எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 9 55

பற்களால் அந்த உதடுகளை அழுத்தி கடித்துக் கொண்டாள்..!! அவ்வாறு கடித்ததுமே முணுக்கென்று அவளுடைய கண்களில் நீர் வெளிப்பட்டு ஓடி வந்தது.. அவசரமாய் அந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்..!! முகத்தை வேறெங்கோ திருப்பி.. மூக்கை ஒருமுறை உறிஞ்சிக்கொண்டு.. உதடுகள் படபடக்க.. உடைந்து தழதழத்துப் போன குரலில் சொன்னாள்..!!

“ச்சோ.. ச்ச்வீட்..!!!!”

அதன்பிறகு வந்த சில நாட்கள்.. மீரா என்ற புதிருக்கான விடையை அறிந்து கொள்வதில்.. அசோக்கிற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்துகிற நாட்களாகவே அமைந்தன..!! முன்பிருந்தது போலல்லாமல்.. முற்றிலும் மாறுபட்ட ஒரு மீராவை அசோக் அந்த நாட்களில் காண நேர்ந்தது..!! அவளுடைய நடவடிக்கைகளின் அர்த்தத்தை.. அவ்வளவு எளிதாக அசோக்கால் விளங்கிக் கொள்ள முடியவில்லை..!! ஏரியின் மீது நின்று தான் பேசிய ஆவேச பேச்சு.. ஏதோ ஒருவகையில் மீராவை பாதித்திருக்கிறது என்பது மட்டுமே அசோக்குக்கு புரிந்தது..!! அது எந்தவகை பாதிப்பு.. அந்த பாதிப்பின் பலன் பாஸிட்டிவா, நெகட்டிவா.. என்பதை எல்லாம் சரியாக அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை..!!

அன்று அவன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியபோது.. ஒன்று.. மீரா தன்னை புரிந்து கொள்ளாமல் எரிந்து விழப் போகிறாள்.. இல்லை என்றால்.. தன் தவறை உணர்ந்து, மனமுருக மன்னிப்பு கேட்கப் போகிறாள்.. என்றுதான் அசோக் எதிர்பார்த்திருந்தான்..!! எதற்கும் சம்பந்தமில்லாமல்.. எங்கோ பார்த்துக்கொண்டு.. அவள் ‘ச்சோ.. ச்ச்வீட்..’ என்று சொன்னதை.. அவன் சற்றும் எதிர்பார்த்திரவில்லை..!! அப்படி சொல்கையில் அவளுடைய முகபாவனை வேறு.. அசோக்கை சற்று மிரள செய்திருந்தது.. அவளுடைய கண்ணீர் மட்டும் அவனுடைய மனதை பிசைவதாக இருந்தது.. ஆனால், அவளிடம் மேற்கொண்டு எதுவும் கேளாமல் மவுனமாகவே இருந்தான்..!! ‘ச்சோ.. ச்ச்வீட்..’ என்று சொல்லிவிட்டு.. கொஞ்ச நேரம் அமைதியாக ஆகாயத்தையே வெறித்து பார்த்துவிட்டு.. அடுத்து அவள் பேசிய வார்த்தைகள்..

“கெளம்பலாம்.. டைம் ஆச்சு..!!” என்பதுதான்.

சொல்லிவிட்டு அசோக்கை எதிர்பாராமலே, பைக் நோக்கி விடுவிடுவென நடந்தாள். அசோக்குக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. அவள் மனதில் என்ன இருக்கிறது என்பதும் புரியவில்லை..!! அவஸ்தையுடன் அவளையே பார்த்தவன், பிறகு அவளின் பின்னால் நடந்தான்.. பில்லியனில் அவள் ஏறிக்கொள்ள.. பைக்கை உதைத்து கிளப்பினான்..!!

வாகன போக்குவரத்து அதிகமில்லாத தார்ச்சாலையில்.. வண்டி மிதமான வேகத்திலேயே சென்று கொண்டிருந்தது..!! ஏரியில் நனைந்த இருவரது உடல்களும்.. எதிரே வீசிய குளிர்ந்த காற்றுக்கு.. லேசாய் வெடவெடத்தன..!! அதே நேரம் இருவருடைய இதயங்களும்.. ஒருவித வெப்பத்தில் தகித்துக் கொண்டிருந்தன..!! இருவரும் ஒரு இறுக்கமான மனநிலையுடன்.. எதுவுமே பேசாமல்தான் சென்று கொண்டிருந்தனர்..!! அசோக்தான் மீராவின் அமைதியை நெடுநேரம் பொறுக்க முடியாமல்.. முதலில் பேச ஆரம்பித்தான்..!!

“ஏ..ஏன் எதுவுமே பேசாம வர்ற..??” என்று உலர்ந்து போன குரலில் கேட்டான்.

“ஒன்னுல்ல..!!” அவளும் வறண்டு போன குரலில் பதில் சொன்னாள்.

“எ..என் மேல கோவமா..??”

“ம்ஹூம்..!!”

“ஸாரி மீரா..!! நான் உன்னை ஹர்ட் பண்றதுக்காக அப்படி சொல்லல.. எனக்கு..” அசோக் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே,

“நீ எதுக்கு ஸாரி கேக்குற.. நீ என்ன தப்பு பண்ணின..?? என் மேலதான் தப்பு..!!” மீரா இடைமறித்து வெடுக்கென்று சொன்னாள்.

“அதுக்கில்ல மீரா.. நான்..”

“ரோட்டை பாத்து வண்டியை ஓட்டு அசோக்.. அப்புறம் பேசிக்கலாம்..!!”

அசோக் அதன்பிறகு பேசவில்லை.. சாலையில் கவனத்தையும் வண்டியையும் செலுத்த ஆரம்பித்தான்..!! ஆனால் மீரா சொன்ன மாதிரி.. அந்த விஷயம் பற்றி பேசத்தான் அதன்பிறகு அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை..!! ஆழ்வார் திருநகர் அருகே சிக்னலுக்காக அசோக் வண்டியை நிறுத்த.. மீரா அங்கேயே திடீரென பைக்கில் இருந்து இறங்கிக் கொண்டாள்..!!

“நான் இங்க இறங்கிக்கிறேன்.. நாளைக்கு பாக்கலாம்..!!”

இறுக்கமான குரலில் சொன்னவள், அசோக்கின் பதிலுக்கு கூட காத்திராமல், சிக்னலுக்காக உறுமிக்கொண்டிருந்த வாகனங்களுக்கு இடையில் புகுந்து, அவசர அவசரமாக நடந்தாள். அவள் செல்வதையே அசோக் ஒருவித தவிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதற்கு அடுத்த நாள்.. அவன் அதை விட பலமடங்கு தவிக்க வேண்டி இருந்தது.. மீரா அவனை தொடர்பு கொள்ளவே இல்லை..!! ‘என்ன ஆயிற்று.. ஏன் ஒரு ஃபோன்கால் கூட செய்யவில்லை.. அவளுடைய செல்ஃபோனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது.. கடுமையான வார்த்தைகளால் அவளை காயப்படுத்தி விட்டேனோ.. கோவத்தில் இருக்கிறாளோ..?? இல்லையே.. ‘என் மேலதான் தப்பு’ என்று அவள் சொன்னபோது.. அந்த குரலில் ஒரு குற்ற உணர்ச்சி தெரிந்ததே..?? என் மீது அவளுக்கு கோவம் எதுவும் இருப்பது மாதிரி தெரியவில்லை..!! அப்புறம் என்ன..?? ம்ம்ம்ம்.. ஒருவேளை.. அன்று மாதிரி.. வேறெதாவது எதிர்பாராத சூழலில் சிக்கியிருப்பாள்.. அதனால்தான் தொடர்பு கொள்ளவில்லை போலிருக்கிறது..!!’ மனதை சமாதானப்படுத்திக் கொண்டாலும்.. அவளை காணாத தவிப்பு என்னவோ கொஞ்சமும் குறைவது மாதிரி இல்லை..!! அன்றைய தினத்தை ஒருவித அழுத்த மனநிலையுடனே அசோக் கழித்தான்..!!