எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 8 50

“ஆமாம்..!!! ஸ்ட்ராங்கா..!!!!!”

அசோக் வெறுப்பாக சொன்னான். மீரா டெலிபோனை அணுகி ரிஷப்ஷனுக்கு கால் செய்தாள். இரண்டு டீ கொண்டு வருமாறு சொன்னாள். சாவி பார்த்து அறை எண் குறிப்பிட்டாள். பிறகு ரிசீவரை வைத்து விட்டு அசோக்கிடம் திரும்பினாள்.

“சொல்லிருக்கேன்.. அஞ்சு நிமிஷத்துல கொண்டு வருவாங்க..!!”

“சரி.. என் ட்ரஸ்லாம் இந்தப்பக்கம் தூக்கி போடு.. அந்தப் பையன் வந்துடப் போறான்..!!”

“எந்தப் பையன்..??”

“ரூம் சர்வீஸ் பையன்.. ஏற்கனவே அவனுக்கு ஒரு சந்தேகம்..!!”

“என்ன சந்தேகம்..??”

“நாம வேற எதுக்கோ ரூம் போட்டு தங்கிருக்கோமோனு..!!”

“ஓ..!! அவனுக்கு சந்தேகம் வர்ற மாதிரி நீ என்ன பண்ணின..??” மீரா கூலாக கேட்க, அசோக் நிஜமாகவே டென்ஷன் ஆகிப் போனான்.

“நான் என்ன பண்ணினேன்..?? எல்ல்ல்லாம் நீதான் பண்ணின..!! ச்சை.. என் ட்ரஸ் எடுத்து போடு..!! நான் வேற.. தமிழ் சினிமால ரேப் பண்ண தங்கச்சி கேரக்டர் மாதிரி உக்காந்திருக்கேன்.. இந்த நெலமைல என்னை பாத்தான்னா அவ்வளவுதான்.. கன்ஃபார்மே பண்ணிருவான்..!!”

“ஹாஹாஹாஹா..!!!”

மீராவால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. சேரில் காய்ந்த அசோக்கின் உடைகளை எடுத்து, அவனிடம் வீசினாள். மீரா எதுவும் தன் வெற்றுடலை பார்த்துவிடப் போகிறாளோ என்ற வெட்கத்துடன்.. பயந்து பயந்து.. மூடிய போர்வைக்குள்ளேயே ஆடை அணிந்து கொண்டான் அசோக்..!! அவனுடைய செய்கைகளை ஓரக்கண்ணால் பார்த்த மீரா.. தன் மனதுக்குள்ளேயே ரகசியமாக சிரித்துக் கொண்டாள்..!!

சிறிது நேரத்தில் அந்தப் பையன், ஒரு ப்ளாஸ்டிக் ப்ளேட்டில் இரண்டு டீ கப்புகளுடன் வந்தான். மீராவும் அசோக்கும் ஆளுக்கொரு கப் எடுத்துக் கொண்டார்கள். அவனுடைய முகத்தை ஏறிட கூட விருப்பம் இன்றி அசோக் வேறெங்கோ பார்வையை திருப்பிக் கொண்டான். மீராதான் ‘இவன்தான் அவனா..?’ என்பது போல அந்தப் பையனை ஏற இறங்க பார்த்தாள். இவள் பார்த்ததும் அந்தப் பையன் ஒரு நமுட்டு சிரிப்பை உதிர்த்தான். மீரா உடனே கடுப்பானாள்.

“ஏய்.. என்ன சிரிப்பு..??” என எரிச்சலாக கேட்டாள்.

“ஒ..ஒன்னுல்ல மேடம்..!!”

“என்ன ஒன்னுல்ல..?? இங்க பாரு.. நீ நெனைக்கிற மாதிரிலாம் எதுவும் இல்ல..!! அவன் கீழ படுத்துக்கிட்டான்.. நான் மேல..!! புரியுதா..??”

“ஹிஹி.. ஹிஹி.. ம்ம்.. புரியுது..!!”

அவன் அதற்கும் ஒரு இளிப்பை வெளிப்படுத்திவிட்டு வெளியேறினான். எதற்காக அவன் சிரிக்கிறான் என்று குழம்பிய மீரா, அவன் போகும் வரை அவனது முதுகையே எரிச்சலாக பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு அசோக்கிடம் திரும்பி,

“இந்தப் பையன் என்ன லூஸா..?? சும்மா சும்மா சிரிக்கிறான்..??” என்று கேட்டாள்.

அசோக் ஏற்கனவே தலையில் கைவைத்தவாறு நொந்து போய் அமர்ந்திருந்தான். இப்போது மீராவிடம் சலிப்பாக சொன்னான்.

“ம்ம்.. ஏன் சிரிக்க மாட்டான்..?? நான்தான் தத்தின்னா.. நீ என்னை விட பெரிய தத்தியா இருக்குற மீரா..!!”

“எ..என்ன சொல்ற..??”

“நான் என்னத்த சொல்றது..?? நீ அவன்கிட்ட என்ன சொன்னன்னு.. கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பாரு..!!”

அசோக் சொல்லிவிட்டு எழுந்து செல்ல, ‘அப்படி என்ன நான் தப்பா சொன்னேன்..?’ என்று, மீரா இப்போது தலையை சொறிய ஆரம்பித்தாள்.

வடபழனி பேருந்து நிலையத்தை ஒட்டி செல்கிற குமரன் காலனி மெயின் ரோட்டில்தான் இருக்கிறது அந்த அரசு பொது மருத்துவமனை. அசோக்கின் ஆபீஸில் இருந்து நடக்க ஆரம்பித்தால் பத்தே நிமிடங்களில் மருத்துவமனையை அடைந்துவிடலாம். கொத்து கொத்தாக மனித தலைகளுடன் மருத்துவமனையின் முன்புறம் எப்போதும் பிஸியாகவே இருக்கும். பக்கவாட்டில் செல்கிற அந்த அகலமான சிமெண்ட் சாலையிலேயே சென்றால்.. ஆள் நடமாட்டம் அதிகமற்ற.. அமைதியான சூழலுடன் கூடிய.. மருத்துவமனையின் மறுபுறத்தை காண நேரிடும்..!! அங்குதான் இருக்கிறது அரசுக்கு சொந்தமான அந்த பொது மையம்.. தற்கொலை தடுப்பு ஆலோசனை மையம்..!!

மன அழுத்தம்தான் தற்கொலைக்கு மிக முக்கிய காரணம்..!! எதிர்பாராத ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்படும்போது.. எந்த மனிதனுக்குமே அந்த மாதிரியான மன அழுத்தம் உருவாக வாய்ப்பு உள்ளது..!! அந்த அழுத்தத்தை அடக்கி ஆள முடியாதவர்கள்.. உடைந்து போய்.. உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள்..!! யாரும் பல நாட்களால யோசித்து முடிவெடுத்து.. பிறகு தற்கொலை செய்து கொள்வதில்லை..!! எதிர்பாராத ஒரு சூழ்நிலை.. எதிர்காலம் சூனியமாகிவிட்டது போன்றதொரு தோற்றம்.. அதை நினைத்து நினைத்து அதிகரிக்கிற மன அழுத்தம்.. கண நேர முடிவுடன் கயிறு தேட ஆரம்பித்து விடுகிறார்கள்..!!

மனிதர்களின் மன அழுத்தத்துக்கு மனோதத்துவ ஆலோசனை வழங்குவதுதான் அந்த மையத்தின் நோக்கம். தற்கொலை எண்ணம் தோன்றுபவர்களும், தற்கொலையில் இருந்து தப்பி பிழைத்தவர்களும் அங்கு கவுன்சிலிங் பெறுவர். வாழும் கலையை கற்றுக் கொடுக்க, வகுப்புகள் நடைபெறும். உடற்பயிற்சி, தியானம், யோகா போன்ற மனதை லேசாக்கும் பயிற்சிகளும் உண்டு. கிஷோரின் அக்கா பவானி.. ஒரு மனோதத்துவ நிபுணி..!! அவள்தான் மேலே குறிப்பிட்ட அந்த மையத்தின் தலைமை நிர்வாகி..!!

இப்போது.. தனது அலுவலகத்துக்கு தன்னை தேடி வந்திருக்கும் தம்பிக்கும்.. தம்பியின் நண்பன் அசோக்கிற்கும்.. தேநீர் அளித்து உபசரித்துக் கொண்டிருந்தாள்..!! மூவரும் அமைதியாக தேநீர் உறிஞ்சினர். சிறிது நேரம் அங்கு நிலவிய மவுனத்தை பவானிதான் முதலில் உடைத்தாள்.. அசோக்கை பார்த்து சற்றே கேலியான குரலில் கேட்டாள்..!!

3 Comments

  1. இந்த கதை ரொம்ப குழப்பமா இருக்கு !

  2. Mannichudnga ram story continue
    Panunga admin

  3. Mannichudnga ram story continue
    Panunga admin

Comments are closed.