எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 8 43

“ஹலோ..” – இது மீரா

“ஹேய் மீரா.. நான் இங்க கொஞ்சம் வேலையா..”

“ப்ச்.. வான்னு சொல்றேன்ல.. வா..!!”

அவ்வளவுதான்..!! மீண்டும் கால் கட்..!! அசோக் திரும்ப அவள் எண்ணுக்கு தொடர்பு கொள்ள, செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப் பட்டிருந்தது..!! ‘ஷப்பாஆஆ.. முடியல..’ என்று தலையை சொறிந்து கொண்டான். பிறகு கிஷோரை திரும்பி பரிதாபமாக பார்த்தான். அவனுடைய நிலைமையை உடனடியாய் புரிந்துகொண்ட கிஷோர்,

“சரி கெளம்பு.. நான் பாத்துக்குறேன்..!!” என்றான்.

அதன்பிறகு ஒரு அரை மணி நேரம் கழித்து..

பூந்தமல்லி ஹைரோடில் போரூரை தாண்டியதும்.. வலதுபுறம் திரும்பினால் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் வந்து சேரும் அந்த ஏரி..!! ஏரியின் ஒருபக்கம் சாலை.. அடுத்த பக்கம் எங்கிலும் அடர்த்தியாய் பச்சை பசேலென்ற மரங்கள்..!! குளுமையாக.. பசுமையாக.. அமைதியாக இருந்தது அந்த பகுதி..!! ஏரியின் இந்தப்புறம் இருந்து அந்தப்புறம் செல்வதற்காக.. மரப்பலகைகளால் ஆன பாலம் அமைக்கப்பட்டிருந்தது..!! இருபுறமும் மூன்றடி உயரத்திற்கான கைப்பிடி தடுப்புகளுடன்.. இக்கரையில் இருந்து அக்கரை வரை நீண்டிருந்தது.. அந்த மரப்பாலம்..!! ஏரியில் நீர் நிறைந்து போயிருக்க.. இப்போது நீரின் மேற்பரப்புக்கும், பாலத்தின் அடிப்பரப்புக்கும்.. ஐந்து அடிகளே இடைவெளி..!!

அசோக் பைக்கை நிறுத்தியதும், மீரா கீழே இறங்கிக் கொண்டாள். அவனை எதிர்பார்க்காமல் பாலத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். பைக்குக்கு ஸ்டாண்ட் இட்டு நிறுத்திய அசோக், மெல்ல அவளை பின்தொடர்ந்தான். பாலத்தில் ஏறுவதற்கு முன்பாக, கீழே கிடந்த சில கற்களை மீரா கைகளில் பொறுக்கிக் கொண்டாள். பாலத்தில் ஏறியதும், அந்தக் கற்களை ஒவ்வொன்றாக, நீருக்குள் தூரமாய் வீசி எறிந்தாள். ‘பொலக்.. பொலக்..’ என்ற சப்தத்துடன் கற்கள் நீருக்குள் மூழ்கிப் போவதை, இங்கிருந்தே ரசித்தாள். குழந்தைத்தனமான அவளுடைய செய்கையை, ஒரு புன்னகையுடன் பார்த்தவாறே அசோக் அவளுக்கு பின்னால் நடந்து கொண்டிருந்தான். கற்கள் தீர்ந்து போனதும். மீரா திடீரென திரும்பி அசோக்கிடம் சொன்னாள்.

“அந்த கவாஸாகி ஆட் நேத்து டிவில பார்த்தேன்டா.. செமையா இருந்தது..!! நீதான் அந்த ஆட் ஷூட் பண்ணினதுன்னு.. சத்தியமா என்னால நம்பவே முடியல..!! கிரேட் வொர்க் மேன்..!!”

“தேங்க்ஸ்..!!” அசோக் மெலிதாக புன்னகைத்தான்.

“ஹ்ம்ம்.. தென்..?? வாட் எபவுட் த நெக்ஸ்ட் ப்ராஜக்ட்..??”

“சூசயிட்..!!”

3 Comments

  1. இந்த கதை ரொம்ப குழப்பமா இருக்கு !

  2. Mannichudnga ram story continue
    Panunga admin

  3. Mannichudnga ram story continue
    Panunga admin

Comments are closed.