கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 26 10

“ஆமாம் சார் … என் வீட்டுக்கு வரப் போற பொண்ணு; அவ என் மருமக இல்லே; என் மகளா நான் அவளை நடத்துவேன்; என் வீட்டுல அவ சந்தோஷமா இருக்கணும்; அதே சமயத்துல என் குடும்பத்தோட மகிழ்ச்சி அவ கையிலத்தானே இருக்கு? வயசான காலத்துல எங்களையும், தன் அப்பா அம்மாவா அவ கவனிச்சுக்கணும்! அதனால வரப்போற மருமக குடும்பத்தைப் பத்தி நல்லா விசாரிக்கணும் இல்லீங்களா?”

“நிச்சயமா..”

“குடும்பம் நல்ல குடும்பம்ன்னா பொண்ணும் குணமுள்ளவளாத்தான் இருப்பா! சுகன்யாவோட ஆஃபீசுல விசாரிச்சேன். யாருமே அந்த பெண்ணைப் பத்தி ஒரு குறையும் சொல்லலை. எல்லோருமே சுகன்யாவைப் பத்தி நல்லபடியாத்தான் சொன்னாங்க.”

‘ம்ம்ம்ம் … நடராஜன் நீங்க சொல்ற இந்த லேடியையும், அவங்க ஃபேமலியையும் எனக்கும் பர்சனலாத் தெரியும்..” தன் மனைவியையும், பெண்ணையும், நடராஜன் புகழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்ததை கேட்ட குமாரசுவாமியின் மனதில் பெருமிதம் பொங்கிக்கொண்டிருந்தது.

“அப்படியா சார்! ஆச்சரியமா இருக்கு; அப்புறம் தீர விசாரிச்சதுல சுகன்யாவோட அப்பாவும், நார்த்ல எங்கேயோ நல்ல வேலையில இருக்கறதா தெரிஞ்சுது.”

“ம்ம்ம்… அந்த லேடியோட ஹஸ்பெண்ட், குடிப்பழக்கத்துக்கு ஆளாகி … பெண்டாட்டியையும், பெண்ணையும், தன் குடும்பத்தையும், அம்போன்னு விட்டுட்டு போயிட்டார் இல்லையா?” குமாரசுவாமி புன்முறுவலுடன் பேசினார்.

“அப்படித்தான் என் ஃப்ரெண்ட் சுந்தரம் சொன்னான். என் மனைவியும் இந்த விஷயத்தை கேட்டதும், கொஞ்சம் ஆரம்பத்துல தயங்கினாங்க; என் பிள்ளை மூலமா, சுகன்யாவை இது பத்தி கேக்கச் சொன்னாங்க. ஆனா நல்ல குடும்பம், நல்ல பொண்ணு; இதுக்கு மேல எனக்கு என்ன சார் வேணும்? என் வீட்டுக்கு வரப்போற பொண்ணோட குணம்தானே சார் எங்களுக்கு முக்கியம்; சுகன்யாவோட அப்பாவைப் பத்தி நமக்கென்னன்னு, என் ஒய்ஃபை கன்வின்ஸ் பண்ணேன். என் மனைவியும் சரின்னு சொன்னாங்க. பைனலா, நேத்து ராத்திரிதான் கல்யாணத்துக்கு எங்களுக்கு மனசார சம்மதம்ன்னு சொல்லிட்டேன். அதனால….”

“ம்ம்ம் ..” நடராஜன் அவர் சொல்லுவதை குறுக்கிடாமல் முகத்தில் எந்த வித உணர்ச்சியையும் காட்டாமல் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார்.

“அதனால …
“ நடராஜன் பேசுவதை ஒரு வினாடி நிறுத்தி விட்டு குமாரசுவாமியின் முகத்தை ஒரு முறை கூர்ந்து நோக்கிவிட்டு தன் தலையை தாழ்த்திக்கொண்டார்.

“சொல்லுங்க நடராஜன் …”

“நீங்க என்னைத் தப்பா நெனைக்கக் கூடாது … அஃபீஷியலா உங்களைப் பத்தி எனக்கு ரொம்ப நல்லாத் தெரியும்; நாலைஞ்சு வருஷமா பர்ஸனலாவும் ஓரளவுக்கு தெரியும். உங்க பொண்ணும் உங்களை மாதிரி ரொம்ப நல்லப் பொண்ணாத்தான் இருப்பாங்க! ஆண்டவன் அருளாலே அவங்களுக்கு நல்ல எடத்துல வரன் அமையணும்; கண்டிப்பா அமையும்…” நடராஜன் தன் வார்த்தையை முடிக்காமல் இழுத்தார்.

“நடராஜன்… நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குப் புரியுது. உங்க வாயில தயவு செய்து வேணாம்ங்கற வார்த்தை மட்டும் வரவேண்டாம். முதல்லே என் டாட்டரோட போட்டோவை நீங்க ஒரு தரம் பாருங்க; அப்புறம் நீங்க உங்க அபிப்பிராயத்தை சொல்லுங்க; ப்ளீஸ்…” குமாரசுவாமியின் கண்களில் விஷமம் துள்ளி குதித்து விளையாடியது.

“நிச்சயமா சார் … மே காட் பிளஸ் ஹர்!”

என் பையனுக்கு பெண் ஃபிக்ஸ் பண்ணிட்டேன்னு சொன்னதுக்கு அப்புறமும், இவர் ஏன் தன் பெண்ணோட போட்டோவை இந்த நேரத்துல எனக்கு காமிக்க விரும்பறார்? ம்ம்ம்ம் … இவர் பெண்ணும் எனக்கு என் பொண்ணு மீனாட்சி மாதிரிதானே; சாதாரணமா பாக்கறதுல என்னத் தப்பு? நடராஜன் தன் மனதுக்குள் சொல்லிக்கொண்டார்.

குமாரசுவாமி நிதானமாக எழுந்து தன் மேஜையின் இழுப்பை திறந்தார். சமீபத்தில் அவர் தன் குடும்பத்துடன் மஹாபலிபுரம் சென்ற போது எடுத்த, சுந்தரியும், சுகன்யாவும் அருகருகில் நிற்கும் பெரிதாக்கப்பட்ட புகைப்படத்தை நடராஜனிடம் நீட்டினார்.

“சார் உங்க கிட்ட இந்த போட்டோ? இந்த படத்துல இருக்கறது சுகன்யாவும், அவளோட அம்மா சுந்தரியுமாச்சே!! இவங்களோட புகைப்படம்? உங்ககிட்ட … எப்படி சார் ???” புகைப்படத்தை பார்த்த நடராஜன் திடுக்கிட்டு, கண்களில் திகைப்பும், பேச்சில் வியப்புணர்ச்சியும் வெகுவாக கலந்திருக்க, சட்டென எழுந்தார்.

“உக்காருங்க நடராஜன், உங்க ஆச்சரியம் எனக்குப் புரியுது. சுந்தரி என் மனைவி; சுகன்யா என் ஒரே மகள்; ஆரம்பத்துல, தேவையில்லாத சில நண்பர்களின் சேர்க்கையால், அவங்க நட்ப்பை நான் தவிர்த்து இருக்கணும்; you know .. some times.. things are not under your control; you could very well understand …” குமாரசுவாமி நீண்ட பெருமூச்சு விட்டார்.

“என் கல்யாணத்துக்கு அப்புறம், நான் குடிப்பழக்கத்துக்கு ஆளாகி, எனக்கு கிடைச்ச அன்பான மனைவி, அருமையான மகள், எல்லோரையும் தவிக்கவிட்ட, நீங்க சொன்ன நார்த்ல வேலை செய்துகிட்டு இருந்த சுந்தரியோட ஹஸ்பெண்ட் நான்தான்.”

“ப்ச்ச் ..ப்ச்ச்…” நடராஜன், தன் காதுகள் கேட்பதை நம்ப முடியாமல் சூள் கொட்டினார். திகைப்புடன் குமாரசுவாமி பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தார்.

“நான் சுகன்யாவை பெத்தவன்னு தெரியாம, என் பொண்ணை நீங்க என் கிட்ட வாயார, மனசு நெறைஞ்சு, புகழ்ந்து பேசீனீங்க. The entire credit goes to my wife Sundari. இன்னைக்கு என் மகள் சுகன்யா நல்ல நிலைமையில இருக்கறதுக்கு காரணம் என் மனைவியின் பொறுமை; உழைப்பு; என் மைத்துனன் ரகுவோட தியாகம்தான்; இன்னைக்கு என் பெண் உங்களை மாதிரி ஒரு நல்ல மனுஷன் வீட்டுக்கு மருமகளா போகப் போறான்னா அதுக்கு காரணமே சுந்தரியும் ரகுவும்தான்.”

“சார் எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை…”