கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 32 6

“சும்மாருங்க அண்ணி… முதல்ல உங்க விவகாரம் முடியட்டும்.. அது வரைக்கும் இது வெளியில தெரியவேண்டாமேன்னு நெனைச்சேன்..!! சீனுவுக்குத்தான் ஓட்டை வாயாச்சே… உங்ககிட்ட உளறிட்டாரா?” மீனாவின் முகம் குங்குமமாக சிவந்திருந்தது.

“அது சரி சீனு.. நீங்க ஏன் மீசையெல்லாம் வழிச்சிட்டு வந்திருக்கீங்க? சட்டுன்னு ஒரு செகண்ட், உள்ளே நுழைஞ்சதும் உங்களை எனக்கு அடையாளமே தெரியலை..!!”

“எல்லாம் மீனாட்சி அம்மனோட அருள்தான்..!! மீசை வெச்சிருந்தா கிஸ் அடிக்கறதுல ப்ராப்ளமா இருக்குமாம்…!! இது என் அந்தபுரத்து ராணியோட சொந்த அபிப்பிராயம். ஆம்பிளை நான் அழியறேன்… இன்னும் என்னன்ன கோலம் பண்ணப் போறாளோ… தெரியலை?” சீனு பவ்வியமாக பேசினான்.

“தனியா வாங்க… உங்களுக்கு வெச்சிக்கறேன் கச்சேரீ!!” மீனா அவன் கையை அழுத்திக் கிள்ளினாள்.

***

“கங்கிராட்ஸ்… மிஸ்டர் செல்வா, நான் வேணி… இவர் என் ஹஸ்பெண்ட் சங்கர். என் ஃப்ரெண்ட் சுகன்யா ஒரு பூ மாதிரி; காலையிலேருந்து அவகூடத்தான் நான் இருக்கேன்; எப்ப வரப் போறீங்க நீங்கன்னு… தவியா தவிச்சிக்கிட்டு இருந்தா…” வேணி ஒரு நொடி பேசுவதை நிறுத்தினாள்.

“உங்களை பாத்ததுக்கு அப்புறம்தான் அவ மூஞ்சியில சிரிப்பே வந்திருக்கு… கடுமையா ஒரு சொல் தாங்க மாட்டா; புசுக்குன்னு அவ மூஞ்சு வாடிப்போயிடும்.. இப்பவே சொல்றேன்.. நீங்க அவளை எப்பவும் சந்தோஷமா வெச்சுக்கணும்… வேணி புன்னகையுடன் தன் கையை அவனிடம் நீட்டினாள்.

“கண்டிப்பா.. உங்களைப் பத்தி சுகன்யா நெறைய சொல்லியிருக்கா… நிஜமாவே உங்களைப் பார்க்கணும்ன்னு நான் ரொம்ப ஆவலாயிருந்தேன்…” செல்வா மிருதுவாகப் பேசினான்.

***

“வாங்க… வாங்க… மொதல்ல எல்லோரும் சூடா டிஃபன் சாப்பிடுங்க… அப்புறமா ஆற அமர உக்காந்து பேசலாமே..!! ரகுராமன் விருந்தினர்களை அழைத்தார்.

“ரகு… சம்பந்திங்களுக்கு அப்படியே வீட்டையும் சுத்திக்காட்டுப்பா…சிவ சிவா…” சிவதாணு குரல் கொடுத்தார்.

“தாத்தா வீடு அருமையா கட்டியிருக்கீங்க… காத்து அப்படியே ஆளைத் தூக்குது? இங்க ரியல் எஸ்டேட் பிசினெஸ்ல்லாம்… எப்படீ? நல்லாப் போகுதுங்களா?” சீனு பேச்சோடு பேச்சாக கொக்கிப்போட்டான்.

“சிவாய நம…!! தம்பி… இது நம்ம ரகுவோட வீடு… கீழே மேலேன்னு நல்லா ஸ்ட்ராங்கா கான்க்ரீட் போட்டு கட்டியிருக்கார். பூமிக்கு அடியில தண்ணி கல்கண்டு மாதிரி ஓடுது..
“போர் போட்டு வெச்சிருக்கார்…” கீழே பேஸ்மெண்ட்ல்லயும் ஒரு ரூம் போட்டிருக்கார். ஸ்டோரா யூஸ் பண்ணிக்கலாம்.”

“அப்படீங்களா..?”

“உள்ளே வரும் போது பாத்து இருப்பீங்களே? போர்ட்டிக்கோவுல ரெண்டு காரு தாராளமா நிறுத்தலாம்.. இந்த வீடு அவருக்குப்பின்னாடி சுகன்யாவுக்குன்னு ஏற்பாடு பண்ணியிருக்காரு… பின்னாடி இருக்குது பாருங்க இரும்பு வேலி போட்ட காலி மனை… அதுவும் இந்த வீட்டோட சேர்ந்ததுதான்… என் மருமக சுந்தரி பேருல இருக்கு… அதுவும் யாருக்கு… சுகன்யாவுக்குத்தான்..”

“ம்ம்ம்… குட்.. வெரி குட்…”

“நீங்கள்லாம் இப்ப சுவாமிமலை போய் முருகனைத் தரிசனம் பண்ணப்போறதா.. ரகு சொன்னார்… இங்கேருந்து ஏழு கிலோ மீட்டர்தான்… ரோடு காலியா இருந்தா பத்து நிமிஷத்துல போயிடலாம்… அங்க நம்ம வீடு காவிரி கரையோரம் இருக்கு… சுவாமி தரிசனம் ஆனதும் கண்டிப்பா வீட்டுக்கு வரணும்… அந்த பிராப்பர்ட்டியும் என் பேத்தி சுகன்யாவுக்குத்தான்…”