கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 26 10

“டிஃபன் அயிட்டம் எதாவது சொல்லுங்க; ரெண்டு வாரம் முன்னாடிதான் ஊர்லேருந்து வந்தீங்க; என்ன சார் விஷயம்?நடராஜன் சோஃபாவில் அவர் எதிரில் அமர்ந்து கொண்டார்.

“மிஸஸ் மாலதி … டிஃபன் என்ன கிடைக்கும் நம்ம கேண்டீன்ல? …
“இன்னைக்கு ரவா தோசை கிடைக்குமா? தட்ஸ் குட் … குயிக்கா ரெண்டு ரவா தோசையும், கூடவே ரெண்டு ப்ளேட் தயிர் வடையும் வரவழைச்சுடுங்க; அண்ட் நோ மோர் கால்ஸ் ஃபார் அன் அவர்; யூ மே கோ ஃபார் யூர் லஞ்ச் ஃப்ளீஸ்!”

“சார் … இது என் லீவ் லெட்டர் …” நடராஜன் ஒரு காகிதத்தை அவரிடம் நீட்டினார்; குமாரசுவாமி அதைப் பார்க்கமலேயே தன் கையெழுத்தை அதில் கிறுக்கினார்.

“அப்புறம் சொல்லுங்க …”

“என் பையன் செல்வா, ஒரு பொண்ணை விரும்பறான்னு உங்க கிட்ட சொல்லியிருந்தேன்; உங்களுக்கு ஞாபகமிருக்கலாம்; அந்த பெண்னை நிச்சயம் பண்ணலாம்ன்னு குடும்பத்தோட கும்பகோணம் போறேன்..”

“ரொம்ப சந்தோஷம்…”

“பொண்ணு பேரு சுகன்யா… என் பையனோட இங்க சென்னையிலத்தான் வொர்க் பண்ணிக்கிட்டு இருக்கா! ரொம்ப நல்லப் பொண்ணு! கண்ணுக்கு நிறைவா குடும்ப பாங்கா இருக்கறா! என் பையன் அடிபட்டு பிழைக்க கிடந்தப்ப; கூடவே இருந்து தாலி கட்டிகிட்ட பொண்டாட்டி மாதிரி அவனைப் பாத்துக்கிட்டா! பசங்க ஒருத்தரை ஒருத்தர் ஆசைப்பட்டுட்டாங்க; கல்யாணத்தை உறுதி பண்ணிடலாம்ன்னு லீவுல போறேன்…”

“தட்ஸ் வெரி நைஸ் டு ஹியர்…” குமாரசுவாமி அவர் கையை குலுக்கினார்.

“சார் .. உங்க சொந்த ஊரும் கும்பகோணத்துக்கு பக்கத்துலதானே?”

“ஆமாம்…”

குமாரசுவாமி, நடராஜன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். நடராஜன் முகம் மகிழ்ச்சியில் பளீரென்றிருந்தது. ஆஃபீஸ் பையன் கேண்டீனிலிருந்து வரவழைக்கப்பட்ட டிஃபனை அவர்கள் முன்னால் பரிமாறினான்.
“ரமேஷ் – பதினைஞ்சு நிமிஷம் கழிச்சு ரெண்டு கப் காஃபி எங்களுக்கு குடுத்துடுப்பா ..”

“ஓ.கே. சார்.” பையன் நகர்ந்தான்.

“சாப்பிடுங்க நடராஜன்…”

“பெண்ணுக்கு அம்மா சுந்தரின்னு… பீ.ஜீ. டீச்சரா வொர்க் பண்றாங்க; அவங்களுக்கும் அவங்க ஹஸ்பெண்டுக்கும் இடையில ஏதோ கொஞ்சம் ஒத்துவராம தனியா பெண்ணை கஷ்டப்பட்டு வளர்த்து இருக்காங்க. அவங்களோட தம்பி, ரகுராமன்னு, தங்கமான மனுஷன், அக்கா லைப் இப்படி ஆயிடிச்சேன்னு, தான் கல்யாணமே பண்ணிக்காம அக்கா கூடவே அக்காவுக்கும், அக்கா பொண்ணுக்கும் சப்போர்ட்டா இருக்கார்…!”

“ம்ம்ம்ம்…”

“என்னோட கூட படிச்ச ஃப்ரெண்ட் ஒருத்தன் சுந்தரம்ன்னு, கும்பகோணத்துல ஹைஸ்கூல் ஹெச்.எம். ஆக இருக்கான். எங்க ஸ்கூல்லதான் சுகன்யா படிச்சா … எனக்கு அவளை நல்லாத்தெரியும். நைஸ் அண்ட் இண்டலிஜண்ட் கேர்ள் … அவளோட அம்மாவும் என் ஸ்கூல்லத்தான் வொர்க் பண்றாங்க; ஹைலி டீசண்ட் அண்ட் மாரலி ஸ்ட்ராங் வுமன்; கேள்வியே எதுவும் கேக்காமா, கண்ணை மூடிக்கிட்டு சுகன்யாவை, உன் மருமகளாக்கிக்கோன்னு சொன்னான்.” குமாரசுவாமி தன் வாயை டீஷ்யூ பேப்பரால் துடைத்துக்கொண்டு, காஃபியை உறிஞ்ச ஆரம்பித்தார்.

“ஸோ … நடராஜன் … நீங்க அவங்க குடும்பத்தைப் பத்தி நல்லா விசாரிச்சு இருக்கீங்கன்னு தெரியுது!”