கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 26 10

“உங்க பையன், ஒரு பொண்ணை லவ் பண்றான்; ஆனால் அந்த பொண்ணை உங்க மருமகளா ஏத்துக்கறதா, இல்லையான்னு, அந்த நேரத்துல நீங்க ஒரு முடிவுக்கு வந்திருக்கலை. மேலும் அந்த பொண்ணோட குடும்பத்தைப் பத்தி அந்த நேரத்துல நீங்க முழுமையா விசாரிச்சு இருக்க மாட்டீங்கன்னு நான் நம்பினேன் …”

“உண்மைதான் குமார்…”

“அந்த நேரத்துல புதுசா ஒரு நல்ல வசதியான ஒரு இடம் உங்க பையனுக்கு வருதுன்னதும், உங்க மகனும், நீங்களும் என் ப்ரப்போசலுக்கு எப்படி ரியாக்ட் பண்ணப் போறீங்க? ஒரு ஆவரேஜ் மனிதன், வசதியான ஒரு குடும்பத்து பெண்ணை பாப்போமேன்னு நினைக்கறது சகஜம்…”

“மே பீ …மே பீ…”

“நடராஜன், நீங்க வசதியான இடத்தை தேர்ந்தெடுக்கிறீங்களா? இல்லே; பையனுடைய ஆசைக்கு மட்டுமே முக்கியத்துவம் குடுக்கறீங்களா? இதை தெரிஞ்சுகணும்ன்னு நான் ஆசைப்பட்டேன்..?!”

“ம்ம்ம்…”

“எனக்கு அபீஷியலா நல்லாத் தெரிந்த நடராஜனை, என் கலீக்கை, என் ஃப்ரெண்டை, டெஸ்ட் பண்ணணும்ன்னு நான் அன்னைக்கு நினைக்கலை; என் பொண்ணு லவ் பண்ற பையனோட அப்பாவை டெஸ்ட் பண்ணணுங்கற எண்ணம் எனக்கு சட்டுன்னு வந்தது…”

“ம்ம்ம்…”

“ஒரு விதத்துல இது தப்புதான் நடராஜன். அதுக்காக நான் உங்க கிட்ட இப்ப மன்னிப்பு கேட்டுக்கறேன்..”

“நோ … நோ…இட்ஸ் ஆல்ரைட்..”

“சுகன்யா என் பொண்ணுன்னு உங்களுக்கு தெரிய வரும்போது, உங்களோட நேர்மையை, நாணயத்தை, நான் சந்தேகப்பட்ட மாதிரி உங்களுக்குத் தோணலாம்.”

“ம்ம்ம்..”

“பொண்ணைப் பெத்தவன் நான்; நீங்க எப்படி என் குடும்பத்தைப்பத்தி, நாலு பேருக்கிட்ட விசாரிச்சேன்னு சொன்னீங்களோ; அது மாதிரிதான் நான் என் பொண்ணை ஒரு வீட்டுக்கு அனுப்பறதுக்கு முன்னாடி, என் பொண்ணு எங்க போய் வாழப்போறா? அந்த வீட்டு மனுஷாளோட குணம் எப்படீன்னு தெரிஞ்சுக்க நினைச்சேன்.”

“நாலு விதமா யோசனை பண்ணி, நல்லா விசாரிச்சுத்தானே என் ஒரே பொண்ணை நான் இன்னொருத்தர் வீட்டுக்கு அனுப்ப முடியும்? அதனாலதான் செல்வா ஆசைப்படற பொண்ணு, சுகன்யாதான், அவ என் பொண்ணுதான்னு அன்னைக்கு உங்க கிட்ட நான் சொல்லலை.”

“புரியுது குமார் …”

“என் அணுகுமுறையை நீங்க தப்புன்னு நெனைச்சா, அயாம் எக்ஸ்ட்ரீம்லி சாரி நடராஜன்..” குமாரசுவாமி தன் கைகளை கூப்பினார்.

“இல்லே குமார்! நான் உங்களைத் தப்பா நினைக்கலை..”

“இப்ப சொல்லுங்க நடராஜன், என் பெண் சுகன்யாவை, உங்க பையன் செல்வாவுக்கு கல்யாணம் பண்ணிக்க சம்மதம்தானே?”