கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 41 8

சீனுவின் முகம் சட்டென்று தொங்கிப் போனது. மீனாவும் என் அப்பா மாதிரியே இருக்காளே? மனசுல பட்டதை சட்டுன்னு ஒடைச்சிடறாளே?
இவ விரிச்ச காதல் வலையில நான் விழுந்தாச்சு… யாரோட வற்புறுத்தலுமில்லாம, என் விருப்பத்தோடத்தான் நான் இவகிட்ட விழுந்தேன். இனிமே எதை யோசிச்சும், என்ன யோசிச்சும், எந்தப் பலனுமில்லே; இனிமே இவ கையைப் பிடிச்சுக்கிட்டு, இவ பேச்சைக் கேட்டுக்கிட்டு, வாழ்க்கையை சந்தோஷமா ஓட்டித்தான் ஆகணும்?

கண்களில் அசைவில்லாமல், சீனு மவுனமாக உட்க்கார்ந்திருந்தான். மனம் மட்டும் திக்கு திசையில்லாமல் அலைந்து கொண்டிருந்தது.

‘அண்ணே… அண்ணிக்கு சுண்டல் வாங்கிக்கொடுங்கண்ணே…’ சுண்டல் விற்கும் சிறுவனின் குரல் அவனை நனவுலகத்திற்கு இழுத்து வந்தது.

மீனாட்சி, சீனுவாசனின் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்தாள். ஒரே நாள்ல இவனை நான் ரொம்பவும் சீண்டறனா? ரொம்பவே லெக்சர் அடிச்சிட்டேனா? என் சீனுவை ரொம்ப சீண்டிறதும் தப்புதான்; இவன் ஒரு முசுடு. மனசால தங்கம். ரொம்ப சீண்டினா, என் கிட்ட இவனுக்கு இருக்கற கொஞ்ச நஞ்ச பயமும் விட்டுப்போயிடும்.

நான் சீனுவாசனை என் மனசார விரும்பறேன். நான் இவனை எந்தக் காரணத்துக்காகவும் இழக்க விரும்பலை. நானும் என் லிமிட்லத்தான் இருக்கணும்.. ஒரு அளவாத்தான் இவனை மெரட்டணும்… ஒரு அளவத்தான் இவனுக்கு மிடில் கிளாஸ் மென்டாலிட்டியைப் பத்தி பாடம் எடுக்கணும்…

பாவம்… ஆசையா, சந்தோஷமா என்னைப் பாக்க வந்த, என் சீனுக்குட்டியோட மூஞ்சி ரொம்பவே சுண்டிப் போயிடுச்சி.. மீனா தன் மனதை மெல்ல விருப்பு வெறுப்பில்லாமல் வெங்காயத்தை உரிப்பது போல் உரித்தாள்.

“சீனு… என் கிட்ட வாங்களேன்…” மீனாவின் குரல் குளிர்ச்சியாக வந்தது. குரலில் பாசங்கற்ற, போலியில்லாத, உண்மையான அன்பு வெள்ளமாக பெருக்கெடுத்தது.

“நான் கிட்ட வந்தா நீ வாந்தி எடுப்பே… உன் கழுத்துல இன்னும் தாலி வேற ஏறல… தேங்கா சுண்டல் விக்கறவன், ஓட்ட வடை விக்கறவன்ல்லாம் என்னை சந்தேகப்படறதுக்கா…?”

“இப்ப நீ என் கிட்ட வரப்போறியா இல்லையாடா?” மீனாட்சி தன் கண்களில் நமட்டுச் சிரிப்புடன் அவனை மிரட்டினாள்.

“நீ மட்டும் என்னை வாடா போடான்னு பேசலாமா?” சீனு இப்போது முருங்கை மரம் ஏற ஆரம்பித்தான்.

சீனுவின் இடதுகையை எடுத்து உரிமையுடன் தன் தோளில் போட்டுக் கொண்டாள், மீனா. தோளில் கிடந்த அவன் கைவிரல்களில் தன் கை விரல்களை கோத்துக் கொண்டாள். அவன் முகத்துடன் தன் முகத்தை ஒரு குழந்தையைப் போல் அழுத்தி இழைத்தாள். அவனுடன் ஊடுவது போல் ஊடி, அவனை அவள் சீண்டினாள். தன் காதலனை, தன் துணையை, சில நேரங்களில் தான் வகுத்த விதிகளுக்குட்பட்டு, அவனைத் தன்னுடன் விளையாட அனுமதித்தாள். பெண்களுக்கு இந்த கலை பிறப்பிலேயே வந்துவிடுகிறது.

சீனுவுக்கும் இது புரியாமல் இல்லை. சீனுவாசனின் மனமும் தன் மனதைக் கவர்ந்த மீனாட்சியிடம் முழுவதுமாக அடிமைப்படப் விரும்பியது. தன் மனதையும், தன் உடலையும் பூரணமாக அவளிடம், அவள் விருப்பப்படியே அவன் ஒப்படைக்க விரும்பினான். அவளுடன் விளையாடும் காதல் விளையாட்டை, இந்த கண்ணாமூச்சி விளையாட்டை, விதிகளுக்கு உட்பட்டே விளையாட அவன் மனம் மிகவும் விரும்பியது.

விதிகளுக்கு உட்பட்டு விளையாடப்படும் எந்த விளையாட்டும் முடிவில் சுகத்தைத்தானே தரும்…! இதுதானே இயற்கையின் நியதி…!!
“மீனா…குட்டி…”

“ம்ம்ம். சொல்லு..”

“ஐ நீட் சம் டயம்… ஒரே வழியா என்னோட எல்லாப் பழக்கத்தையும், உன் பார்வையில அது நல்லதோ, கெட்டதோ, சரியோ, தப்போ… மொத்தமா என்னை ஒரே நாள்லே மாத்திக்கறதுங்கறதும், எனக்கு ரொம்ப கடினம்ன்னு நீ புரிஞ்சுக்கணும்…”

“சரிப்பா..”

“நான் ஏற்கனவே சிகரெட் பிடிக்கறதை கொறைச்சுட்டேன்… கூடிய சீக்கிரத்துல மொத்தமா சிகரெட்டை விட்டுடறேன்.”

“தேங்க்யூ டா செல்லம்” மீனா தன் தலையை அவன் தோளில் புதைத்துக் கொண்டாள்.

“மீனா…”

“ம்ம்ம்” மீனாவின் உதடுகள் சீனுவின் கழுத்தில் புதைந்திருந்தன.

“இப்ப உன் சந்தேகம் தீர்ந்து போச்சா?”

“என்னது?” மீனா அவன் முகத்தை தன் புறம் திருப்பிக்கொண்டே கேட்டாள்.

“நான் உன்னை உண்மையா காதலிக்கறனா… இல்லையான்னு?”

2 Comments

  1. Hi admin cont…mannichidunga raam kulanthaikaaha story cont…

  2. Admin mannichidunga tam story cont

Comments are closed.