எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 8 43

“என்னை பத்தி கவலைப்பட யாரும் இல்ல.. என் மேல அன்பு காட்டுறதுக்கும் யாரும் இல்ல.. எனக்குன்னு யாருமே இல்லடா..!!”

“ச்சே.. என்ன பேச்சு இது..?? வீ..வீட்ல எதாவது பிரச்னையா..??”

“ம்ம்..!!”

“அதுக்காக இப்படிலாம் பேசுறதா..?? நா..நான்.. நான் ஒருத்தன் இருக்குறப்போ.. இப்படிலாம் பேசாத மீரா..!! உன் மேல நான் எவ்வளவு ப்ரியம் வச்சிருக்கேன்னு உனக்கு புரியலையா..?? நான் இருக்கேன்டா.. நான் இருக்கேன் உனக்கு..!!” அசோக் சொல்ல, மீரா இப்போது அவனை சற்று வித்தியாசமாக பார்த்தாள்.

“நெஜமா..??”

“ம்ம்..!!”

“என் மேல ப்ரியமா இருப்பியா..??”

“இருப்பேன்..!!”

“எப்போவும் என் கூடவே இருப்பியா..??”

“இருப்பேன்டா..!!”

அசோக் உறுதியாக சொல்ல, முகத்தில் ஒரு நம்பிக்கை ஒளியுடன் மீரா அவனையே பார்த்தாள். ஒரு சில வினாடிகள்..!! பிறகு மீண்டும் அவளுடைய முகம் பட்டென இருண்டது. கண்களில் முணுக்கென்று நீர் துளிர்க்க..

“இ..இல்ல.. நீ இருக்க மாட்ட.. போயிடுவ..!!” என்று விசும்பலாக சொன்னாள்.

“ஹையோ.. நான்தான் சொல்றேன்ல..?? சாகுற வரை உன்கூடவேதான் இருப்பேன்.. சத்தியம்..!! போதுமா..??”

அசோக் தன் தலைமீது கைவைத்து சத்தியம் செய்தான். மீரா இப்போது அழுகையை நிறுத்தினாள். மூக்கு மட்டும் விசும்ப, அசோக்கின் முகத்தையே அமைதியாக பார்த்தாள். பிறகு என்ன நினைத்தாளோ.. உதடுகள் பிரித்து.. மெல்ல..

“அசோக்..!!” என்றாள் ஏக்கமாக.

“ம்ம்..”

“என்னை கட்டிப் புடிச்சுக்கோ..!!”

கைகள் ரெண்டையும் அசோக்கை நோக்கி நீட்டி.. ‘என்னை தூக்கிக்கோ மம்மி..’ என்று சிறுகுழந்தை ஒன்று தாயிடம் கெஞ்சுவது போல.. ஏக்கமாக சொன்னாள் மீரா..!! அசோக்கின் மனதுக்குள் இப்போது காதல் வெள்ளம் கரை புரண்டு ஓட.. கனிவாக அவளை ஒரு பார்வை பார்த்தான்..!! இதுவரை மீராவை அவன் கட்டியணைத்ததே இல்லை. அவன் மனதுக்குள் ஆசையிருந்தும், மீராவின் குணமறிந்து அந்த ஆசையை அவன் வெளிப்படுத்தியதே இல்லை. வீதியில் நடந்து செல்கையில் விரல்களை கோர்த்துக் கொள்ள கூட, அவளும் அனுமதித்தே இல்லை. இப்போது அவளே தன்னை அணைத்துக்கொள் என்று அழைப்பு விடுக்க, ஆரம்பத்தில் சிறிது தயங்கிய அசோக், பிறகு அவளை ஆரத் தழுவிக் கொண்டான். அவளும் அதற்காகத்தான் காத்திருந்தது மாதிரி அவனை அப்படியே இறுக்கிக் கொண்டாள். தனது மூக்கினை அவனுடைய மார்பில் வைத்து சரக் சரக்கென தேய்த்தவள், பிறகு அந்த மார்பிலேயே முகம் சாய்த்து படுத்துக் கொண்டாள்.

“என் மேல உனக்கு கோவம் இல்லைல..??”

“ம்ஹூம்..!!”

“என்னை விட்டு போயிட மாட்டேல..??”

“ம்ஹூம்..!!”

“நான் என்ன பண்ணாலும்..??”

“ஹஹ.. நீ என்ன பண்ணாலும் உன்னை விட்டு போக மாட்டேன்.. போதுமா..??”

“ம்ம்ம்ம்..!!”

மீரா இப்போது இன்னும் இறுக்கமாக அசோக்கை அணைத்துக் கொண்டாள். மழையில் நனைந்திட்ட ஆட்டுக்குட்டியென, அவள் தன் மார்போடு அண்டியிருப்பது, அசோக்கிற்கு ஆனந்தமாகவே இருந்தது. அவளுடைய கூந்தலை மென்மையாக வருடி கொடுத்தான். அவனுடைய மனதில் ஒருவித ஆச்சரியம்..!! எந்த நேரமும் முகத்தில் முறைப்பும், பேச்சில் திமிருமாக தெரிகிற மீராவுக்குள்.. இப்படி அன்புக்கு ஏங்குகிற ஒரு குழந்தை இருக்கிறாள் என்பது.. முதன் முறையாக அவனுக்கு தெரிய வந்ததுதான் அந்த ஆச்சரியத்துக்கு காரணம்..!!

‘பாவம்.. இவளுடைய குடும்பத்தினர் இவளை புரிந்து கொள்ள தவறிவிட்டனர் போலும்.. அன்பை வெளிக்காட்டுகிற கலையை அவர்கள் அறியவில்லை போலும்.. எப்படி ஏங்கிப்போய் கிடக்கிறாள்..?? இவளுடைய முரட்டுத் தனத்துக்கெல்லாம் அதுதான் காரணமா..?? அன்பு கிடைக்காத ஏக்கம் எல்லாம் ஆத்திரமாய் வெளிப்படுகிறதோ..?? கலங்காதே கண்மணியே.. நானிருக்கிறேன் உனக்காக.. உன்னை நேசிக்க.. உன் குணங்களை பூஜிக்க..!! எனக்கென உன் சுயத்தை நீ இழக்க வேண்டாம்.. திட்டுவாய்.. வாங்கிக் கொள்கிறேன்.. அடிப்பாய்.. தாங்கிக் கொள்கிறேன்..!! உன் கோபம் பொறுக்கிறேன்.. உன் ஆத்திரத்தை அலட்சியம் செய்கிறேன்.. எனது அன்பை உனக்கு உணர்த்துகிறேன்.. என் அம்மா சொன்னது போல..!!’

“ஸார்.. தண்ணி..!!”

இயல்பாக சொல்லிக்கொண்டே அறைக்குள் நுழைந்த ரூம் சர்வீஸ் பையன், அசோக்கும் மீராவும் இருந்த கோலத்தை கண்டு, அப்படியே மிரண்டு போனான். அவனையும் அறியாமல் அவனுடைய வாய் ‘ஓ’வென பிளந்து கொண்டது. அசோக்கிடமும் உடனடியாய் ஒரு பதற்றம். எந்தக் கவலையும் இல்லாமல் அவனை இறுக்கிக் கொண்டு கிடந்த மீராவின் பிடியில் இருந்து, அவசரமாய் விலகிக் கொள்ள முயன்றான்.

“ஹேய்.. மீரா..”

“ம்ஹூம்..!!” அவள் அவனை இன்னும் அதிகமாகவே இறுக்கினாள்.

“ப்ச்.. விடு..!!”

“ம்ஹூம்..!!”

“ப்ளீஸ் மீரா.. விடுன்றேல..??”

மீராவை வலுக்கட்டாயமாக உதறிக்கொண்டு அசோக் எழுந்தான். நடந்து சென்று பையனின் கையிலிருந்த தண்ணீர் ஜாடியை வாங்கிக் கொண்டான்.

“வே..வேற ஏதாவது..??” கேட்கும்போதே அவனின் பார்வை கட்டில் மீதிருந்த மீராவிடம் போய் வந்தது. அதை கவனித்து எரிச்சலான அசோக்,

“ப்ச்.. ஒன்னும் வேணாம்.. கதவை லாக் பண்ணிட்டு கெளம்பு.. காலைல வரை இந்தப் பக்கமே வராத..!!” என்றான் கடுப்பாக.

“ம்ம்.. புரியுது ஸார்.. வர்றேன்..!!” அவன் ஒரு நமுட்டு புன்னகையுடன் சொல்லிவிட்டு நகர முயல,

“ஹேய்..” அசோக் அவனை நிறுத்தினான்.

“என்ன ஸார்..??”

“நீ.. நீ நெனைக்கிற மாதிரிலாம் இங்க ஒன்னும் இல்ல.. பு..புரியுதா..??”

“ஹிஹி.. சரி ஸார்.. புரியுது.. ஹிஹி..!!”

அவன் நக்கலாக சிரித்துவிட்டு கிளம்பியதிலேயே, நம்பவில்லை என்பது அசோக்கிற்கு புரிந்து போனது. ‘ப்ச்..’ என்று சலிப்பானவன் தலையை சொறிந்து கொண்டான். கதவு சரியாக லாக் ஆகியிருக்கிறதா என, ஒருமுறை சென்று உறுதி செய்து கொண்டான். கையிலிருந்த ஜாடியை கொண்டு போய் டேபிளில் வைத்தான். வைத்துவிட்டு திரும்பியவன், சற்றே ஷாக் ஆனான். மீரா அவனுக்கு வெகு நெருக்கமாக நின்று கொண்டிருந்தாள். அவளுடைய உடல் போதையில் தள்ளாடிக் கொண்டிருக்க, முகத்தில் ஏதோ ஒரு அவஸ்தை..!!

3 Comments

  1. இந்த கதை ரொம்ப குழப்பமா இருக்கு !

  2. Mannichudnga ram story continue
    Panunga admin

  3. Mannichudnga ram story continue
    Panunga admin

Comments are closed.