கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 41 8

“நாளைக்கு… நமக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும்…
“மேட்டர்’ வேணும்ன்னா… நான் சிகரெட் பிடிக்கக்கூடாது… இல்லையா?” சீனு குறும்பாக சிரித்தான்.

“இப்பவாவது என் மனசுல இருக்கறது புரிஞ்சுதே உனக்கு?” மீனு வெகுளியாக அவன் கிண்டலைப் புரிந்துகொள்ளாமல் சீரியஸாக பதில் சொன்னாள்.

“அதாவது… நீ சொல்றதை மட்டும் கேட்டு நடக்கிற ஒரு அடிமையா நான் இருக்கணும்… மீனா… உனக்கு ஒரு காதலன் வேண்டாம்.. உனக்கு ஒரு ஹஸ்பெண்ட் வேண்டாம்… அவனுக்குன்னு எந்த விருப்பமும் இருக்க வேணாம்… நீ சொல்றதையெல்லாம் கேக்கிற ஒரு ஆண் அடிமை உனக்கு வேணும்… மொத்தத்துலே உனக்கு ஒரு கைத்தடியா நான் இருக்கணும்… அவ்வளவுதானே?”

சீனுவின் முகம் மெல்ல மெல்ல சீரியஸாகிக் கொண்டிருந்தது. சட்டென மீனாவின் தோளிலிருந்த தன் கையை விலக்கிக்கொண்டான் சீனு. கைக்குட்டையை எடுத்து தன் முகத்தையும், உதடுகளையும் அழுத்தமாகத் துடைத்துக்கொண்டான்.

“இதுல நான் உன்னை அடிமைப்படுத்தறது எங்க வருது?” மீனா அவன் ஏளனம் புரிந்தவளாக கோபத்துடன் சீறினாள்.

“மீனா… நீ சொல்ற உன் காதல்… உனக்கு என் மேல இருக்கற அன்பு, இதையெல்லாத்தையும் நான் உணராம இல்லே; ஆனா என் அன்பை, என் காதலை, என் நேசத்தை, நீ சிகரெட் பிடிக்கற என் வழக்கத்தோட பிணை போட்டுக்கிட்டு, நீ வீணா தேவையில்லாம உன்னைக் குழப்பிக்கறே… எங்கப்பாவும் இப்படித்தான் ஒரு வருஷமா என் மனசை புரிஞ்சுக்காம, என் கிட்ட பிடிவாதமா பேசாம இருந்தார்.”

“நீ என்னை, உனக்கு வலுக்கட்டாயமா, அடிமைப்படுத்திக்க விரும்பறே.. சிகரெட் பிடிக்கறவன்ல்லாம் தனிப்பட்ட வாழ்க்கையிலே ஒழுக்கமில்லாதவங்கன்னு நீ நினைக்கிறே…

“என் அப்பாவும் நீ நினைக்கற மாதிரித்தான் நெனைக்கிறார். இந்த மிடில் கிளாஸ் மென்டாலிட்டி ஹன்ட்ரட் பர்சென்ட் அப்படியே உங்கிட்டவும் இருக்குதுன்னு எனக்கு நல்லாத் தெரியுது… ஆனா சிகரெட் பிடிக்கறதுங்கறதும்… அதனோட பின் விளைவுகளும் ஒரு ஹெல்த் இஸ்யூங்கறது எனக்கும் நல்லாத் தெரியும்…” சீனு பேசுவதை ஒரு நொடி நிறுத்தினான். சிறிய பெருமூச்சு ஒன்றை தன் நெஞ்சிலிருந்து வெளியேற்றினான்.

“உனக்கு அப்பர் கிளாஸ் மென்டாலிட்டி இருக்குன்னு நான் ஒத்துக்கறேன்.. ஆனா சாவுக்கு அப்பர் கிளாஸ்… மிடில் கிளாஸ்ங்கற பேதமெல்லம் கிடையாது… எல்லாம் தெரிஞ்ச அப்பர் கிளாஸ் ஆளான ,நீ ஏன் அந்த சனியன் புடிச்ச சிகரெட்டை, கஷ்டப்பட்டு சம்பாதிக்கற காசைப் போட்டு வாங்கி, அந்த புகையை நெஞ்சுக்குள்ள இழுத்து, ஏன் உன் நெஞ்சைக் கரியாக்கிக்கிறே? உன் உடம்பைக் கெடுத்துக்கறே? உன் பக்கத்துல இருக்கறவங்க ஆரோக்கியத்தையும் ஏன் வீணாக்கறே?”

“நீதான் எனக்கு புருஷனா வரணும்ன்னு ஒரே நிமிஷத்துல முடிவு பண்ணி… என் வாழ்க்கையை உன் கிட்ட பணயம் வெச்சிருக்கேன்; அரை மணி முன்னாடீ, என்கூட வாடீன்னு நீ கூப்பிட்டதும், எதையும் யோசனைப் பண்ணாமா உன் கூட குஷியா வந்திருக்கேனே, என் சந்தோஷத்தைப் பத்தியோ, ஏன் மூடைப் பத்தியோ, நீ கொஞ்சமாவது யோசனை பண்ணியா?”

“வர்ற வழியிலே என் வெக்கத்தை விட்டுட்டு, மனசுல இருக்கற ஆசையை அடக்கிக்க முடியாம உன்னை நான் கட்டிப்புடிச்சேன். ஆனா நீ இப்ப உன் பக்கத்துல உக்காந்து இருக்கற என்னை வாந்தி எடுக்க வெச்சே ஆகணுங்கற முடிவுல, கையில சிகரெட்டை எடுத்து வெச்சிக்கிட்டு, தீப்பெட்டி எவன் கிட்ட பிச்சை எடுக்கலாம்னு சுத்து முத்தும் பாக்கறே?

“இவ்வளவையும் நீ பண்ணிட்டு, நான் உன்னை அடிமைப்படுத்தறேன்னு வேற என் கிட்ட புதுசா ஒரு கதை சொல்றே? உனக்கே இது கொஞ்சம் ஓவராத் தெரியலே?” சற்று நேரமாக தொடர்ந்து பொங்கும் மன உணர்ச்சிகளுடன் பேசவே, மீனாவுக்கு இலேசாக மூச்சிறைக்கத் தொடங்கியது.
“எல்லாப் பொட்டைச்சிகளும் ஒரே மாதிரிதான் இருக்கீங்கடீ..!!” சீனு சட்டென மீனாவை விட்டு தள்ளி உட்க்கார்ந்து கொண்டான்.

“ம்ம்ம்… உங்களுக்கு எத்தனை பொட்டைச்சியைத் தெரியும்…? இதுவரைக்கும் எத்தனை பொம்பளைங்களோட இந்த பீச்சுல வந்து உக்காந்து இருக்கீங்க? எத்தனை பேரு மாரை தொட்டுப் பாத்து இருக்கீங்க… மெத்துன்னு இருக்கா இல்லே கல்லாட்டம் இருக்கான்னு டெஸ்ட் பண்ணியிருக்கீங்க…?”

மீனாவின் குரலில் ஏகத்திற்கு வெறுப்பு தொனித்தது. சீனு சற்று கோபமாக, சீரியஸாக பேசுகிறான் எனத் தெரிந்ததும், அவளும் சீரியஸாக பேச முடிவெடுத்தாள். தன் எதிரிலிருப்பவனை அவள் மரியாதையுடன் விளிக்க விரும்பி ஒருமையிலிருந்து பண்மைக்கு மாறினாள்.

2 Comments

  1. Hi admin cont…mannichidunga raam kulanthaikaaha story cont…

  2. Admin mannichidunga tam story cont

Comments are closed.