கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 41 8

ராகவனுடையது கிழக்குப் பார்த்த வீடு. தை மாதத்தின் மெல்லிய காற்று வீட்டுக்குள் சிலு சிலுவென அடித்துக்கொண்டிருந்தது. அன்று சூரியன் தலைக்கு மேல் சோகையாக காய்ந்து கொண்டிருந்தான். சாயந்திரம் மழை வரும் போலிருந்தது. வெராண்டாவுக்குள் குளிர்ச்சியான நிழல் வந்துவிட்டிருந்தது. பத்மா வராந்தாவில் குத்துக்காலிட்டு அமர்ந்து, தன் நாத்தனாரின் தலை முடியைப் பாகம் பாகமாகப் பிரித்து சிக்கெடுத்துக் கொண்டிருந்தாள். உஷா தன் கை நகங்களை வெட்டிக்கொண்டிருந்தாள்.

ராகவனும், சீனுவும் வீட்டை விட்டு தத்தம் அலுவலகத்துக்கு கிளம்பிய பின், வீட்டுப்பெண்கள் இருவரும் ஜாலியாக மதியம் இரண்டு மணி வரை இப்படித்தான் அரட்டையடித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கிடையில், தினமும் பேசுவதற்கென்று புதுசுபுதுசாக ஏதாவது விஷயம் இருந்து கொண்டுதானிருந்தது. வாயில் பேச்சு பேச்சாக ஓடிக் கொண்டிருக்கும். கைகள் இயல்பாக இயங்கிக்கொண்டிருக்கும். மளிகை சாமான்கள் சுத்தமாகிக் கொண்டிருக்கும். சுத்தப்படுத்தப்பட்ட பருப்பு, தனியா, மிளகாய், புளி என சமையலுக்குத் தேவயான பொருள்கள், பிளாஸ்டிக் கன்டெய்னர்களில், சீராக அடைபடும்.

மறுநாள் கிச்சனில், துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு என வறுபடும். மிக்சியில் அரைபட்டு, பருப்பு பொடியாக, இட்லிப் பொடியாக மாறி, சிறு சிறு பாட்டில்கள் நிறையும். அடுத்த நாள் மாடியில், மெல்லிய துணி விரிக்கப்பட்டு, அரிசி மாவு அரைக்கப்பட்டு, கஞ்சியாக காய்ச்சப்பட்டு, வெயிலில் காய்ந்து வீட்டுக்குத் தேவையான வத்தல் வடாமாக மாறும்.

பகல் பனிரெண்டு மணி வரை, வீட்டு வேலைகளில் மூழ்கி இருப்பவர்கள், டீவியில் சீரியலை பார்த்துக்கொண்டே சாப்பிடுவார்கள். சிறிது நேரம் கூடத்திலேயே கண்ணயர்வார்கள். நாலுமணிவாக்கில் முகம் கழுவி, காஃபியை குடித்துவிட்டு, அண்ணியும், நாத்தியும் தினமும் வீட்டுக்கு அருகிலிருக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்கு கையில் ஒரு பிளாஸ்டிக் வொயர் கூடையுடன் நடந்தே போவார்கள். சுவாமி தரிசனம் முடிந்தபின் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை கையோடு வாங்கிக் கொண்டு, ஆறு மணிக்குமுன் வீடு திரும்புவார்கள். இரவு உணவு தயாராகும். சாப்பிட்டதும், பத்தே நிமிடத்தில், டெலிவிஷனின் முன்னால் பத்மா தன் கண்கள் சொக்க, சாமியாட ஆரம்பிப்பாள்.

“உஷா…”

“சொல்லுங்க மன்னி…”

“நம்ம சீனுவை, அவன் தாடி, மீசைன்னு எல்லாத்தையும் வழிக்க வெச்ச அந்தப் பொண்ணு யாருடீ… அவளை உனக்குத் தெரியுமின்னு சொன்னே… என்னடீ பெரிய சஸ்பென்ஸ்… சீக்கிரமாச் சொல்லித் தொலைடீ… என் தலை வெடிக்குது…” பத்மா புலம்பிக்கொண்டிருந்தாள்.

“ம்ம்ம்…”

“நான் கேட்டதுக்கு பதிலே குடுக்கல்லே நீ? பக்கத்திலிருந்த வென்னீரை ஒரு முழுங்கு உறிஞ்சிக் குடித்தாள், பத்மா.

“ஒரு பத்து நிமிஷம் பொறுங்க மன்னீ… இதோ வரேன்னு சொல்லிட்டுப் போனவன், தான் கட்டிக்கப்போறவளை அழைச்சிகிட்டு வரத்தானே போறான்..

“பொண்ணு உயரமா, துறுதுறுன்னு மெல்லிசாதான் இருப்பா… பேச்சு மட்டும் பட் பட்ன்னு மிளகாய் பட்டாசா வெடிப்பா… சிரிச்ச முகம்… பொண்ணைப் பெத்தவ வீட்டுக்காரியத்தை எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கான்னுதான் கேள்வி.. எல்லாம் நீங்கப் பாக்கத்தானே போறீங்க..” உஷா நமட்டு சிரிப்பு சிரித்தாள்.

“நீயும் ஒரு மணி நேரமா இதைத்தான் சொல்லிக்கிட்டு இருக்கே… என்னைக்கும் நீ அவன் பக்கம்தான்டீ, நாள் பூரா உன் கூட உழல்றேன்… ஆனாலும் உனக்கு அவனும் அவன் சொல்றதும்தான் வேதவாக்கு..”
வீட்டுக்கு வெளியில் பைக் நிற்கும் சத்தமும், ஹார்ன் ஒலிப்பதும் கேட்டது. பைக்கில் சீனுவின் பின்னால் உட்கார்ந்திருந்த மீனா, சட்டென குதித்து இறங்கி அவனருகில் நின்றாள். நின்றவளின் இதயம் படபடவென அடிக்கத் தொடங்கியது. கட்டியிருந்தப் புடவையை சீராக்கிக்கொண்டாள்.

“சீனு… எனக்கு என்னமோ பயமா இருக்குப்பா… கோவில்ல உங்கத்தைக்கிட்ட நெறைய தரம் நான் பேசியிருக்கேன்… உங்கப்பாக்கிட்ட எப்பவும் நான் பேசினதேயில்லை..”

“எதுக்கு பயப்படறே… எங்க வீட்டுல உன்னை யாரும் வேணாம்ன்னு சொல்லப் போறதில்லே… எங்கம்மாவை உனக்கு நல்லாத் தெரியும்… அப்புறம் என்னா? எது நடந்தாலும் பாத்துக்கலாம் வா…” சீனுவின் முழங்கையை பிடித்துக்கொண்டு, அவன் உடலோடு தன் உடலை உரசியவாறு, தலையை குனிந்துகொண்டு, வீட்டுக்குள் நுழைந்தாள், மீனா.

“என்னங்க.. சீனு வந்துட்டாங்க… எழுந்து வாங்க வெளியிலே… யார் வந்திருக்கிறதுன்னு பாருங்களேன் ..”

2 Comments

  1. Hi admin cont…mannichidunga raam kulanthaikaaha story cont…

  2. Admin mannichidunga tam story cont

Comments are closed.