கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 41 8

“ஏன்னா.. நான் உன்னை உண்மையா காதலிக்கறேன்.. கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நெனைக்கறேன்.. கடைசி வரை என் வாழ்க்கையை உன் கூட வாழ விரும்பறேன்…” சீனுவுக்கு மூச்சு வாங்கியது.

“மீனா… இன்னைக்கு ஒரு நாள் மட்டும் உன்னைத் திருட்டுத்தனமா பீச்சுல தொட்டுப் பாத்துட்டு, உன்னை இங்கேயே விட்டுட்டு ஓட போறவன் நான் இல்லே…”

“செல்வா என்னோட டியரஸ்ட் ஃப்ரெண்டுன்னாலும், நீ அவனுக்கு தங்கச்சி… உன்னைப் பெத்தவங்களை, நான் என் சொந்த அம்மா, அப்பாவாத்தான் நெனைச்சுக்கிட்டு இருக்கேன்; அவங்களுக்கு குடுக்க வேண்டிய மரியாதையை என்னைக்கும் குடுக்கணும்ன்னு நெனக்கறவன் நான். இவங்கள்ளாம், என்னை எந்தக் காரணத்தைக் கொண்டும் சீப்பா நினைச்சுடக்கூடாது… அப்படி அவங்க என்னைத் தப்பா நினைச்சிட்டா… என்னாலே நிம்மதியா தூங்கவே முடியாது…”

“சீனு.. உன்னைப்பத்தி எனக்கு தெரியாதாப்பா? பேசிக்கலா நீ ரொம்ப நல்லவன்டா… உன்னை நான் நேத்து இன்னைக்கா பாக்கறேன்… அதனாலத்தான் நானா வந்து என் வாழ்க்கையை உன் கையில குடுத்துட்டேன்.. உன் மனசை நான் புண்படுத்தணும்ன்னு அந்தக் கேள்வியை நான் கேக்கலை.”

சீனுவின் கண்ணியமும், அவன் மனதின் நேர்மையும் அவன் வார்த்தைகளில் இருந்த உண்மையும் புரிந்ததும், தன் காதலனை பெருமிதத்துடன் பார்த்தாள் மீனா.

சீனு, மீனாவை மெல்ல நெருங்கி உட்க்கார்ந்து அவள் கையை தன் கையில் எடுத்து மென்மையாக வருட ஆரம்பித்தான். ஆனால்
“உண்மையிலேயே நீ என்னைக் காதலிக்கறயா?’ மீனா தன்னிடம் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்டாள் என்று அவனுக்கு விளங்காததால், திகைப்பின் மெல்லிய நிழல் அவன் முகத்தில் இன்னமும் இருந்தது.

“அயாம் சாரி… சீனு… என் மனசுல தீடீர்ன்னு அந்தக் கேள்வி ஏன் தோணிச்சின்னு தெரியலை; என்னால அதை என் மனசுக்குள்ள புதைச்சுக்க முடியலை…” சீனுவின் கூர்மையான பார்வையை மீனாவால் எதிர்கொள்ள முடியாமல் சங்கடப்பட்டாள்.

“மீனா… நீ என்னை எந்த அளவுக்கு காதலிக்கறயோ, அந்த அளவுக்கு மேலேயே நானும் உன்னை உண்மையா காதலிக்கறேன், நேசிக்கறேன், ஆசைப்படறேன், விரும்பறேன், போதுமா?”

“ரொம்ப தேங்கஸ் சீனு…” மீனா அவன் கையில் தன் கையை கோத்துக்கொண்டாள்.

“கொஞ்சம் சிரிம்மா …”

“ம்ம்ம்… அயாம் சாரீ சீனு.. இனிமே இந்த மாதிரி நான் உன் கிட்ட பேசமாட்டேன்..” மீனாவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

“இட்ஸ் ஆல்ரைட்… மீனா…”

“அப்படீன்னா, நான் சொல்றதை மட்டும் நீ ஏன் கேக்கமாட்டேங்கறே?” மீனா, சீனுவின் விரல்களை நெட்டி முறித்துக்கொண்டிருந்தாள்.

“நீ சொல்லி நான் என்னக் கேக்கலை?” முகத்தில் ஆச்சரியத்துடன் கேட்டான், சீனு.

“முதல்ல உன் கையில இருக்கற சிகரெட்டை விசிறி அடி… அதுக்கப்புறம் உண்மையைச் சொல்லு… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடீ, எங்க வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடி, நீ சிகரெட் குடிச்சுட்டுத்தானே வந்தே?”

“மீனா.. உன் கிட்ட நான் எதுக்குப் பொய் சொல்லணும்? யெஸ்.. உன்னைப் பாக்க வர்றதுக்கு முன்னே ஒரு சிகரெட் புடிச்சேன்..”

சீனு சிரிக்க ஆரம்பித்தான். மீனா வந்ததிலிருந்தே முகத்தை
“உம்’ மென்று தூக்கிக்கொண்டு, ஏன் எரிச்சலுடன் இருக்கிறாளென்று, அவனுக்கு அப்போதுதான் புரிந்தது. தன் கையிலிருந்த சிகரெட்டை ஒடித்து எறிந்தான்.

2 Comments

  1. Hi admin cont…mannichidunga raam kulanthaikaaha story cont…

  2. Admin mannichidunga tam story cont

Comments are closed.