கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 26 10

“ஒரு ஆசிரியர், என் ஊரைச்சேர்ந்தவர் … உங்க நண்பர்; அவரை எனக்குத் தெரியாது; அவர் என் மனைவியை பாராட்டி பேசினதா சொன்னீங்க; கேக்கும் போது எனக்கு ரொம்ப பெருமையா, மகிழ்ச்சியா இருந்தது.”

“உண்மையை எப்படி சார் மறைக்கமுடியும்?”

“நடராஜன், நீங்க என்னை மன்னிக்கணும். இப்ப சொல்லுங்க நடராஜன் சார்! என் மகள் சுகன்யாவை நீங்க வேணாம்ன்னு சொல்லப் போறீங்களா?” குமாரசுவாமி, நடராஜனின் கைகளைப் மன நெகிழ்ச்சியுடன் பிடித்துக்கொண்டார்.

“நிச்சயமா மாட்டேன் சார்…வேணாம்ன்னு சொல்ல எனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?”

“நடராஜன்! பிளீஸ் நீங்க
“சார் … சார்” ன்னு கூப்பிட்டு என்னை அன்னியப்படுத்தாதீங்க. நாம ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சம்பந்தி ஆகப் போறோம். இன் ஃபேக்ட், இன்னைக்கு நான் லீவுலே இருக்கேன். நீங்களும் லீவ்லேதான் இருக்கீங்க” நான் உங்க பாஸூம் இல்லே! நீங்க என் கலீக்கும் இல்லே!. குமாரசுவாமியின் குரலில் சிறிது தழதழப்பு இருந்தது.

“ஓ.கே. ஆஸ் யூ விஷ்.. நான் உங்களை குமார்ன்னு கூப்பிடட்டுமா?”

“நோ… இஸ்யூஸ்…”

“குமார் … நீங்க செல்வாவை ஹாஸ்பெட்டல்ல பாக்க வந்தப்ப, உங்க பொண்ணு சுகன்யா என் பையனைத்தான் லவ் பண்றான்னு உங்களுக்கு தெரியுமா?”

“தெரியும் … அன்னைக்குத்தான் நான் என் மனைவியையும், மகளையும், பதினைஞ்சு வருஷத்துக்கு அப்புறமா மீண்டும் சந்திச்சுட்டு வந்திருந்தேன்..”

“என் பையன் ஒரு பொண்ணை லவ் பண்றான்னு சொன்னேன். நீங்க உங்க பொண்ணை, செல்வாவுக்கு பாருங்கன்னு சொன்னீங்க; ஆனா உங்க பொண்ணு சுகன்யாதான்னு அப்ப ஏன் சொல்லலை?

“அயாம் சாரி நடராஜன்; அன்னைக்கு செல்வா லவ் பண்ற பொண்ணு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவன்னு நீங்க சொன்னீங்க; என் பொண்ணை உங்க பையனுக்கு பாருங்கன்னதும் கொஞ்சம் டயம் குடுங்கன்னு கேட்டீங்க இல்லையா?”

“ம்ம்ம்..” நடராஜன் குறுக்கில் பேசாமல் குமாரசுவாமியை பேச அனுமதித்தார்.

“உங்களைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும், நேர்மையானவர், குடுத்த வார்த்தையை மதிக்கறவர். அப்படிப்பட்டவர் எங்கிட்ட நீங்க டயம் குடுங்கன்னு சொன்னதும், ஒரு வினாடி என் மனசுக்குள்ள … ஒரு சின்ன சந்தேகம் வந்தது!”

“ம்ம்ம் … சந்தேகம்? என்ன அது?”

“நான் ஒரு பெண்ணை பெத்தவங்கற ஸ்தானத்துல என்னை வெச்சு பாருங்க நடராஜன்… என்னுடைய ஃபினான்ஷியல் பேக் ரவுண்ட், என் சொத்து பத்து, இந்த விவகாரம் எல்லாம் உங்களுக்கு நல்லாத் தெரியும். நான் இங்க வந்த உடனே, தனிப்பட்ட முறையில, உங்களை என் ஆடிட்டராவும் இருக்க சொல்லி ரெக்வெஸ்ட் பண்ணியிருக்கேன்.”

“சரி …”

“என் அசையும், அசையா சொத்து விவரங்களை நான் நம்ம கம்பெனி விதி முறைகள் படி நான் வருஷா வருஷம் டிக்ளேர் பண்ணியிருக்கேன். இந்த கிளையோட சீஃப் அக்கவுண்ட்ஸ் ஆஃபிசர்ங்கற முறையில, இந்த விவரங்கள் அடங்கிய என் பெர்சனல் பைல், உங்க கிட்டத்தானே இருக்கு?”

“யெஸ் … யூ ஆர் கரெக்ட்…”