கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 32 6

இப்பவும் விவாதம் பண்றதுல எந்த பலனும் இல்லே. காலம் மாறிக்கிட்டே இருக்கு. நாமும் கொஞ்சம் மாறித்தான் ஆகணும். எல்லா பழக்க வழக்கங்களையும், நாமத்தான் நம்ம சவுகரியத்துக்காக உண்டாக்கி வெச்சிருக்கோம். அவைகள்தான் நம்ம குடும்பப் பழக்கங்களாக, வழக்கங்களாகத் தொடருது…”

“மாமா… நீங்க சொல்றது எனக்குப் புரியுது… ஆனா..”சுந்தரி தயக்கமாக இழுத்தாள்.

“கண்ணு சுந்தரி… இன்னைக்கு பெண் குழந்தைகளும் வெளியில போய் படிச்சிட்டு, கை நெறைய சம்பாதிக்கறாங்க. அவர்களுக்குன்னு மனசுல விருப்பங்களை வளர்த்துக்கிட்டு இருக்காங்க. பொருளாதார ரீதியிலே பெற்றவர்களை நம்பி அவங்க இன்னைக்கு இல்லே. மொத்தத்துல ஒரு ஆணை தன் தேவைகளுக்காக நம்பியிருந்த காலம் மலையேறி போச்சு… சிவ சிவா…” பக்கத்திலிருந்த வென்னீரை ஒரு முழுங்கு குடித்தார்.

“தனிப்பட்ட ஒரு மனுஷனின், மனுஷியின், பொருளாதர சுதந்திரம், அவர்கள் குடும்ப பழக்க வழக்கங்களை மெல்ல மெல்ல மாத்திடுது. சிவ சிவா…” சற்று நேரம் அமைதியாக இருந்த சிவதாணு மெல்லியக் குரலில் பேசினார். தன் முகத்தை மேல் துண்டால் துடைத்துக்கொண்டார். அவர் மனம் அவரிடம் பேச ஆரம்பித்தது.

ம்ம்ம்.. என் பேத்தி ஜாதகத்துல, ஏழாம் வீட்டுல இருக்கிற ராகுவோட தசா புத்தி அவளுக்கு நடக்கும் போது, சுகன்யா குடும்ப வழக்கங்களை மீறத்தான் செய்வாள். பெரியவர்களின் பேச்சை எதிர்க்கத்தான் செய்வாள். குறையுள்ள, நியாயத்துக்கு ஒவ்வாத தர்க்கங்களை தன் பேச்சில் உபயோகிப்பாள். தான் பிறந்த இனத்தைவிட்டு இன்னோரு இனத்தைச் சேர்ந்தவனோடு அவளுக்கு பழக்கம் ஏற்படும். தான் பிறந்த இடத்தை விட்டு புது இடங்களுக்கு செல்லுவாள். இது ராகுவோட அடிப்படையான, இயற்கையான வேலை.

சிவ.. சிவா… இவ்வளவு ஏன்…? என் பேத்தியை விரும்பியவனே… அவளை விட்டுவிட்டு விலகிப் போகலாம். மீண்டும் திரும்பியும் வரலாம். வரமாலும் போகலாம். எல்லாத்துக்கும் மேல எதிர்பாரத ஒருவனுடன், எதிர்பாராத விதத்தில் மணவாழ்க்கை சுகன்யாவுக்கு அமையலாம். இது அந்த வாலறுந்த பாம்போட வேலை…

சிவ..சிவா… இவங்களுக்கு இதெல்லாம் இப்ப எங்கப் புரியப் போகுது? கெரகங்கள் பேசறது மனுஷன் காதுல விழுந்துட்டா, அவங்க பேசறதை இவங்களால புரிஞ்சிக்க முடிஞ்சா, குடும்பங்கள்ல ஏற்படற இந்தப் பிரச்சனைகளை ஓரளவுக்கு தவிர்க்கலாம்.

சிவ… சிவா.. என் புள்ளை அவன் கல்யாண விஷயத்துல என் பேச்சைக் கேக்கலே. என் பேத்தியும் அவ வாழ்க்கையில தன்னோட அப்பனை மாதிரி பிரச்சனைகளை சந்திச்சுத்தானே ஆகணும். விதித்தவனின் விருப்பத்தை யாரால் மீறமுடியும்? விதித்தவனும் அவனே… விதித்ததை மாற்றுபவனும் அவனே; சிவதாணு நீளமாக பெருமூச்செறிந்தார்.

“ரகு… நீ ஒரு மோதிரம் அவ இஷ்டப்படி வாங்கிடுப்பா… அவ தாத்தாவே சொல்லிட்டார். அவளுக்கு இப்ப இங்க சப்போர்ட் அதிகமாயிருக்கு…!! இனிமே இவகிட்ட பேசறதுல அர்த்தமில்லே” சுந்தரி தன் உதடுகளை அழுந்தக் கடித்துக்கொண்டாள்.

“தேங்க் யூ தாத்தா…” சுகன்யா குஷியாகிவிட்டாள்.

ஏழாம் வீட்டிலிருக்கும் ராகுவின் இயல்பான குணங்கள் புரியாமல் சுகன்யா தான் நினைப்பதெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக நடப்பதை எண்ணி எண்ணி மகிழ்ந்தாள். சிரித்தமுகத்துடன் செல்வா அவள் மனமெங்கும் வியாபித்திருக்க, அவள் சந்தோஷத்தில் துள்ளி குதித்துக்கொண்டு மாடிக்கு ஓடினாள்.

சுகன்யாவின் திருமண நிச்சயத்துக்காக அழைக்கப்பட்டிருந்த சங்கரும், வேணியும் ஒரு நாள் முன்னரே கும்பகோணம் வந்து விட்டார்கள். வேணியைக் கண்டதும், சுகன்யா குதித்தோடி அவளைத் வாஞ்சையோடு தன்னுடன் இறுக்கிக்கொண்டாள்.

“வேணீ… என்னடி… உன் முகமெல்லாம் மின்னுது… உன் உடம்புல கொஞ்சம் கலர் ஏறின மாதிரி தெரியுது…! ஏதாவது விசேஷமா…?” சுகன்யா அவள் காதைக் கடித்தாள்.

“ம்ம்ம்… டாக்டர் கன்ஃபார்ம் பண்ணிட்டாடீ… ரெண்டாவது மாசம்..” வேணியின் முகம் பெருமையில் மலர்ந்தது.