எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 8 44

“ஹ்ஹ.. இந்தக்கதையலாம் வேற யார்ட்டயாவது போய் சொல்லு..!! நீ எந்த மாதிரிலாம் ஐஸ் வச்சு.. என் தங்கச்சி மனசுல ஆசையை கிண்டி விட்டன்னு எனக்கு நல்லா தெரியுன்டா..!! ஃப்ராடுப்பயலே..!!”

“யாரு.. நானா ஃப்ராடு..?? என்னை சொல்றியே.. உன் ஆளு எழுதுன மொக்கை கவிதைக்கு அர்த்தம் கூட தெரியாம.. ஆஹா ஓஹோன்னு அவளை பாராட்டுனியே.. அதை என்ன சொல்றது.. நான் ஃப்ராடுன்னா.. நீ 420-டா ..!!”

“அப்போ நீ மொள்ளமாறி..!!”

“நீ முடிச்சவிக்கி..!!”

“அடச்சை.. நிறுத்துங்கடா.!!” பவானி அந்த மாதிரி பொறுமையற்று கத்தியதும்தான், அசோக்கும் கிஷோரும் அமைதியானார்கள்.

“ஏண்டா.. கவர்மண்ட் ஒரு பெரிய பொறுப்பை என்னை நம்பி ஒப்படைச்சிருக்கு.. நான் அதை உங்களை நம்பி ஒப்படைச்சிருக்கேன்.. நீங்க என்னடான்னா சின்னப்புள்ள மாதிரி சண்டை போட்டு இருக்கீங்க..??”

“…………….” கிஷோரும் அசோக்கும் வாயை மூடிக்கொண்டு உர்ரென்று அமர்ந்திருந்தனர்.

“நான் சொல்றதை கொஞ்சம் கவனமா கேளுங்க.. ‘Suicide Prevention Awareness’ பத்தி நீங்க எடுக்கப் போற இந்த டாகுமன்ட்ரிய.. இந்தியால இருக்குற எல்லா லாங்குவேஜ்லயும் டப் பண்ணப் போறாங்க..”

“ம்ம்.. தெரியும் தெரியும்.. ‘ஒரிஸா மாநிலத்தை சேர்ந்த இவர் கூறுகிறார்..’ அப்டின்னு சரோஜ் நாராயணஸ்வாமி சொல்வாங்களே.. அந்த மாதிரிதான..??” அசோக் மெல்லிய குரலில் கேலியாக சொல்ல, பவானி அவனை முறைத்தாள்.

“என்ன.. கிண்டலா இருக்கா..?? இந்தியால இருக்குற மூலை முடுக்குலாம் உங்க டாகுமன்ட்ரி ஓடப் போகுது.. டிவின்னா என்னன்னே தெரியாத பழங்குடி கிராமத்துல கூட ப்ரொஜக்டர் வச்சு ஓட்டப் போறாங்க.. எவ்வளவு பெரிய விஷயம் இது.. எவ்வளவு பெரிய ஆப்பர்ச்சூனிட்டி உங்களுக்கு..?? நீங்க என்னடான்னா கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம..??”

“இங்க பாருங்க பவானிக்கா.. மத்த விஷயத்துல நாங்க எப்படியோ.. ஆனா வேலை விஷயத்துல கரெக்டா இருப்போம்.. அதுலாம் நீங்க வொர்ரி பண்ணிக்க வேணாம்..!!” அசோக் அந்த மாதிரி சமாளிப்பாக சொன்னதும், பவானி இப்போது சற்றே சாந்தமானாள்.

“சரி.. வேலையை எப்போ ஆரம்பிக்கிறீங்க..??”

“இன்னைக்கே..!!”

“எப்போ முடியும்..??”

“இன்னும் பத்து நாள்ல..!!”

“ஏண்டா.. பத்து நிமிஷம் ஓடுற டாகுமன்ட்ரிக்கு.. பத்து நாள் டைம் வேணுமா உனக்கு..??”

“ரெண்டு மணி நேரம் ஓடுற படத்தை.. ரெண்டரை வருஷமா எடுக்குறது இல்லையா.. அந்த மாதிரிதான் இதும்..!! பர்பஃக்ஷன் ரொம்ப முக்கியம்க்கா..!!”

“ஹ்ம்ம்.. சரி.. டாகுமன்ட்ரி எந்த மாதிரி ஷூட் பண்ணப் போறேன்னு.. ஏதும் ஐடியா வச்சிருக்கியா..??” பவானிக்கு அசோக் பதில் சொல்வதற்குள், கிஷோர் இடையில் புகுந்து சொன்னான்.

“ம்க்கும்.. இவன்கிட்டயா ஐடியா கேக்குற..?? ‘ஓப்பன் பண்ணதுமே.. தவுசண்ட் ஃபீட் ஹைட்ல இருந்து ஒருத்தர்.. அப்படியே தலைகுப்புற விழுந்து தற்கொலை பண்ணிக்கிறதை.. டாப் ஆங்கிள்ள காட்டுறோம்.. அப்புறம் அந்த ஆள் தலை ரெண்டா பொளந்து.. செவப்பு கலர்ல ப்ளட் குபுகுபுன்னு வர்றதை க்ளோசப்ல போய் காட்டுறோம்..’னு சொல்வான் பாரு..!!” கிஷோரின் கிண்டல் அசோக்கிற்கு எரிச்சலை கிளப்பி விட்டது.

“ஏய்.. அடங்குடா..!! எங்க க்ரியேட்டிவா இருக்கனும்.. எங்க இன்ஃபர்மேடிவா இருக்கனும்னு.. எங்களுக்கு தெரியும்..!! இமேஜின் பண்ணினதை இன்ரஸ்டிங்கா சொல்லவும் தெரியும்.. நாட்டுல உள்ள பிரச்சனையை நச்சுன்னு அப்பட்டமா காட்டவும் தெரியும்..!!”

“ஹஹ.. கிழிச்ச..!!”

“நீ மூடு..!!” மறுபடியும் அவர்களுக்குள் வாய்ச்சண்டை மூள, பவானி எரிச்சலுற்றாள்.

“ஐயயே.. ஒரு நிமிஷம் கூட கேப் விடாம சண்டை போடுறீங்க.. எப்படிடா எட்டு வருஷம் ஃப்ரண்டா இருக்கீங்க..??”

“ஹ்ஹ.. நீங்க வேணா பாப்புலர் சைக்யாட்ரிஸ்டா இருக்கலாம் பவானிக்கா.. ஆனா பசங்க சைக்காலஜிலாம் உங்களுக்கு புரியாது.. விட்டுடுங்க.. இது வேற உலகம்..!!”

“ஹ்ம்ம்.. எப்படியோ போங்க.. நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க.. டாகுமன்ட்ரி பத்தி என்ன ப்ளான் வச்சிருக்கீங்க..??”

“நான்தான் ஃபோன்லயே சொன்னேன்லக்கா.. இங்க கவுன்சிலிங் வர்றவங்க கூட நான் பேசணும்.. அப்படி பேசினா எனக்கு கொஞ்சம் ஐடியா கெடைக்கும்.. அதுக்கு மொதல்ல அரேஞ்ச் பண்ணுங்க..!!”

“ம்ம்.. ஓகே..!!”

சொன்ன பவானி டெலிபோன் எடுத்து எண்களை அழுத்தினாள். ‘ஹலோ மும்தாஜ்..’ என்றாள். ‘சொன்னேன்ல.. அவங்க வந்திருக்காங்க..’ என்றாள். இரண்டு மூன்று ‘ஓகே’களை உதிர்த்தாள். ‘அதனால பரவால..’ என்றாள் இடையில் ஒருமுறை. இறுதியாக ‘சரி.. அப்போ கெளம்பி வர்றோம் மும்தாஜ்.. என்ன விஷயம்னு நீங்க எல்லார்ட்டயும் கொஞ்சம் எக்ஸ்ப்ளைன் பண்ணி வச்சிருங்க.. தேங்க்ஸ் மும்தாஜ்..’ என்றுவிட்டு ரிஸீவரை அதனிடத்தில் வைத்தாள்.

“யாருக்கா அது.. மும்தாஜ்..??” அசோக்கின் குரலில் ஒருவித எள்ளல் தொனித்தது.

“இங்க கவுன்சிலிங் வர்றவங்களுக்கு.. ஆர்ட் ஆஃப் லிவிங் க்ளாஸ் எடுக்குற ட்யூட்டர்..!!”

“ஓ..!! இந்த.. ‘வாழ்க்கை ரொம்ப அற்புதமான விஷயம்.. தற்கொலை பண்ணிக்கிறது பாவம்..’ அப்டின்னு அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்றவங்களா..?? நான் கூட ‘மல மல மருதமல’ன்னு டவல் வச்சுட்டு டான்ஸ் ஆடுவாங்களே.. அவங்களோன்னு நெனச்சுட்டேன்.. ஹிஹி..!!”

கிஷோரின் கிண்டலை பவானி ரசிக்கவில்லை. கண்களை இடுக்கி கடுமையாக அவனை முறைத்தாள். பிறகு இறுக்கமான குரலில் சொன்னாள்.

“மும்தாஜ் ஒரு காலத்துல என்னோட பேஷன்ட்.. மும்பை கலவரத்துல பாதிக்கப்பட்ட பொண்ணு.. அவ குடும்பத்துல எல்லார் கண் முன்னாடியும் கேங் ரேப் பண்ணப்பட்டவ.. அப்புறம் இவ கண் முன்னாடியே குடும்பத்துல இருக்குற எல்லார் கழுத்தையும் கத்தியால அறுத்து போட்டாங்க.. இவ கழுத்தையும்தான்..!! இவ மட்டும் பொழைச்சுக்கிட்டா.. அதுக்கப்புறம் அஞ்சு தடவை சூசயிட் பண்ணிக்க ட்ரை பண்ணிருக்கா.. ஆயுசு கெட்டி.. எல்லா தடவையும் யாரோ காப்பாத்திட்டாங்க..!! அங்க இங்க சுத்தி.. கடைசியா ட்ரீட்மன்ட்டுக்கு இங்க வந்து சேர்ந்தா.. நான்தான் அவளுக்கு ட்ரீட்மன்ட் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமா மாத்தினேன்.. இங்க ட்யூட்டரா வேலையும் வாங்கி குடுத்தேன்..!! இப்போ.. தன்னம்பிக்கையோட ஒரு வாழ்க்கை வாழறா.. ‘தற்கொலை பண்ணிக்கிறது தப்பு..’ன்னு, இங்க வர்றவங்களுக்கு புரிய வைக்கிற புனிதமான காரியத்தை செஞ்சுட்டு இருக்கா..!! உங்களுக்கு கிண்டலா இருக்குல..??”

3 Comments

  1. இந்த கதை ரொம்ப குழப்பமா இருக்கு !

  2. Mannichudnga ram story continue
    Panunga admin

  3. Mannichudnga ram story continue
    Panunga admin

Comments are closed.