கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 30 12

“என் ராஜாடா நீ… என்னை நீ ஏமாத்திடலடா…” அவன் முகத்தை தன் மார்புடன் சேர்த்துக்கொண்டு அவன் நெற்றியில் முத்தமிட்டாள். சம்பத்தின் உடல் மெல்ல குலுங்கியது. அவன் தன் தலை தன் தாயின் மார்பில் அழுந்தியிருக்க, ஏதோ சொன்னான். சொன்னது என்னவென்று அவர்கள் இருவருக்கும் புரியவில்லை. கல் கரைய ஆரம்பிக்க, ராணியின் மனதிலிருந்த பாரம் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது. நல்லசிவம் தாயையும், மகனையும் மவுனமாக பார்த்துக்கொண்டிருந்தார்.

இரவு உணவுக்குப்பின் அரை மணி நேரம் தேவாரம், திருவாசகம் என தமிழ் வேதங்களைப் படிப்பதை நெடுநாட்களாக தனது வழக்கமாக கொண்டிருந்த நல்லசிவம் அன்று கோளறு திருப்பதிகத்தை தன் மனமூன்றி பாராயணம் பண்ணிக்கொண்டிருந்தார்.

ராணி, தன் கணவரிடம் பிற்பகலில் முகம் சுளித்ததாலும், மாலையில் தன் ஆசை மகனை ஆவேசத்துடன் கை நீட்டி அடித்துவிட்டதாலும் உண்டான மனஇறுக்கம் மெல்ல மெல்ல குறைந்துவிட, ஹாலில் தன் மகனுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தாள். சம்பத்தும் தன்னுடைய இயல்பான மனநிலைக்கு வேகமாக திரும்பிக்கொண்டிருந்தான்.

“என்னைக்கு கிளம்பணும் ஊருக்கு? டிக்கட் புக் பண்ணிட்டியாப்பா? பாராயணத்தை முடித்ததும் ஹாலுக்குள் நுழைந்தவர், தன் மகனை வினவினார்.

“அம்மா உங்க கிட்ட சொல்லலையா? நான் சனிக்கிழமை காலையில புறப்படறேம்பா”, மெல்லிய புன்னகையுடன் தன் தந்தையின் முகம் பார்த்து பேசினான் தனயன்.

“ம்ம்ம்… உனக்கு பணம் ஏதாவது வேணும்னா அம்மாக்கிட்ட வாங்கிக்கோப்பா..” ஆசையுடன் பேசினார் நல்லசிவம்.

பொதுவாக தன் வரவு செலவு விவகாரங்களை சம்பத் தானே பார்த்துக்கொள்வது, நல்லசிவத்துக்கு நன்றாக தெரிந்திருந்த போதிலும், பெற்ற கடமைக்கு வாயால் சொல்லாமல், தன் மனதாரச் சொன்னார். அப்பாவும் பிள்ளையும் இயல்பாக சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

நல்லசிவம் தன் மகன் மீது வைத்திருக்கும் பாசத்தைக் கண்ட போது, சம்பத் தன் முதல் சம்பளத்துடன், வீட்டுக்கு வந்த நாள் ராணியின் நினைவுக்கு வந்தது. அவன் தன் முதல் மாத சம்பளத்தை கொண்டுவந்து தாயிடம் கொடுத்தான். ராணியை அன்று கையில் பிடிக்க முடியவில்லை. தன் கணவரிடமும் தன் உறவுகளிடமும் பெருமிதத்துடன் இதைச் சொல்லி சொல்லி தன் மகனைப் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.

“இந்த பணத்தை என்ன செய்யலாங்க..?” ராணி முகத்தில் பெருமையுடன் தன் கணவரிடம் கேட்டாள்.

“இப்பல்லாம் மாசக்கடைசியில சேலரி நேரா பேங்குக்குத்தான் போகுது. சம்பத்தோட சேலரி அவன் பேர்லேயே அப்படியே இருக்கட்டும். இன்னைக்கு வரைக்கும் அவன் எனக்கு எதுவும் கொடுப்பான்னு எதிர்பார்த்து நான் அவனுக்கு சோறு போட்டு, படிக்க வெச்சு, அவன் தேவைகளை நிறைவேத்தி, வளத்து ஆளாக்கி விடலை. பெத்தவங்களான நாம நம்மக் கடமையை செய்துட்டோம்.”