எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 8 44

என்ன செய்வது என்ற குழப்பத்துடன், அசோக் சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தான்.

“இங்கயே ரூம் எடுத்துக்கங்க ஸார்.. எந்த ப்ராப்ளமும் வராது..!!”

“நீ..நீங்க.. எங்களை தப்பா புரிஞ்சுக்கலைல..??”

“சேச்சே.. எனக்கு உங்க சிச்சுவேஷன் நல்லா புரியுது ஸார்.. அதான் சொல்றேன்.. இந்த நெலமைல இவங்களை வெளில கூட்டிட்டு போறது நல்லது இல்ல.. நைட் இங்கயே ஸ்டே பண்ணிட்டு காலைல கெளம்புங்க..!! இது டீசண்டான ஹோட்டல்.. நீங்க எதும் பயப்பட தேவை இல்லன்னு சொன்னேன்..!!”

பேரர் தந்த நம்பிக்கையில், அன்று இரவு அங்கேயே தங்கிக் கொள்வது என்று அசோக் முடிவு செய்தான். வீட்டுக்கு ஃபோன் செய்து, ‘கொஞ்சம் வேலை இருக்கு மம்மி.. நைட் ஆபீஸ்லயே தங்கிக்கிறேன்..’ என்றான். மீராவுடைய பேகை தோளில் மாட்டிக் கொண்டான். அவளை பூப்போல அள்ளி, கைகளில் ஏந்திக் கொண்டான். ரூம் சர்வீஸ் பையன் வழி நடத்த, மீராவை தூக்கிக் கொண்டே மாடிப்படிகள் ஏறினான்.

“ஏ..ஏன்.. படிக்கட்டுல.. பைக் ஓட்டுற..??”

மீரா உளறிக்கொண்டே வந்தாள். அறைக்குள் நுழைந்ததும் அசோக் அவளை மென்மையாக மெத்தையில் கிடத்தினான். பருவச்செழிப்புடன் படுக்கையில் மல்லாந்திருந்த மீராவிடமிருந்து.. பார்வையை அகற்ற முடியாமல்.. ஏக்கமாய் பார்த்த ரூம் சர்வீஸ் பையனை.. ‘ஏய்..’ என்று அதட்டினான்..!!

“வே..வேற.. வேற எதும் வேணுமா ஸார்..??” அவன் சமாளித்துக் கொண்டு கேட்டான்.

“கொஞ்சம் தண்ணி மட்டும் குடு..!!”

“ஓகே ஸார்..!!”

அந்தப்பையன் கதவு திறந்து வெளியேறும் வரை, அசோக் அவனையே முறைத்துக் கொண்டிருந்தான். அப்புறம் கதவை லாக் செய்யலாம் என்று வாசல் நோக்கி நடந்தான். திடீரென அவனுடைய முதுகுப்புறம் இருந்து..

“அ..அசோக்..!!”

என்று சத்தம் கேட்டதும், அப்படியே நின்றான். திரும்பி பார்த்தான். மீரா இப்போது படுக்கையில் எழுந்து அமர்ந்திருந்தாள். இமைகளை பிரிக்க முடியாமல் பிரித்து, அந்த அறையை சுற்றும் முற்றும் பார்த்தாள். பிறகு தலையை பரபரவென சொறிந்து கொண்டே..

“எ..எங்க இருக்கோம்..??” என்றாள்.

“ஹோட்டல் ரூம்..!!”

“அப்போ.. வீடு..??”

“அதான் உன் வீட்டுல யாரும் இல்லன்னு சொன்னேல.. நைட்டு இங்க தங்கிட்டு காலைல போலாம்..!!”

அசோக் அவ்வாறு சொன்னதுமே மீராவின் முகம் பட்டென மாறியது. ஒருமாதிரி பரிதாபமாக முகத்தை மாற்றிக் கொண்டாள். அவளுடைய மூக்கு திடீரென விசும்பியது. கண்கள் பட்டென கலங்கிப்போக, அழ ஆரம்பித்தாள்.

“ம்ஹ்ம்.. ம்ஹ்ம்.. ம்ஹ்ம்.. ம்ஹ்ம்..”

“ஹேய்.. மீரா.. எ..என்னாச்சு.. ஏன் அழற..??” அசோக் சற்றே பதறிப்போய் அவளிடம் ஓடினான்.

“அழனும் போல இருக்கு..!!”

“ஏன்..??” இரு கைகளாலும் அவளுடைய முகத்தை மென்மையாக தாங்கி பிடித்தவாறு அசோக் கேட்க,

“எ..எனக்கு.. எனக்கு யாரும் இல்ல அசோக்..!!” மீரா கேவலுடன் பரிதாபமாக சொன்னாள்.

“ஹையோ.. என்ன பேசுற நீ..?? அதான்.. உனக்கு..”

“எ..எனக்கு அழுகை அழுகையா வருது.. போ..!!”

“ப்ச்.. என்னமா நீ.. அழாத ப்ளீஸ்.. கண்ணை தொடைச்சுக்கோ..!! எ..என்ன பிரச்னை இப்போ..??”

3 Comments

  1. இந்த கதை ரொம்ப குழப்பமா இருக்கு !

  2. Mannichudnga ram story continue
    Panunga admin

  3. Mannichudnga ram story continue
    Panunga admin

Comments are closed.