எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 8 44

“……………” ஸ்தம்பித்துப் போன நிலையில் இருந்த அசோக்குக்கும், கிஷோருக்கும் பேச வார்த்தையில்லை.

“இந்த மாதிரி இங்க இன்னும் நெறைய பேர் இருக்காங்க.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கதை.. உங்களுக்கு இதுலாம் புரியாதுடா.. இது வேற உலகம்.. இந்த உலகத்துல இருக்குற வலியும், வேதனையும் ஒரு பர்சன்டேஜ் கூட உங்களுக்கு புரியாது..!! உங்களை நம்பி இந்த டாகுமன்ட்ரி வேலையை குடுத்திருக்கேன்.. என்ன லட்சணத்துல எடுத்து வைக்கப் போறீங்களோ தெரியல.. எந்திரிச்சு வாங்க..!!”

படபடவென பொரிந்து தள்ளிய பவானி, படக்கென சேரை விட்டு எழுந்தாள்.. அசோக்கும் கிஷோரும் உர்ரென்ற முகத்துடனே உடன் எழுந்தார்கள்..!! அந்த நீளமான காரிடாரில்.. பவானி விடுவிடுவென கம்பீரமாக நடந்து செல்ல.. அவளுக்கு இரண்டடி இடைவெளிவிட்டு.. அசோக்கும் கிஷோரும் ஆளுக்கொரு புறமாய்.. அவளை பின் தொடர்ந்தனர்..!! பவானி ஆதங்கத்துடன் பேசிக்கொண்டே முன்னால் நடக்க.. இவர்கள் அமைதியாக ‘உம்’ கொட்டியவாறே உடன் நடந்தனர்..!!

“சூசயிட்ன்றது.. டெம்போரரி ப்ராப்ளத்துக்கான பெர்மனன்ட் சொல்யூஷன்தான்..!! பட்.. டெம்போரரியா இருந்தாலும், அந்த ப்ராப்ளத்தை நாம அசால்ட்டா நெனைக்க கூடாது..!!”

“……….”

“தற்கொலை பண்ணிக்கிறவங்கலாம் முட்டாளுங்க.. கோழைங்க.. லைஃபோட மீனிங் தெரியாதவங்கன்னு.. ஈஸியா சொல்லிட்டு நாம க்ராஸ் பண்ணி போயிட முடியாது..!! வேர்ல்ட் வைடா.. வருஷத்துக்கு பத்து லட்சம் பேர் சூசயிட் பண்ணிக்கிறாங்க.. ஃபார்ட்டி செகண்டுக்கு ஒரு உயிரை சூசயிடால இழந்துட்டு இருக்கோம்.. அட்டம்ப்ட் பண்ணினவங்க எண்ணிக்கை, செத்துப் போனவங்களோட எண்ணிக்கையை விட பத்து மடங்காவது இருக்கும்..!! அவ்வளவு பேரும் முட்டாளா.. அவ்வளவு பேரும் கோழைங்களா..?? I Don’t Buy That..!!”

“……….”

“சின்ன சின்ன விஷயங்களுக்காக தற்கொலை பண்ணிக்கிறவங்க இருக்கத்தான் செய்றாங்க.. ஆனா நெறைய தற்கொலைகளுக்கு பின்னாடி.. ஸ்ட்ராங்கான காரணம் இருக்கு.. இந்த சமுதாயத்தோட பங்கு இருக்கு..!! சமுதாயத்தை எங்களால மாத்தமுடியாது.. ஆனா.. சாக நெனைக்கிற அந்த பாவப்பட்ட மனுஷங்க மனசை மாத்த முடியும்.. தன்னம்பிக்கையை கொடுக்க முடியும்.. அதைத்தான் இங்க பண்ணிட்டு இருக்குறோம்..!!”

“……….”

காரிடாரின் வலதுபுறம் திரும்பியதுமே, முதலில் இருந்த அந்த அறைக்குள் பவானி நுழைந்தாள். அசோக்கும் கிஷோரும் அவளை பின் தொடர்ந்தனர்.

“இவங்கதான் மும்தாஜ்..!!”

என்று பவானி அந்த நடுத்தர வயது பெண்ணை அறிமுகப் படுத்தி வைக்க, அசோக்கும் கிஷோரும் அவர்களையும் அறியாமல் அந்த மும்தாஜிற்கு கைகூப்பி வணக்கம் வைத்தனர்.

அப்புறம் கொஞ்ச நேரம் அந்த மும்தாஜுடன் பேச்சு. பிறகு அவளுடைய உதவியுடன், அன்று கவுன்சிலிங் வந்திருந்தவர்களுடன், தனித்தனியாக தனியறையில் மீட்டிங். ‘எந்த மாதிரியான சூழ்நிலையால் தற்கொலைக்கு தள்ளப்பட்டார்கள்..? எந்த மாதிரியான முயற்சியை மேற்கொண்டார்கள்..? அவர்களுக்கு பிடித்தமான உலகம் எப்படி இருக்க வேண்டும்..?’ என்பது மாதிரியான கேள்விகளை அசோக் கேட்க, அவர்கள் பதில் சொன்னார்கள். அவர்களுடைய அனுமதியுடன் கிஷோர் அதை படம் பிடித்துக் கொண்டான்.

“எனக்கு படிப்பு வரலண்ணா.. அதுக்கு நான் என்ன பண்ணுவேன்..?? எல்லாரும் எவ்வளவு கேவலமா பேசுவாங்க தெரியுமா..?? எதுக்கெடுத்தாலும் அதையே சொல்லி சொல்லி, குத்தி காட்டிட்டு இருப்பாங்க.. ‘எருமை மாடு மேய்க்கத்தான் இவன் லாயக்கு.. எப்படித்தான் திங்கிற சோறு உனக்கு செரிக்குதோ..’ அப்டி இப்டின்னு..!! ‘இவன் படிக்காத பையன் இவன்கூட சேர்ந்தா நீ கெட்டு போயிடுவ’ன்னு சொல்லி.. என் ஃப்ரண்ட்சை கூட எங்கிட்ட இருந்து பிரிச்சுட்டாங்கண்ணா.. எனக்குன்னு யாருமே இல்லாம, நான் என்னண்ணா பண்ணுவேன்..?? சத்தியமா சொல்றேண்ணா.. ‘இந்தத்தடவை எப்படியாவது பாஸ் ஆயிடனும்’னு.. நைட்லாம் கண்ணுமுழிச்சு ரொம்ப கஷ்டப்பட்டு படிச்சேன்.. அப்படியும் ஃபெயில் ஆயிட்டேன்.. அதுக்கு நான் என்னண்ணா பண்ணுவேன்..?? படிப்பு வராதது பாவமா..?? உலகத்துல வாழ்றதுக்கு எனக்கு அருகதை இல்லையா..??”

எஸ்.எஸ்.எல்.ஸி எக்ஸாமிலும் அதைத்தொடர்ந்து தற்கொலை முயற்சியிலும் தோல்வியடைந்த, அந்த அரும்பு மீசை மாணவன் கேட்ட கேள்விகளுக்கு, அசோக்கிடம் சரியான பதில் இல்லை. திகைப்பாக அவனையே பார்த்துக் கொண்டிருந்த போதுதான், அசோக்கின் செல்போன் கிணுகிணுத்தது. எடுத்து பார்த்தான். மீரா அழைத்திருந்தாள். கால் பிக்கப் செய்தான். இவன்

“ஹலோ” என்றதுமே,

“ஆவிச்சி ஸ்கூல்.. அஞ்சு நிமிஷம் டைம்.. கெளம்பி வா..!!”

என்று அவசரமாய் சொன்ன மீரா, உடனே காலை கட் செய்தாள். அசோக் ‘ப்ச்..’ என்று எரிச்சலானான். மீண்டும் அவளுக்கு கால் செய்தான்.

3 Comments

  1. இந்த கதை ரொம்ப குழப்பமா இருக்கு !

  2. Mannichudnga ram story continue
    Panunga admin

  3. Mannichudnga ram story continue
    Panunga admin

Comments are closed.