எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 9 54

மீரா அசோக்கை ரொம்பவும் தவிக்கவிடவில்லை..!! இரண்டாவது நாள் நண்பகல்.. அசோக் நண்பர்களுடன் ஃபுட்கோர்ட்டில் உணவருந்திக் கொண்டிருக்க.. திடீரென்று ‘ஹாய் அசோக்..!!’ என்றவாறு அவர்கள் முன்பு வந்து நின்றாள்..!! முகத்தில் ஒரு வசீகர புன்னகையுடன்.. கண்களில் ஒரு பளீரென்ற மின்னலுடன்.. ‘என்ன.. நேத்து என்னை மிஸ் பண்ணுனியா..??’ என்று கேட்டாள் அசோக்கிடம்..!! அந்த அழகு சிரிப்பில் அசோக்கின் தவிப்பெல்லாம் தவிடு பொடியானது.. ‘யெஸ்..!!’ என்று புன்னகைத்தான் நிம்மதியாக..!!

அப்புறம் நண்பர்கள் ஆபீஸுக்கு கிளம்பிவிட.. மீரா அதன்பிறகுதான் சாப்பிட ஆரம்பிக்க.. அசோக் வெறுமனே கைகளை கட்டிக்கொண்டு.. அவள் சாப்பிடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்..!! அவளுடைய முகத்தில் மிக அரிதாகவே காணமுடிகிற ஒருவித அமைதியை.. இப்போது அவன் காண நேர்ந்தது..!!

“நேத்து என்னாச்சு.. ஆளை காணோம்..??” அசோக் திடீரென கேட்டான்.

“அ..அது.. அது வந்து..” என்று ஆரம்பத்தில் தயக்கத்துடன் இழுத்த மீரா, பிறகு

“நே..நேத்து ஒரு இண்டர்வ்யூ.. அதான்..!!” என்றாள் புன்முறுவலுடன்.

“ஓ.. இண்டர்வ்யூலாம் அட்டன்ட் பண்ண ஆரம்பிச்சுட்டியா.. சொல்லவே இல்ல..!!”

“எ..எல்லாம் நேத்துல இருந்துதான்..!! கோர்ஸ் முடிஞ்சி போச்சுல.. இனி ஜாப்க்கு ட்ரை பண்ணனும்..!!”

“ஹ்ம்ம்..!! அப்பா கோடீஸ்வரரா இருந்தாலும்.. நீ உன் சொந்தகால்ல நிக்கனும்னு நெனைக்கிற பாத்தியா..?? உன் ஆட்டிட்யூட் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மீரா..!!”

அசோக் சற்றே பெருமிதமாக சொல்ல, மீரா அதற்கு பதில் ஏதும் சொல்லவில்லை. ஒருவித உலர்ந்த புன்னகையை உதிர்த்தாள். தட்டில் இருந்த உணவை, ஸ்பூனால் அள்ளி அள்ளி வாய்க்கு கொடுத்தவாறு, மீண்டும் அமைதியாகிப் போனாள். அப்புறம் அசோக்கே திடீரென ஞாபகம் வந்தவனாய் கேட்டான்.

“அதுசரி.. இண்டர்வ்யூ என்னாச்சுன்னு சொல்லவே இல்லையே..??”

“ஹ்ஹ.. ஊத்திக்கிச்சு..!!” சொல்லும்போதே மீராவிடம் ஒரு விரக்தி சிரிப்பு.

“ஓ..!!”

“ப்ச்..!! நான் ரொம்ப அன்லக்கி அசோக்..!!” மீராவின் குரலில் ஒரு மிதமிஞ்சிய வருத்தம் தொனிக்க, அசோக் அவளை வித்தியாசமாக பார்த்தான்.

“ஹேய்.. என்ன நீ..?? இதுக்குலாம் போய் இவ்ளோ ஃபீல் பண்ணிக்கிட்டு..?? இந்த வேலை இல்லனா.. இன்னொரு வேலை..!! இப்படி ஃபீல் பண்ற.. கமான்.. சியர் அப்..!!”

அசோக் அவ்வாறு சொல்லவும், மனதை அப்படியே கொய்து எடுக்கிற மாதிரியான அந்த புன்னகையை, மீரா இப்போது அவளது உதட்டுக்கு கொடுத்தாள். அசோக்கின் கண்களை நேருக்கு நேர் சந்தித்து ஆழமாய் ஒரு பார்வை பார்த்தாள்.

பிறகு.. இருவரும் ஃபுட் கோர்ட்டை விட்டு வெளியே வந்து.. படிக்கட்டில் இறங்கிக்கொண்டிருக்கையில்..

“இ..இனி நாம.. அடிக்கடி மீட் பண்ண முடியாதுன்னு நெனைக்கிறேன் அசோக்..!!” என்றாள் மீரா திடீரென.

“ஏ..ஏன் மீரா.. ஏன் அப்படி சொல்ற..??” அசோக் புருவத்தை சுருக்கி கேட்டான்.

“இ..இண்டர்வ்யூக்கு ப்ரிப்பேர் பண்றேன் இல்லயா.. அ..அதான்..!! கொஞ்சம் சின்ஸியரா படிக்கணும்..!!”

“ஹ்ஹ.. இவ்ளோதானா..?? இ..இதுலாம் எங்கிட்ட சொல்லிட்டு இருக்கனுமா மீரா.. நான் புரிஞ்சுக்க மாட்டனா..?? எனக்கு எந்த ப்ராப்ளமும் இல்ல.. நீ நல்லா படிச்சு, உன் மனசுக்கு புடிச்ச மாதிரி ஒரு வேலைக்கு போகணும்.. சரியா..?? நீ தேவை இல்லாம மனசை போட்டு கொழப்பிக்காம.. நல்லா ப்ரிப்பேர் பண்ணு மீரா.. அதான் முக்கியம்.. புரியுதா..??” என்று உறுதியான குரலில் படபடவென சொன்ன அசோக், அப்புறம்

“நா..நாம.. நாம.. நாம வேணா..” என்று சற்றே இழுத்து, பிறகு சட்டென தாழ்வான குரலில்

“அ..அடிக்கடி இல்லன்னாலும்.. அப்பப்போவாவது மீட் பண்ணிக்கலாம்ல மீரா..?? ப்ளீஸ்..!!” என்று ஏக்கமாகவும், பரிதாபமாகவும் முடித்தான்.

அவனுடைய ஏக்கம் மீராவை ஏதோ செய்திருக்க வேண்டும். அசோக்கின் முகத்தையே கண்ணிமைக்காமல் ஒரு பார்வை பார்த்தாள். அந்தப் பார்வையில் இருந்தது.. கனிவா.. கருணையா.. காதலா.. கணிக்க முடியவில்லை அசோக்கால்..!!

“ம்ம்.. கண்டிப்பா மீட் பண்ணலாம்..!!”

புன்னகையுடன் சொன்ன மீரா, ஒரு நொடி கூட தாமதிக்கவில்லை. படிக்கட்டில் தடதடவென இறங்கியவள், பஸ் நிறுத்தம் நோக்கி விடுவிடுவென நடக்க ஆரம்பித்தாள். அவள் செல்வதையே அசோக் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அதன்பிறகு ஒரு மூன்று முறை மீரா அந்த மாதிரி காணாமல் போனாள். எல்லாம் ஒரு நாட்கள், இரண்டு நாட்கள்தான். ஒரு தடவை மட்டும் அசோக்கிற்கு கால் செய்து சொன்னாள். ‘இண்டர்வ்யூவாக இருக்கும்’ என்று இரண்டு தடவைகள் அசோக்கே அஸ்யூம் செய்து கொண்டான். அவள் இந்த மாதிரி திடீர் திடீரென காணாமல் போனதற்கெல்லாம் அசோக் அதிகமாக கவலைப்படவில்லை. வேறெதற்கு என்று கேட்கிறீர்களா..?? அவள் நடந்துகொள்கிற விதமும்.. அசோக்கை அவள் அணுகுகிற முறையுமே.. முற்றிலும் மாறிப்போயின.. அதை நினைத்துத்தான் அசோக் மிகவும் கவலையுற்றான்..!!

எந்த மாதிரியான மாற்றங்கள் என்று சொல்ல வேண்டுமானால்..