எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 8 43

“ஹ்ம்ம்.. தொரையை இப்போலாம் பாக்கவே முடியிறது இல்ல.. வீட்டுப்பக்கம் வர்றதே இல்ல..??” பவானியின் கேள்விக்கு அசோக் பதில் சொல்வதற்கு முன்பே, கிஷோர் முந்திக்கொண்டு சொன்னான்.

“அவனுக்கு எங்கக்கா இப்போலாம் வீட்டுக்கு வர நேரம் இருக்கு..?? அதான்.. லவ் பண்ண ஆரம்பிச்சுட்டார்ல..?? அந்தப் பொண்ணோட ஊர் சுத்தவே நேரம் சரியா இருக்கு..!!”

“ஹ்ம்ம்.. பொண்ணு என்னடா பண்றா..??”

“இஞ்சினியரிங் முடிச்சுட்டு.. கம்ப்யூட்டர் கோர்ஸ் பண்ணிட்டு இருக்குறா..!!” இப்போது அசோக்கே பவானிக்கு பதில் சொன்னான்.

“ஓ.. கல்யாணம் எப்போ பண்ணிக்கிறதா ஐடியா..?? உனக்காக என் தம்பிய வேற வெயிட்டிங் லிஸ்ட்ல போட்டு விட்டுட்டிங்க..??”

“இப்போத்தான பழக ஆரம்பிச்சிருக்கோம்.. அதுக்குள்ள கல்யாணம்னா..?? இன்னும் அவ கேரக்டரையே நான் முழுசா புரிஞ்சு முடிக்கல.. அதுக்கே இன்னும் அஞ்சு வருஷம் ஆகும் போல இருக்கு..!!”

“அவ்வளவு காம்ப்ளிக்கேட்டட் கேரக்டரா அவ..??”

“நீங்க சைக்யாட்ரிஸ்ட்தான..??”

“ம்ம்..!!”

“கொஞ்ச நாள் அவகூட பழகி பாருங்க.. சைக்கோவா மாறிடுவிங்க..!!”

“ஹாஹா.. அப்படி என்ன பண்றா..??”

“என்னத்த சொல்றது.. எந்த நேரம் என்ன பண்ணுவான்னே ஒன்னும் புரியாது.. ஏன் இப்படிலாம் பண்றேன்னு கூட கேள்வி கேட்க முடியாது.. ஏதாவது கேட்டோம்னா பொசுக்குன்னு கோவம் வந்துடும்.. அப்புறம் ஒருபய பக்கத்துல நிக்க முடியாது.. அரை கிலோமீட்டருக்கு அந்தப்பக்கம்தான் நிக்கணும்..!!”

“ம்ம்.. கோவில்பட்டி பொண்ணுல.. அப்டித்தான் கோவமா இருப்பாங்க..!!” பவானி இயல்பாக சொல்ல, அசோக் புருவத்தை சுருக்கினான்.

“கோ..கோவில்பட்டியா..?? யாரு கோவில்பட்டி..??”

“உன் ஆளுதான்டா.. கோவில்பட்டிதான அவ சொந்த ஊரு..?? பேர் கூட ஏதோ வீரலட்சுமின்னு கிஷோரும் சாலமனும் அன்னைக்கு சொன்னாங்களே..??” என்ற பவானி தம்பியிடம் திரும்பி,

“என்னடா.. கரெக்ட்தான..??” என்றாள்.

கிஷோர் அல்ரெடி வேறெங்கோ பார்வையை திருப்பி இருந்தான். அசோக் இப்போது பக்கவாட்டில் திரும்பி நண்பனை முறைத்தான். ‘ஏண்டா.. என் கேர்ள் ஃப்ரண்டுக்கு நீங்க நிக் நேம் வச்சு வெளையாடுறீங்களா..?? கோவில்பட்டி வீரலட்சுமியா..?? அவ முன்னாடி ஸ்டெடியா நிக்க கூட உங்களுக்குலாம் துப்பு இல்ல.. அவளுக்கு பட்டப்பேர் வச்சு கேலி பண்றீங்களா..?? குடுக்குறண்டா.. அவகிட்ட உங்களை போட்டுக் குடுக்குறண்டா..!!’ என்று மனதுக்குள்ளேயே கருவிக் கொண்டான். அப்புறம் பவானியிடம் திரும்பி,

“இல்லக்கா.. அவ சொந்த ஊரு கோவில்பட்டிலாம் இல்ல.. காரைக்குடி..!! அவ பேரு மீரா..!!” என்றான்.

“ஹையோ.. அசோக்..!! உனக்கு எத்தனை தடவை சொல்றது.. இனிமே அக்கான்னு கூப்பிடாதன்னு..?? மொறையை மாத்தாதடா..!!” பவானி பேச்சை வேறுபக்கம் திருப்பும் விதமாக சொன்னாள். அசோக்கோ பட்டென டென்ஷனாகிப் போனான்.

“யாரு..?? நானா மொறையை மாத்தினேன்..?? உங்க தம்பி மாத்திட்டான்க்கா..!! எட்டு வருஷமா உங்களை அக்கான்னு கூப்பிட்டுட்டு இருக்கேன்.. இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் நீங்க எனக்கு அக்காதான்.. என்னை பொறுத்தவரை ஃப்ரண்டோட சிஸ்டர் எப்போவும் எனக்கு சிஸ்டர்தான்..!! சில கருகாலிப்பயலுகளுக்கு வேணா அதுலாம் ஒரு மேட்டரே இல்லாம இருக்கலாம்..!!” அசோக் அவ்வாறு சொன்னதும், கிஷோருக்கு சுருக்கென கோவம் வந்தது.

“ஹேய்.. யாருடா கருங்காலி..??” என்று அசோக்கிடம் சீறினான்.

“உன்னைத்தாண்டா சொல்றேன் வெண்ணை..!!” அசோக்கும் பதிலுக்கு சீறினான்.

“நான் என்னடா தப்பு பண்ணினேன்..?? எதுக்கெடுத்தாலும் என்னையே வந்து நொட்டை சொல்லிட்டு இருக்குற..?? ஏன்.. உன் தங்கச்சியை போய் இதெல்லாம் கேக்குறதுதான..?? சும்மா இருந்தவன் மனசுல ஆசையை வளர்த்து.. கெடுத்து குட்டிச்சுவர் ஆக்குனது உன் தங்கச்சிதான்.. ஞாபகம் வச்சுக்கோ..!!”

3 Comments

  1. இந்த கதை ரொம்ப குழப்பமா இருக்கு !

  2. Mannichudnga ram story continue
    Panunga admin

  3. Mannichudnga ram story continue
    Panunga admin

Comments are closed.