கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 41 8

“மீனா… ப்ளீஸ் என்னை நீ வெறுப்பேத்தாதடீ.. ஒரு பேச்சுக்கு சொன்னேன்டீ.. உங்கூடத்தான் நான் மொதல் தரமாம பீச்சுக்கு வந்திருக்கேன்… நம்புடீ…”

இவளை வீட்டுக்கு அழைச்சிக்கிட்டு வர்றேன்னு வேற சொல்லிட்டு வந்திருக்கேன்…? இப்படி புஸ்வானமா வார்த்தைக்கு வார்த்தை பொங்கறவளை எப்படி நான் சமாதானப்படுத்தப் போறேன்…? உன் வீட்டுக்கு நான் வரமாட்டேன்னு இப்ப இவ மொரண்டு புடிச்சாள்ன்னா நான் என்னப் பண்ணுவேன்? சீனு மனதுக்குள் திகைத்தான்.

ஒரு பொண்ணை காதலிக்கறதுல இவ்வளவு பிரச்சனைகள் இருக்கா? ரோடுல பாக்கறேன், அவனவன் ஒரு கையில சிகரெட்டும், மறு கையில பிகருமா அலையறானுங்க… எனக்குன்னு வந்து வாய்ச்சவ கட்டிங்க் வுடாதேங்கறா; என் கூட தனியா வந்த மொதல் நாளே, என்னை வாணாலில போட்டு தயவு தாட்சண்யம் இல்லாம, கடலைக்காயா வறுத்து எடுக்கறா; தெரியாத்தனமா இவளுக்கு சத்தியம் வேற பண்ணிக்கொடுத்துட்டேன்.. சீனு தன்னை தன் மனதுக்குள்ளேயே நொந்து கொண்டான்.

“சீனு… ஒரு விஷயத்தை நீங்க நல்லாப் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க. நான் என் மனசை, என் ஒடம்பை முழுசா உங்களுக்கு கொடுக்க விரும்பறேன்… அது மாதிரி நீங்க எனக்கு முழுமையா வேணும்… குறையில்லாத முழுசா வேணும்..”

“சீனு… என்னை உங்களுக்கு கொறைஞ்சது பதினைஞ்சு வருஷத்துக்கும் அதிகமா செல்வாவோட தங்கையாத் தெரியும். ஒரு இன்டூஜூவலா, என்னை, எனக்குள்ள இருக்கற ஆசாபாசங்கள் உங்களுக்குத் தெரியாது… இப்ப நான் உங்க காதலி… உங்களை கல்யாணம் பண்ணிக்கப் போறவ… இந்த முறையில என்னை நீங்க புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க…”

“உங்க சிகரெட் பிடிக்கற பழக்கத்தால, நாம சந்தோஷமா இருந்து அதனால நமக்கு பொறக்கப் போற குழந்தைக்கு, எந்த வியாதியும் பிறவியிலேயே வந்துடக்கூடாதுன்னு நான் பயப்படறேன். உங்களை, உங்கள் தனிப்பட்ட பழக்க வழக்கங்களை, உங்க காதலியா, உங்களோட வருங்கால மனைவியா நான் புரிஞ்சுக்க விரும்பறேன்..நான் உங்களை எந்த விதத்துலேயும் எனக்கு அடிமையாக்கிக்கணும்ன்னு நான் நெனக்கவேயில்லை.”

“என்னை புரிஞ்சுக்கோங்க.. அதுக்கு அப்பறமா, எங்கிட்ட உங்களுக்கு என்னப் பிடிக்கலைன்னு சொல்லுங்க. என்னை நான் முடிஞ்ச அளவுக்கு, உண்மையா என்னை மாத்திக்கறதுக்கு, திருத்திக்கறதுக்கு முயற்சி பண்றேன்.”

“நம்ம கூடவே பிறந்த சில குணங்களை, விருப்பங்களை சட்டுன்னு மாத்திக்கறது சிரமங்கறது எனக்கு நல்லாப் புரியுது… ஆனா சிகரெட் பிடிக்கற பழக்கம் நீங்க பொறந்தப்ப உங்க கூட வரலே; இது நீங்களா பிடிச்சிக்கிட்ட ஒண்ணு; நடுவுல வந்த ஒண்ணு; நடுவுல வந்த ஒண்ணை, நடுவுல விடறதுல உங்களுக்கு என்னப் பிரச்சனைங்கறதுதான் எனக்குப் புரியலை?”
சீனு அடங்குடா; உன் ஆட்டம் இவகிட்ட செல்லாது; ஆனா உன் நல்ல காலம் ஒரு பொறுப்பான புத்தியுள்ள பொண்ணுகிட்ட நீ அடங்க வேண்டியதா இருக்குது; நீ கொஞ்சம் பொறுமையா இருடா… மீனா உன் பொண்டாட்டியா ஆகப்போறவ… இவ ஒரு பிரச்சனையை பல கோணத்துலேருந்து அணுகறா… உண்மையாகவே அந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண நினைக்கறா; ரொம்பவே ரீசனபிளா பேசறா… அவ உணர்ச்சிகளுக்கும் நீ மதிப்பு குடுத்துத்தான் ஆகணும்…

அவ சொல்ற மாதிரி உன் உணர்ச்சிக்கு மதிப்பு குடுத்து, அவ அண்ணன் செல்வா, அவளை உன் கூட அனுப்பி இருக்கான். மீனாட்சியும், உன் உணர்வுகளை மதிச்சு, உன்னை நம்பி, உன் விருப்பத்துக்கு மதிப்பு குடுத்துத்தான் தனியா வந்து இப்ப உன் கூட பீச்சுல உக்காந்து இருக்கா…

சீனுவாசனுக்கு ஒரு பக்கம் மீனாட்சியின் மேல், அவனுக்குள் ஒரு இனம் புரியாத எரிச்சல் கிளம்பிய போதிலும், அவனுடைய நல்ல காலம், அவன்
“புத்தி’ அவனுக்குப் பொறுமையை உபதேசித்தது. அவசியமில்லாமல் எதையும் பேசாதே என உபதேசம் செய்தது.

“மீனு… உனக்கு கோவம் வந்தா நீ பத்ரகாளி மாதிரி ஆயிடறே? உன் காதலை என்னைக்கு எனக்கு உணர்த்தினியோ, அன்னைக்கு எந்த முக பாவத்தோட இருந்தியோ அதே மீனாட்சியாத்தான் இன்னைக்கு என் முன்னாடி நீ உக்காந்திருக்கே…” சீனு தன் காதலியுடன் சமாதானமாக போக விரும்பினான்.

“இனிமே உங்களுக்கு வேற வழியில்லே… சத்தியம் பண்ணி என் கையை பிடிச்சிருக்கீங்க… என் மனசுக்குள்ள நானும் நீங்க தான் என் புருஷன்னு சத்தியம் பண்ணிக்கிட்டு, உங்களை ஆசையா கட்டித் தழுவிட்டேன்… இனிமே நீங்க என் மூஞ்சை சகிச்சுக்கிட்டுத்தான் ஆகணும்…” மீனாவின் முகம் பாறாங்கல்லைப் போலிருந்தது.

2 Comments

  1. Hi admin cont…mannichidunga raam kulanthaikaaha story cont…

  2. Admin mannichidunga tam story cont

Comments are closed.