கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 26 10

“சீனூ.. ஐ லவ் யூ …” மீனா சட்டென தன் கரங்களால் அவன் கழுத்தை வளைத்தாள். அவன் முகத்தை தன்புறம் இழுத்து அவன் இரு கன்னங்களிலும் தன் இதழ்களை வேகமாகப் பதித்தாள். சீனு தன் நிலையிழந்து பேச வாயில்லாமல் நின்றான்.

வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள் வந்து ஆடும் காலமிது…!!
இவள் நாதம் தரும் சுகசுரங்கள் எந்தன் தேவி உந்தன் சமர்ப்பணங்கள்…!!

“ம்ம்ம்.. சீனு சட்டுன்னு ஒரு முத்தம் குடுடா… நான் போகணும் உள்ளே!” அவள் விழிகளில், விழிகளிலிருந்து புறப்பட்டப் பார்வையில் சொல்லவொண்ணா காதலும், நேசமும், தவழ்ந்து கொண்டிருந்தன.

உந்தன் சங்கீதச் சலங்கை ஒலி இந்த ஏழைக்கு கீதாஞ்சலி…!!
அந்தப் பாதங்கள் அசையும் ஒலி எந்தன் பூஜைக்கு கோயில் மணி…!!!
சுவரெங்கும் கண்ணாக ஆகும் இனி உயிரோடு சேரும் சுருதி…!!!

“மீனாட்சி … ஐ லவ் யூம்ம்மா… ஐ லவ் யூ …” சீனுவால் அதற்குமேல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், மீனாவை இழுத்து தன் மார்புடன் இறுக்கி அணைத்துக் கொண்டான். மீனாவின் இரு கன்னங்களிலும் மென்மையாக முத்தமிட்டான். முத்தமிட்டவன் ஒரு வினாடி அப்படியே செய்வதறியாமல் நின்றான். மீனாவும் அவன் அணைப்பில் தன் மெய்மறந்து நின்று கொண்டிருந்தாள்.

தன்னந்தனிமையில் இருகிளி இணைந்தது சிறகுகள் நனைந்தது பனியிலே…
நனைந்ததனால்…சுடுகிறதே.. இனி ஒரு தினம் புது மலர்வனமே …!!!
மனதில் ஒளி கொடு ரகசிய நிலவில் விரலின் ஸ்பரிசம் உயிரை உரசும்…
விரலின் ஸ்பரிசம் உயிரை உரசும் இரு பருவ ராகங்கள் சுருதி சேருங்கள்…!!!
புதிய கானங்கள் பொழியவே அமுத மேகங்கள் பொழிய வாருங்கள்…
இளைய தேகங்கள் நனையவே கண்ணில் ஒரு காதல் துள்ளுது பெண்னெஞ்சில் ஒரு மோகம் துள்ளுது தன்…
இருதய துடிப்பொடு விழியில் தெரிய இளகி இணையும் இரு மனது…!!!

“மீனா, கார் சாவியை நீ பாத்தியாடீ? … செல்வாவின் குரல் வெரண்டாவில் எதிரொலிக்க, மீனா வேகமாக சீனுவை உதறிவிட்டு வீட்டினுள் ஓடினாள்.

முதல் முறையாக இளம் பெண் ஒருத்தியின் மென்மையான, உடல் தந்த இதமான, அவன் இதுவரை அறிந்திராத சூட்டினை, சுற்று சூழ்நிலை மறந்து அனுபவித்த, சீனு தன் கண்களை மூடி நின்று கொண்டிருந்தான்.

“ஈஸ்வரா, காலம் கெட்டுப் போச்சுங்கறது … உண்மையாத்தான் இருக்கு.. கலி முத்திக்கிட்டு இருக்கு, நடராஜன் தன் வீட்டுல இவனை சொந்தப்பிள்ளையா வெச்சிருக்காரு…. வளர்த்த கடா மார்லதானே பாயும்! படுபாவி… உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணலாமா?”

எதிர் வீட்டு மாடியில், குளித்துவிட்டு வந்து, தன் வேஷ்டியையும், மேல் துண்டையும் காயவைத்துக்கொண்டிருந்த, நடராஜனின் வாக்கிங் தோழர் ராமசாமி, யதேச்சையாக கீழே பார்க்க, தன் நண்பரின் வீட்டில், மாடிப்படி சுவற்றுக்கு அருகில், மீனாவும், சீனுவும் சேர்ந்து அரங்கேற்றிய முத்த நாடகத்தை மூச்சு விடாமல் பார்த்துக்கொண்டிருந்தார். தமிழில் இருக்கும் எதிர்மறை பண்புகளை குறித்த அத்தனை பழமொழியும் அவருக்கு உடனே ஞாபகம் வந்தது.

நடராஜன், தனக்கு அவ்வப்போது சுந்தரம் அய்யர் மெஸ்ஸில், சூடாக வாங்கிக் கொடுக்கும் சுவையான பில்டர் காப்பியை குடித்ததனால், அவருக்கு தான் பட்டிருக்கும் நன்றிக் கடனை உடனடியாக தீர்க்க அவர் மனது துடித்தது.

சீனுவின் இடது கண் துடிக்க ஆரம்பித்தது. அம்மாவை கேக்கணும் … ஆண்களுக்கு இடது கண் துடிக்கறது நல்லதா? கெட்டதா? சீனு தன் கன்னத்தை அழுத்தி தேய்த்துக்கொண்டான்.
குமாரசுவாமி, ஒரு வாரம் தன் லீவுக்கான விண்ணப்பத்தை, தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிவிட்டு, தன் உதவியாளர்களை விரட்டி விரட்டி வேலை வாங்கிக்கொண்டிருந்தார். அதே வேகத்தில் தானும் ஒரு நிமிடம் கூட உட்க்காராமல் சுழன்று சுழன்று வேலை செய்து கொண்டிருந்தார். அலுவலகத்தில் தான் விடுப்பில் இருக்கும் போது கவனிக்க வேண்டிய வேலைகளை பட்டியலிட்டு, தன் கீழ் பணிபுரியும் இரண்டு உதவி மேலாளர்களிடம் விவரித்துக்கொண்டிருந்தார்.

மாதத்தின் கடைசி வாரம் ஆதலால், அந்தக் கிளையின் மாத வரவு செலவு கணக்கை, கையில் வைத்துக்கொண்டு, நடராஜனின் உதவியாளர் அவர் எதிரில் நின்று கொண்டிருந்தார். அவர் கையழுத்துக்காக, ஊழியர்களின் சம்பளப்பட்டியல், காத்துக்கொண்டிருந்தது. அன்றைய வேலையை முடித்துவிட்டு, மூணு மணி அளவில் கும்பகோணம் கிளம்புவதற்கு அவர் திட்டமிட்டிருந்தார்.

“ராஜகோபால், உங்க கையில என்ன? இந்த மாச பேலன்ஸ் ஷீட்டா? நடராஜன் பாத்துட்டாரா?”

“யெஸ் சார்; அர்ஜெண்டா பேலன்ஸ் ஷீட்டைப் உங்க பார்வைக்கு வைக்கச் சொன்னார்; உங்க கிட்ட போன்ல பேசறேன்னும் சொன்னார்.”

“சரி அப்படி வைங்க நான் பாக்கறேன். நடராஜன் அடுத்த ஒரு வாரம் லீவுல இருப்பார்; அவர் வந்தார்ன்னா ஒரு ரெண்டு நிமிஷம் சிரமம் பாக்காம, என்னைப் பாத்துட்டு போகச் சொல்லுங்க. நானும் லீவுல போறேன்; அக்கவுண்ட்ஸ்ல்லாம் நீட் அண்ட் க்ளீனா வெச்சுக்கங்க. யூ ஆர் அன் எக்ஸ்பீரியன்ஸ்ட் மேன்! எதாவது முக்கியமான இஸ்யூன்னா, என் செல்லுல எப்ப வேணா நீங்க என்னை காண்டாக்ட் பண்ணலாம். டூ யூ அண்டர்ஸ்டேண்ட்?”