கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 41 8

பத்மா சிறு கூச்சலிட்டவாறே விசுக்கென எழுந்தாள். மீனாவின் முகம் முழுவதுமாக கண்ணில் நிறைந்து, மகனின் கையை பிடித்துக்கொண்டு வீட்டுக்குள் வருபவள் யார் என மனதில் முழுவதுமாக உறைத்ததும், ஒரு நொடி அவள் திகைத்தாள். அடுத்த கணம் அவள் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது.

“என்னடீ உஷா… சீனு கூட வர்றது நம்ம செல்வாவோட தங்கச்சி மீனாதானேடீ.. இவளா சீனுவை கட்டிக்க ஆசைப்பட்டவ..?” குரலில் வியப்பு ஏறியிருந்தது.

“ஆமாம் மன்னி… இவளேதான்… மருமவளா வர்றவ யாராயிருந்தாலும் எனக்கு சம்மதம்ன்னு அண்ணன் காலையிலேயே சொல்லிட்டாரு;
“எனக்கு நல்லாத் தெரிஞ்ச குடும்பம், கடைசி செமஸ்டர் இஞ்சினியரீங் படிக்கிறா, சைவம்ன்னு’ சீனு சொன்னதுமே, வரப்போறவ மீனா, நமக்குத் தெரிஞ்ச, நம்ம குடும்பத்துக்கு ஏத்த அடக்கமான பொண்ணுதான்னு என் மனசு அப்பவே நிறைஞ்சு போச்சு…”

“மன்னீ… திருப்பதி பத்மாவதி வீட்டு சமையல் கட்டுக்குள்ள, மதுரை மீனாட்சி நுழையறதுல உங்களுக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே?”

“பெருமாளே… என் மனசு குளுந்து போச்சுடீ.. அடியே உஷா… நீ சொல்ற மாதிரி சுத்தமான குடும்பம்டீ… அவங்க சிவனை கும்பிட்டா என்ன, முருகனை கும்பிட்டா என்னடீ… தெய்வங்கள் எல்லாம் ஓண்ணுதான்டீ… மீனா, மல்லிகா வளத்தப் பொண்ணு… சீக்கிரமா ஆத்துக்குள்ளப் போய் ட்ப்பாவுல ஏதாவது ஸ்வீட் வெச்சிருப்பியே சட்டுன்னு எடுத்துண்டு வாடீ… அந்த குழந்தை வாயில முதல்ல இந்த வீட்டுத் தித்திப்பை போடணும்..” பத்மாவின் மனமும் உடலும் மகிழ்ச்சியில் பரபரத்தன.

ஊரெல்லாம் ஜல்லடை போட்டு என் புள்ளைக்கு பொண்ணு தேடிக்கிட்டு இருந்தேன். போற கோவில்ல, நடந்து போற ரோடுல, சாமான் வாங்கற கடையிலேன்னு, கண்ணுக்கு லட்சணமா தெரியற பொண்ணுங்களைப் பாத்ததும்.. என் மனசு அப்படியே அடிச்சிக்கும்… இவதான் என் மருமகளா… இல்லை இவளா… இல்லே அவளா…

எப்படீல்லாம் என் மனசுக்குள்ளவே கோட்டை கட்டிக்கிட்டு இருக்கேன் தெரியுமா? கண்ணுக்கு எதிர்ல, எளசா பிஞ்சுக்கத்திரிக்காய் மாதிரி, பளபளன்னு இப்பத்தான் துடைச்சு வெச்ச குத்துவிளக்கு மாதிரி, ம்ம்ம்.. ஈரத்துணியில சுத்தி வெச்ச மல்லிப்பூ மொட்டு மாதிரி, கைக்கெட்டின தூரத்துல வெண்ணையை வெச்சுக்கிட்டு, நெய்யுக்கு அலைஞ்சேனே?

கோவிந்தா… கோவிந்தா.. இவ என் மனசுக்குள்ள எப்பவும் வந்ததில்லையே? நேரம் காலம் வந்தாத்தானே நடக்கவேண்டிது நடக்கும்… அப்பத்தான் எதிர்லே இருக்கற பொருள் கண்ணுக்குத் தென்படும்…

பகவானே… வரதராஜா! மணி ராத்திரி பத்தாச்சு… வெளியிலப் போன என் பிள்ளை சீனு இன்னும் வீட்டுக்கு வந்து சேரலே… அவன் உங்க வீட்டுலத்தானே இருக்கானான்னு எத்தனை நாள் இவளுக்குப் போன் பண்ணி விசாரிச்சிருப்பேன்… அப்பல்லாம் என் மனசு எப்பவும் இவளை என் மருமவளா நெனைச்சப் பாத்ததே இல்லையே?

மீனாட்சிதான் என் புள்ளைக்கிட்ட குடிக்கறதை விடுடான்னு சத்தியம் வாங்கினவளா…? எங்க மனசுல பாலை வாத்தவ இவதானா!! பெருமாளே… இவளைத்தான் நீ என் சீனுவுக்கு முடி போட்டு வெச்சிருக்கியா… பத்மாவின் மனம் நொடியில் இங்குமங்கும் அலைந்து திரிந்து தன் நிலைக்கு திரும்பியது.

“வாம்மா மீனா… உன் வலது காலை எடுத்து வெச்சு வீட்டுக்குள்ள வாம்மா…” வரந்தாவுக்குள் நுழைந்த மீனாவை தன் மருமகளாகவே பாவித்து, சட்டென தன் தோளோடு அணைத்துக்கொண்டாள், பத்மா.

2 Comments

  1. Hi admin cont…mannichidunga raam kulanthaikaaha story cont…

  2. Admin mannichidunga tam story cont

Comments are closed.