் இருவரையும், மாறி மாறிப் பார்த்தான். பஜ்ரங்பலி… இவன் யாருப்பா…? ஆளும் ஷோக்காத்தான் இருக்கான்… சுகன்யாவை.. ரொம்ப உரிமையா
“சுகு”ன்னு கூப்பிடறான்?? சுகன்யா இவனைப் பாத்ததும் மத்தாப்பூவா மலர்ந்து போயிட்டா…!? முகத்துல அப்படி ஒரு மகிழ்ச்சியும், வெக்கமும் கலந்து மின்னுதே? உனக்கு செதறு காய் வேணுமா… வேணாமாப்பா?

“ம்ம்ம்..
“ சுனில் என்று ஒருவன் அங்கிருப்பதையே உணராதவன் போல் செல்வா இங்குமங்கும் பார்த்தான்.

“உக்காரேன்.. இன்னொரு பத்து நிமிஷ வேலை இருக்கு… முடிஞ்சதும் கிளம்பிடலாம்…”

“மிஸ்டர் சுனில்… இன்னைக்கு நீங்க பண்ண என்ட்ரீஸை நாளைக்கு வெரிஃபை பண்ணலாமா? இந்த டாட்டாவை நாம யாருக்கு பார்வேர்ட் பண்ணணுமோ அவரே வீட்டுக்கு கிளம்பிட்டார்..” சுகன்யா அவனை சற்று கெஞ்சலாக நோக்கினாள். பின் செல்வாவை நோக்கி மென்மையாக சிரித்தாள்.

“மேடம்.. சார் உங்களுக்காக வெய்ட் பண்றார்… உங்களுக்கு எதாவது முக்கியமான வேலை இருக்கலாம்… நீங்க கிளம்புங்க… இதெல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்…” சுனில் அவளை நோக்கி அழகாக புன்னகைத்தான்.

ஏனோ தெரியவில்லை… சுகன்யா, சுனிலிடம் சிரித்தபடியே பேசியதையும், சுனில் அவளுக்கு கொடுத்த இயல்பான பதிலையும், கூடவே அவன் முகத்தில் தோன்றிய மிக மிக மெல்லிய சிரிப்பையும், அந்த சிரிப்பில் தெரிந்த குறும்பையும், செல்வாவால் முழுமையாக ரசிக்க முடியவில்லை.

யார் இவன்? புதுசா இருக்கான்.. இங்கே எங்கேயும் பாத்த முகமா தெரியலியே? டாட்டா என்ட்ரி ஆப்பரேட்டரா..? அப்படின்னா எனக்குத் தெரியாம அப்பாயின்ட் ஆகியிருக்க முடியாதே? சுகன்யா ஏன் இவன் கிட்ட அனாவசியமா கொஞ்சறா? அவன் முகம் லேசாக சுருங்கியது.

“பை த வே.. செல்வா… இவர் மிஸ்டர் சுனில்… புதுசா இந்த செக்ஷ்ன்ல்லே டேரக்ட் அஸிஸ்டண்டா ஜாயின் பண்ணியிருக்கார்… சுனில்… இவர் மிஸ்டர் செல்வா… ஃபிஃப்த் ப்ளோர்ல ஐ.டி. டிவிஷன்ல்லே சிஸ்டம்ஸ் அனலிஸ்டா இருக்கார்..