கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 32 6

“புதுசா கல்யாணம் ஆன தம்பதிங்க மாதிரி, சுந்து.. உனக்கு பொங்கல் வேணுமா? இல்லேன்னா பூரி ஆர்டர் பண்ணட்டுமா? ஒரே உபசரிப்புத்தான்… உங்க பிள்ளை, உங்க மருமகளுக்கு ஊட்டிவிடாத கொறைதான்..!! அந்த கூத்தை நீங்கப் பாக்க குடுத்து வெக்கலை.!!” குரலில் ஏற்ற இறக்கத்துடன் கைகளை ஆட்டி ஆட்டி பேசிய சுகன்யா தன் தாயின் கன்னத்தில் ஆசையுடன் முத்தமிட்டாள்.

“போடீ.. என் மானத்தை வாங்கறதுக்குன்னே நீ இருக்கே?” சுந்தரி வெட்க்கத்தில் குங்குமமாக சிவந்த தன் கன்னத்தை மகளின் கன்னத்துடன் இழைத்தாள்.

“அம்மா… உனக்கு எங்களை ஜோடியா பாக்கணுமா?” குமார் சுந்தரியை வேகமாக இழுக்க, தன்னருகில் சோஃபாவில் உட்காந்த சுந்தரியின் தோளில் தன் கையை ஆசையுடன் போட்டுக் கொள்ள, அவள் முகத்தில் வெட்க்கப்பூக்கள் ஆயிரம் ஆயிரமாக மலர்ந்தன.

சிவா…சிவா…!! என் கொழந்தைங்க இப்படியே சந்தோஷமா, காலங்காலத்துக்கு நல்லாயிருக்கணும். தன் கண்களை தன் மேல்துண்டால் யாருமறியாமல் துடைத்துக்கொண்ட சிவதாணுவின் மனம் மவுனமாக அவர் வணங்கும் சிவனிடம் விண்ணப்பம் செய்தது. சிவதாணு, கனகா தம்பதியரின் வீட்டில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது.

“மனமே முருகனின் மயில் வாகனம்…” சுகன்யாவின் செல் ஹிந்தோளத்தில் சிணுங்கியது.

“அம்மா… செல்வா போன் பண்றாரு… நான் பேசலாமா… கூடாதா? சீக்கிரம் சொல்லும்மா!” சுகன்யா தாயின் முகத்தை ஏக்கத்துடன் பார்த்தாள்.

“பேசுடாச் செல்லம்….”

சுந்தரி தன் திருமணத்துக்கு இருபத்து மூன்று வயதான பின், கணவனின் தோளில் தன் தலையைப் பதித்துக்கொண்டு, தன் வீட்டில், தன் கணவனுடன் கூடத்தில் கம்பீரமாக உரிமையுடன் உட்கார்ந்திருக்கும் சுகத்தை கண்மூடி அனுபவித்துக்கொண்டிருந்தாள்.
“அப்பா… எனக்கு இங்கீலீஷ்ல
“எஸ்” இனிஷியல் போட்டு ஒரு தங்க மோதிரம் வெள்ளிக்கிழமைக்குள்ள வேணும்பா..!!” செல்வாவிடம் செல்லில் பேசிவிட்டு வந்தவள் குமாரசுவாமியின் தோளைக் கட்டிக்கொண்டு கொஞ்சினாள்.

“சுகா உன் கிட்டத்தான் ஏற்கனேவே மூணு மோதிரம் இருக்கே? எதையும் நீ ஒரு வாரம் தொடர்ந்து போட்டுக்கறதில்லே? இங்க அங்க கழட்டி வெச்சுட்டு என்னைத் தேடச் சொல்லி என் உயிரை எடுக்கற; இப்ப இன்னொன்னு எதுக்கு உனக்கு…?”

“அம்ம்ம்மா..”

“கல்யாணத்துக்கு நகை வாங்கும் போது ஒருவழியா உனக்குத் தேவையானதையெல்லாம் வாங்கிக்கலாம். பிள்ளை வீட்டுல அவங்க எதிர்பார்ப்பு என்னன்னு ஒண்ணும் தெரியலை. உனக்கு காதுல, மூக்குல, கையிலன்னு என்னக் கேப்பாங்கன்னும் புரியலை?” சுந்தரி தன் புருவத்தை உயர்த்தினாள்.

“போம்ம்மா… ஒரு மோதிரம்தானே நான் கேக்கிறேன்? எதுக்கு நீ எனக்கு இப்ப இவ்வள பெரிய லெக்சர் குடுக்கிறே? எப்பவும் நீ ஒரு டீச்சராத்தான் இருக்க ஆசைப்படறே? நான் என்னா உன் கிளாஸ்ல படிக்கற ஸ்டூடண்டா?”

“சுந்து நீ சும்மாயிரும்மா. என் பொண்ணு இப்பத்தான் ஆசையா முதல் தரமா என் கிட்ட ஒரு நகை வாங்கிக்குடுன்னு கேக்கிறா…!! அவளை நீ ஒண்ணும் சொல்லாதே..” குமார் தன் பெண்ணின் தலையை வருடிக்கொண்டிருந்தார்.

“அம்மா… நான் எனக்காக கேக்கலைம்மா. வெள்ளிக்கிழமை செல்வாவுக்கு நான் ப்ரசென்ட் பண்ணப்போறேன். அவர் எனக்கு அவரோட சேவிங்க்ஸ்லேருந்து ஒரு மோதிரம் வாங்கிட்டு வர்றார். வெள்ளிக்கிழமை எனக்கு அவரே போட்டு விடுவாராம்..” சிணுங்கிய சுகன்யாவின் குரலில் மகிழ்ச்சியும் பெருமிதமும் கலந்திருந்தன.

“இது என்ன புது வழக்கம்…?! அத்தே நீங்களே சொல்லுங்களேன்… நம்ம வீடுகள்ல்ல இந்த மாதிரி மோதிரம் மாத்திக்கறதுங்கற பழக்கமெல்லாம் உண்டா??”

சுந்தரி தன் மாமியாரின் முகத்தைப் பார்த்தாள். கனகா தன் கணவரை நோக்கினாள். இந்த வயதிலும் தன் கணவன் எதிரில் அவள் பேசுவது இல்லை. அவள் மனதில் தன்னுடைய பேத்தியின் ஆசை எதுவாக இருந்தாலும் அது நிறைவேற வேண்டும் என்ற விருப்பமிருந்தது.