கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 32 6

“உன்னை நான் தொட்டுட்டேன்… உன் கையில அடிச்சு சத்தியம் பண்ணியிருக்கேன்… இனிமே உன்னை விட்டு விலகிப் போறதுங்கறதுங்கற பேச்சுக்கே எடமில்லே… !” அவன் அவள் புடவை முந்தானையை பிடித்துக்கொண்டான். அவள் புடவையை தொட்டதும், அவனையுமறியாமல் அவன் தலை எதிர் வீட்டு மொட்டை மாடியின் பக்கம் திரும்பியது.

“தேங்க் யூ சீனு…”

“சிரிச்சிக்கிட்டே சொல்லும்மா…”

“நானும் சுகன்யா மாதிரி ஒரு வேலையில இருந்தேன்னா இப்படி அம்மாக்கிட்ட ரொம்பவே பயப்படவேணாம்… சொந்தக் கால்லே நிக்கறேன்ற தைரியமாவுது எனக்கு இருக்கும்..!!”

“ஏய்… என்னடீ மீனா… ஏன் இப்படி ஃபீல் பண்றே? உனக்கு சோறு போடற அளவுக்கு நான் சம்பாதிச்சிக்கிட்டுத்தான் இருக்கேன் செல்லம்… உனக்கு மட்டுமில்லே… ஏன்… உங்க அப்பா, அம்மா, உன் அண்ணன், உனக்கு வரப் போற அண்ணி… இவங்க எல்லோரும் ஒண்ணா, என் வீட்டுக்கு உன்னைப் பாக்க வந்தாலும், அவங்களுக்கு விருந்தே என்னால குடுக்க முடியும்…” சீனுவின் குரல் சீரியஸாக வந்தது.

“ம்ம்ம்…”

“மீனா… என் வீட்டுல தனித்தனியா மூணு ரூம் இருக்கும்ம்மா… அது போதாதா நமக்கு… நீ என்னை உன் மனசுக்குள்ள வெச்சிக்கிட்டு இருக்கற விஷயம் என் அம்மாவுக்கு தெரிஞ்சா, நாளைக்கே உன் வீட்டுக்கு வெத்தலைப் பாக்கு எடுத்துகிட்டு உன்னை மொறையா பொண்ணு கேக்க வந்துடுவாங்க…” சீனுவின் முகத்தில் பெருமிதம் வெளிச்சம் போட்டிருந்தது.

“ம்ம்ம்.. உங்க அம்மா மனசைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும் சீனு…அவங்க ரொம்ப நல்லவங்க…உன் மேல தன் உயிரையே வெச்சிருக்காங்க..”

“நான் எப்ப கல்யாணத்துக்கு சரின்னு சொல்லுவேன்னு காத்துக்கிட்டு இருக்காங்க..”

“தெரியும் எனக்கு…”

“உங்க வீட்டுல நம்ம காதலை அப்ரூவ் பண்ணலன்னா… இப்ப நீ கட்டிக்கிட்டு இருக்கியே… இந்த பொடவையோட என் கூட வந்துடு.. எனக்கு வேற எதுவுமே உங்க வீட்டுலேருந்து வேண்டாம்… கடைசீ வரைக்கும் உன்னை நான் என் தோள்ல உக்கார வெச்சி உன்னைத் தாங்குவேன்… எதுக்கும் கவலைப்படாதே…!!!” சீனு உறுதியாக தன் மனதிலிருந்ததை சொன்னான்.

நிஜமா இவன் ஒரு ஆம்பிளைதான்… என் காதலன் சீனு தைரியமானவன். செல்வா மாதிரி வழாவழா கொழகொழான்னு பேசற வெண்டைகாய் இல்லே…!! எந்தப் பிரச்சனைக்கும் டக்குன்னு ஒரு ஸ்டேண்ட் இவனால எடுக்க முடியும்…!! சீனுவின் தைரியம் அவளுக்குப் பிடித்திருந்தது. உடனடியாக அவன் எடுத்த முடிவை கேட்டதும் அவள் மனசு சந்தோஷத்தில் துள்ளியது.

சீனுவின் பேச்சைக் கேட்ட மீனாவின் மனம் முழுமையாக மகிழ்ச்சியில் திளைத்தது. இவனுக்கு இப்ப எதாவது உடனடியா குடுக்கனும்ன்னு என் மனசுக்கு தோணுது…!! என்ன கொடுக்கலாம். என்னையே எடுத்துக்கடான்னு குடுத்துடலாம். அவள் கண்கள் இங்குமங்கும் அலைபாய்ந்தது.